Published:Updated:

`மனைவியிடம் இருந்து எஸ்கேப்; திருநங்கையுடன் கல்யாணம்' - டிக்டாக் வீடியோவால் 3 வருடத்துக்குப் பிறகு சிக்கிய கணவர்!

மனைவியை விட்டு மாயமானவர் 3 ஆண்டுகளுக்குப் பின் டிக்டாக் வீடியோவால் மாட்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`மனைவியிடம் இருந்து எஸ்கேப்; திருநங்கையுடன் கல்யாணம்' - டிக்டாக் வீடியோவால் 3 வருடத்துக்குப் பிறகு சிக்கிய கணவர்!

விழுப்புரம் மாவட்டம் வழுதுரெட்டிப் பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரதா என்பவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் பூந்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற சுரேஷ் காணாமல் போனார். ஜெயப்பிரதாவும், அவரின் உறவினர்களும் பதறியடித்துக்கொண்டு விழுப்புரம் முழுக்க தேடியும் சுரேஷைக் கண்டுபிடிக்க முடியாததால், விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சுரேஷை தேடி வந்தனர்.

`மனைவியிடம் இருந்து எஸ்கேப்; திருநங்கையுடன் கல்யாணம்' - டிக்டாக் வீடியோவால் 3 வருடத்துக்குப் பிறகு சிக்கிய கணவர்!

இந்த நிலையில்தான், டிக்டாக் வீடியோக்களைப் பார்த்துக்கொண்டிருந்த ஜெயப்பிரதாவின் உறவினர் ஒருவர், திருநங்கை ஒருவருடன் சுரேஷ் ஜோடியாகவும், நெருக்கமாகவும் இருக்கும் வீடியோ பதிவிடப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இருந்தாலும் அவர் சுரேஷ்தானா என்பதை உறுதி செய்துகொள்வதற்காக அந்த டிக்டாக் வீடியோக்களை ஜெயப்பிரதாவிடம் காட்டியிருக்கிறார். அது தன் கணவர்தான் என்று உறுதி செய்த ஜெயப்பிரதா கண்ணீர்விட்டுக் கதறியுள்ளார்.

அதையடுத்து, இந்த வீடியோ குறித்து விழுப்புரம் தாலுகா காவல்நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்தார் ஜெயப்பிரதா. தொடர்ந்து விழுப்புரத்தில் இருந்த திருநங்கை அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் அந்த வீடியோவைக் காட்டிய காவல்துறையினர், வீடீயோவில் இருக்கும் திருநங்கை குறித்தும், தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து விசாரித்திருக்கின்றனர். அதில் அந்தத் திருநங்கை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்ததும், உடனே ஓசூர் விரைந்த காவல்துறையினர் அங்கு ஒரு வீட்டில் திருநங்கையுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருந்த சுரேஷை மீட்டு விழுப்புரம் அழைத்து வந்தனர்.

காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், ``அன்றைய தினம் வீட்டைவிட்டு வெளியேறிய நான் ஓசூரில் உள்ள தனியார் டிராக்டர் கம்பெனியில் வேலை செய்தேன். அப்போது அந்தப் பகுதியில் இருந்த  திருநங்கை ஒருவருடன் நட்பு ஏற்பட்டு அவரையே திருமணம் செய்துகொண்டேன். வாடகைக்குத் தனியாக வீடு ஒன்றை எடுத்து இருவரும் 3 ஆண்டுகளாக குடும்பம் நடத்திவந்தோம்” என்று கூறி அதிர வைத்திருக்கிறார் சுரேஷ். அதன்பிறகு உளவியல் ரீதியிலான அறிவுரைகளை அவருக்கு வழங்கிய காவல்துறையினர் மனைவி ஜெயப்பிரதா மற்றும் குடும்பத்தினரிடம் சுரேஷை ஒப்படைத்தனர்.