Published:Updated:

வீதிக்கு வந்த சுந்தரம் மாஸ்டர் காதல் விவகாரம்

நம்ம மகனுக்கு உதவி செய்யுங்க..

வீதிக்கு வந்த சுந்தரம் மாஸ்டர் காதல் விவகாரம்

நம்ம மகனுக்கு உதவி செய்யுங்க..

Published:Updated:

ராஜூ சுந்தரம், பிரபுதேவா போன்ற​​வர்களைச் சுற்றி சுழன்றடித்த காதல் புயல், இப்போது அவர்களின் தந்தை டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் மீது மையம் கொண்டுள்ளது. 

பிரச்னையைக் கிளப்பி இருப்பவர் தாரா. இன்றைய டான்ஸ் மாஸ்டர்கள் பலருக்கு ஒரு காலத்தில் குரு. 'கோழி கூவுது’, 'வாலி’, 'குஷி’ என்று ஏராளமான படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராகப் பணி ஆற்றியவர். அவரைச் சந்தித்தோம்.

வீதிக்கு வந்த சுந்தரம் மாஸ்டர் காதல் விவகாரம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''1964-ல் 'சர்வர் சுந்தரம்’ படத்தில் தங்கப்பன் மாஸ்டரிடம், நானும் சுந்தரமும் வேலை பார்த்தோம். அதன்பிறகு, 'நீர்க்குமிழி’ படத்தில் டான்ஸ் மாஸ்டர் ஆனார் சுந்தரம். நான் அவருக்கு உதவியாளர். எங்கள் வீட்டில் எல்லோரிடம் நன்றாகப் பழகினார். அந்த நேரத்தில் அவர் வேலை பார்த்த அத்தனை படங்களிலும் நான் அவருக்கு உதவி செய்து இருக்கிறேன். இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினோம். நாங்கள் முஸ்லீம். அதனால் சுந்தரத்தை, 'ஜாவீத்’ என்றே கூப்பிடுவோம். எங்கள் அம்மா, உறவினர்கள் எல்லோருமே, எங்கள் இருவரையும் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினார்கள். சுந்தரம் தயங்கிக்கொண்டே இருந்​தார். ஒரு கட்டத்தில் தீவிரமாக வற்புறுத்தவே, 'கல்யாணம் ஆன வங்கன்னு தெரிஞ்சா, எனக்கும் தாராவுக்கும் சினி​மாவுல மார்க்கெட் அவுட்டாயிடும்’ என்று சொல்லிவிட்டார். 1970-ம் ஆண்டு என்னுடைய உறவினர்கள் மற்றும் அவருடைய நண்பர்கள் முன்னி​லையில், எங்கள் வீட்டிலேயே மோதிரம் மாற்றினார். என் கழுத்தில் கருகமணி கட்டினார். அப்போதே மிகவும் முன்னெச்சரிக்கையுடன், போட்டோ எடுக்காமல் தவிர்த்து விட்டார். அதன்பிறகு, மைலாப்பூரில் இருந்த அவரது வீட்டை ஆபீஸாக மாற்றிவிட்டு, வடபழனியில் எங்கள் வீட்டிலேயே தங்கினார். 1971-ல் எனக்கும் சுந்தரத்துக்கும் ஒரு ஆண் குழந்தை இசபெல்லா ஆஸ்பத்திரியில் பிறந்தது. தந்தை பெயர் போட வேண்டிய இடத்தில் சுந்தரம் என்று கையெழுத்துப் போட்டார். அவரது மைலாப்பூர் விலாசத்தை எழுதினார்.    

வீதிக்கு வந்த சுந்தரம் மாஸ்டர் காதல் விவகாரம்

அதன்பிறகு, மைசூர் பக்கத்தில் இருக்கும் கிராமத்துக்கு அடிக்கடி போய்வரத் தொடங்கினார். அது ஏன்

வீதிக்கு வந்த சுந்தரம் மாஸ்டர் காதல் விவகாரம்

என்பது அப்புறமாகத்தான் தெரிந்தது. அங்கேதான் பிரபுதேவாவின் அம்மாவைக் கல்யாணம் செய்துகொண்டார். இந்த விஷயம் எனக்குத் தெரிந்ததும் நான் சத்தம் போட்டேன். 'அப்படி எதுவும் நடக்கவே இல்லை...’ என்று மறுத்தார். பின்பு, 'சொந்தக்காரங்க வற்புறுத்தி என் தலையில் கட்டிட்டாங்க. அவள் எப்போதும் கிராமத்தில்தான் இருப்பாள். நான் இங்கேதான் இருப்பேன். எப்பவாவது ஒரு முறைதான் கிராமத்துக்குப் போவேன்’ என்று சமாளித்தார். இப்போது பிரச்னை என்றால், குடும்பநல கோர்ட்டுக்குப் போறாங்க. அந்தக் காலத்துல இந்த அளவுக்குத் தைரியம் கிடையாது. நான், அப்பா இல்லாத பெண் என்பதாலும், என்னால் அவரை எதிர்க்க முடியவில்லை.

