Published:Updated:

``கட்டுக்கட்டாகச் சிக்கிய பணம்; வேலூர் ஆர்.டி.ஓ மீது வழக்கு பதிவு!” - புரோக்கர்களுக்குக் கடிவாளம்

``கட்டுக்கட்டாகச் சிக்கிய பணம்; வேலூர் ஆர்.டி.ஓ மீது வழக்கு பதிவு!” - புரோக்கர்களுக்குக் கடிவாளம்
``கட்டுக்கட்டாகச் சிக்கிய பணம்; வேலூர் ஆர்.டி.ஓ மீது வழக்கு பதிவு!” - புரோக்கர்களுக்குக் கடிவாளம்

வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியதைத் தொடர்ந்து, ஆர்.டி.ஓ உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

``கட்டுக்கட்டாகச் சிக்கிய பணம்; வேலூர் ஆர்.டி.ஓ மீது வழக்கு பதிவு!” - புரோக்கர்களுக்குக் கடிவாளம்

வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சத்துவாச்சாரியில் செயல்பட்டுவருகிறது. இங்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கும், வாகன எண் பதிவுசெய்வதற்கும் லஞ்சம் கேட்பதாகவும், புரோக்கர்களுடன் அதிகாரிகள் கூட்டு சேர்ந்து செயல்பட்டுவருவதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு அடுக்கடுக்கான புகார்கள் குவிந்தன. இதையடுத்து, நேற்று முன்தினம் டி.எஸ்.பி சரவணக்குமார் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திடீரென வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நுழைந்து அதிரடியாகச் சோதனை நடத்தினர்.

இதில், கணக்கில் வராத ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 780 ரூபாய் மற்றும் ஓட்டுநர் உரிமம் உட்பட பல்வேறு சான்றுகள் பெற வந்திருந்தவர்களிடமிருந்து 60,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் (கிரேடு-1) ராஜசேகர், (கிரேடு-2) ஞானவேல், அலுவலக உதவியாளர் முரளி ஆகிய நான்கு பேர் மீது ஊழல் தடுப்பு பிரிவு (7) உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 8-க்கும் அதிகமான புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள்.

Vikatan