Published:Updated:

`தங்கச்சிய காதலிக்காதேன்னு சொன்னேன்; அவன் கேக்கல’ - கொலை செய்தவர் அதிர்ச்சி வாக்குமூலம்!

சி.ய.ஆனந்தகுமார்
`தங்கச்சிய காதலிக்காதேன்னு சொன்னேன்; அவன் கேக்கல’ - கொலை செய்தவர் அதிர்ச்சி வாக்குமூலம்!
`தங்கச்சிய காதலிக்காதேன்னு சொன்னேன்; அவன் கேக்கல’ - கொலை செய்தவர் அதிர்ச்சி வாக்குமூலம்!
`தங்கச்சிய காதலிக்காதேன்னு சொன்னேன்; அவன் கேக்கல’ - கொலை செய்தவர் அதிர்ச்சி வாக்குமூலம்!

திருச்சி, பாலக்கரை பகுதியில் உள்ள பசுமடத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட, அவரின் மகன் சத்திய நாராயணன், திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.என் நட்சத்திர ஹோட்டலில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவரின் வீட்டின் அருகில் குடியிருந்து வந்த சந்தியாகு என்பவரின் மகள் நிவேதாவுக்கும் சத்தியநாராயணாவுக்கும் பழக்கம் ஏற்படவே, நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் கடந்த சில மாதங்களாக மிக நெருக்கமாகக் காதலித்து வந்ததாகவும், வெளியே சென்று வந்ததாகவும், செல்போன் மற்றும் சமூக வலைதளங்களில் உரையாடி வந்ததாகவும் கூறப்படுகிறது.

`தங்கச்சிய காதலிக்காதேன்னு சொன்னேன்; அவன் கேக்கல’ - கொலை செய்தவர் அதிர்ச்சி வாக்குமூலம்!

அவர்களின் காதல் விவகாரம் நிவேதாவின் குடும்பத்துக்குத் தெரியவரவே, காதலுக்கு எதிர்ப்பு வந்தது. மேலும், நிவேதாவின் சகோதரர் வினோத் மிகவும் கடுமையாக எதிர்த்து வந்ததுடன், இருவரையும் அழைத்துப் பல முறை கண்டித்து உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், அதைப் பொருட்படுத்தாமல் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வினோத், நேற்று இரவு வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய சத்திய நாராயணனைச் சந்தித்து, உங்கள் காதல் விவகாரம் குறித்துப் பேச வேண்டும். உங்களின் காதலுக்கு நான் சம்மதிக்கிறேன் எனக் கூறி, பசுமடம் நாகம்மாள் கோயில் தெரு அருகில் உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு வைத்து சத்யநாராயணனும் வினோத்தும் மற்றும் நண்பர்களும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில், காதலை விட்டுவிடும்படி சத்தியநாராயணன் எச்சரித்துள்ளனர். அதற்கு அவர் உடன்பட மறுக்கவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த  வினோத் நண்பர்களுடன் சேர்ந்து பீர் பாட்டிலால் சத்தியநாராயணன் தலை மற்றும் உடலில் அடித்தும், குத்தியும் காயத்தை ஏற்படுத்தினர். தலையில் பலத்த காயம் ஏற்பட்ட சத்தியநாராயணனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவரவே, படுகாயம் அடைந்த சத்தியநாராயணனை அப்படியே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

படுகாயமடைந்த சத்தியநாராயணன் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நிலையில் கிடக்க, அங்கு வந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே சத்தியநாராயணன் உயிரிழந்தார். அதையடுத்து தகவலறிந்த பாலக்கரை காவல் ஆய்வாளர் ஆரோக்கியதாஸ் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் வினோத் கைது செய்யப்பட்டதாகவும் மற்ற இரண்டு நண்பர்கள் தலைவராக உள்ளதாகவும் அவர்களைத் தேடி வருவதாக போலீஸார் கூறுகிறார்கள்.

இந்நிலையில் வினோத், “என் தங்கச்சியை எங்க வீட்டுக்கு எதிரே குடியிருந்த சத்யநாராயணன் காதலித்த விவகாரம் தெரிந்ததும், அவர்களை எச்சரித்தேன். அவங்களும் நாங்களும் வெவ்வேறு சமூகம், அதனால் அவர்களின் காதலை ஏற்க முடியவில்லை. எவ்வளவோ எச்சரித்தும் கேட்கல. அதனால் அவனைத் தனியே அழைத்துச் சென்று தீர்த்துக்கட்டினோம்’ என வாக்குமூலம் கொடுக்கவே, போலீஸாரே அதிர்ந்து போயிருக்கிறார்கள். வெவ்வேறு சமூக காதலர்களுக்கு எதிராகச் சமீபகாலமாக அதிகரித்து வரும் ஆணவக் கொலைகள் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.