அதன்பின், என்னைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாகப் விலக ஆரம்பித்தார். இடை​வெளிவிட்டு வந்தவர், அதன் பிறகு வருவதே இல்லை. எனக்கும் அவருக்கும் பிறந்த மகன் நைனி மன்சூர், அப்பா பெயரை வெளியே

வீதிக்கு வந்த சுந்தரம் மாஸ்டர் காதல் விவகாரம்

சொல்ல முடியாமல் பட்ட கஷ்டங்கள் ரொம்பவே அதிகம். மனஉளைச்சல் காரணமாக அவன் படிப்பையே நிறுத்திட்டான். எங்களைப் பற்றிய உண்மை அவருடைய மனைவிக்கும், மூன்று மகன்களுக்கும் நன்றாகவே தெரியும்.

'40 வருஷங்களா எனக்குப் பண உதவி செய்தார். திடீர்னு நிறுத்திட்டார் அதனாலதான் தாரா புகார் கொடுத்து இருக்கார்’னு ஒரு பத்திரிகையில எழுதி இருக்காங்க. அது கடைஞ்செடுத்த பொய். எனக்கோ, என் மகனுக்கோ சுந்தரம் மாஸ்டர் இதுவரை ஒரு பைசாகூட கொடுத்து உதவலை. நாங்களாகவே, எங்கள் சொந்தக் கையை ஊன்றிக் கர்ணம் போடுறோம். எனக்கு ஒண்ணும் வேண்டாம். நம்ம மகனுக்கு ஏதாவது உதவி செய்யுங்கன்னுதான் அவரைக் கெஞ்சுகிறேன். படிச்சிருந்தா, ஏதாவது வேலைக்குப் போயிடலாம். அது இல்லைங்கிறதால, ஏதாவது பிசினஸ் செய்ய உதவி செய்யுங்கன்னு கடந்த 10 வருஷங்களாவே கேட்டுட்டு இருக்கேன். இரக்கமே காட்டாமல் இருக்கார். டான்ஸர் யூனியன்ல அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்போது எல்லாம் நான் அருகில் போனாலே, கண்டுக்காமல் விலகிப் போய்விடுவார்.

##~##

அவரோட மகன் பிரபுதேவா ஃபேமஸா இருக்கார். இந்த நேரத்துல அவர் மேல புகார் கொடுத்தால், அவருடைய மற்றும் என்னுடைய குடும்பங்களுக்குக் கெட்ட பேர் ஏற்படும்னுதான் கவுன்சிலிங்குக்குக் கூப்பிட்டேன். ரெண்டு தடவை சென்னை விலாசத்துக்குக் கடிதம் அனுப்பியும் பதிலே இல்லை. அதுக்கு அப்புறம் மைசூர்ல இருக்கும் அவருடைய கல்யாண மண்டப விலாசத்துக்கு அனுப்பினேன். அதுக்கும் பதில் இல்லை. சினிமா விழா நடக்கும் எல்லா மேடையிலேயும் ஏறி, 'எனக்கு மூணு மகனுங்க...’ன்னு சொல்றார். அப்போ எனக்கும் அவருக்கும் பிறந்த மகன் யாருங்க..?'' என்று கண் கலங்கினார்.

சுந்தரம் மாஸ்டர் குடும்பத்துக்கு நெருக்கமான நண்பரான டைரக்டர் வேலு பிரபாகரனிடம் பேசினோம். ''சுந்தரம் மாஸ்டர் பேரன், பேத்தி எல்லாம் எடுத்துட்டார். இந்த வயசில் அவரைப்பத்தி பாலியல் புகார் கொடுப்பது நாகரிகம் கிடையாது. சினிமாவில் எத்தனையோ பேருக்குத் திசை மாறிய அனுபவங்கள் நடந்திருக்கிறது. அதுக்கு நானும் விதிவிலக்கு இல்லை. தாரா மாஸ்டர் 40 வருடங்கள் சும்மா இருந்துட்டு, இப்போ திடீர்னு புகார் தருவது பாசத்துக்காக அல்ல... பணத்துக்காகத்தான்'' என்றார்.

மாஸ்டர் என்ன சொல்றார்?

- எம். குணா,

படங்கள்: வி.செந்தில்குமார்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism