Published:Updated:

கொள்ளையர்கள் ஆந்திராவில் என்றால், திருடுவது என்ன அ.தி.மு.க-காரர்களா?

தி.நகரில் கொந்தளித்த ஸ்டாலின்

##~##

'தி.மு.க. தொண்டன் எப்படிப்பட்ட செயல் வீரனாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் பழக்கடை ஜெயராமன்’ என்று தென்சென்னை மாவட்டச் செயலாளரும், திருவல்லிக்கேணித் தொகுதி எம்.எல்.ஏ-வுமான ஜெ.அன்பழகனின் தந்தை குறித்து கருணாநிதி அடிக்கடி சிலாகிப்பார்! 

அவரைக் கௌரவிக்கும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் தி.மு.க. சார்பில் பழக்கடை ஜெயராமன் நினைவுப் பொதுக்கூட்டம் நடத்தப்படும். இந்த முறை அதை, பொதுக்குழுத் தீர்மான விளக்கக் கூட்டமாகவும் பயன்படுத்திக்கொண்டது தென் சென்னை தி.மு.க. கடந்த 22-ம் தேதி, தி.நகரில் நடந்த கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளர்... ஸ்டாலின்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஜெ.அன்பழகன் பேச்சில் நக்கல் அதிகம். ''விலைவாசியைக் குறைப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்களின் உண்மை முகத்தை மக்கள் இப்போதுதான் தெரிந்து கொள்கிறார்கள். எங்கு பார்த்தாலும்

கொள்ளையர்கள் ஆந்திராவில் என்றால், திருடுவது என்ன அ.தி.மு.க-காரர்களா?

கொலை, கொள்ளை, கற்பழிப்பு. இதுதான் இந்த ஆட்சியின் லட்சணம். ஊரெங்கும் கொலை நடக்கிறதே என்று சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால், அண்ணன் தம்பிக்குள் கொலை நடக்குது என்று பொய் சொல்கிறார்கள். பொதுமக்களுக்கு வங்கியில் பணம் போடவே பயம் வந்துவிட்டது. வாரம் ஒரு வங்கி என்று திட்டம் போட்டுக் கொள்ளை அடிக்கிறார்கள். எங்கள் ஆட்சியில் மின்வெட்டு... மின்வெட்டு என்று கூப்பாடு போட்டீர்களே... ஆட்சிக்கு வந்து எவ்வளவு நாள் ஆச்சு? என்னதான் செய்தீர்கள்? தினமும் 12 மணி நேரம் மின்வெட்டு ஆகிப்போச்சு.

அமைச்சர்களுக்கு என்ன வேலை செய்வது என்றே தெரியவில்லை. இன்று முதல் வரிசையில் இருப்பவர், அடுத்த நாள் நான்காவது வரிசையில் இருக்கிறார். இப்படியே போனால், அந்தக் கட்சியில் உள்ள 140 பேரும் விரைவில் முன்னாள் அமைச்சர்கள். எல்லா அமைச்சர்களும் காமெடி கேஸ்கள். அந்த அம்மா பிறந்தநாள் என்று சொல்லி, ஒருத்தர் மண்சோறு சாப்பிடுகிறார். வளர்மதி தீச்சட்டி வைத்துக்கொண்டு திரிகிறார். இதை எல்லாம் பேசினால், பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைப்பார்கள். ஆனால், சிறைக்குப் பயந்த ஆட்கள் நாங்கள் இல்லை. எங்கள் தலைவர் சிறையில் மின்விசிறி, சில்வர் தட்டு, பிரஷ் என எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார். பாவம், உடன் பிறவாத் தோழியின் கணவர். தி.மு.க-வை பழி வாங்கக் கொண்டுவந்த நில அபகரிப்புச் சட்டம், அவர்களையே பழி வாங்குகிறது.

கொள்ளையர்கள் ஆந்திராவில் என்றால், திருடுவது என்ன அ.தி.மு.க-காரர்களா?

பாராளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும் ஜெயிப்போம் என்று அந்த அம்மா சொல்கிறார். சொல்பவரைவிட சொல்லாதவர்கள்தான் வெற்றி பெறுவார்கள். முதலில் நீங்கள் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வெற்றி பெறு கிறீர்களா என்று பார்ப்போம். இன்னும் ஆறு மாதங்களில் உங்கள் கட்சியே இருக்காது. தளபதியின் ஆட்சி விரைவில் மலரும்'' என்று பொரிந்து தள்ளினார்.

இறுதியாகப் பேசினார் ஸ்டாலின். ''மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. 'வசதி வந்துடுச்சுபோல இருக்கு. அதான் பஸ்ல போறாங்க’ என்று பத்திரிகைகள் நகைச்சுவைத் துணுக்கு எழுதி இந்த ஆட்சியின் பஸ் கட்டண உயர்வை சாடுகின்றன. 'நான் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் கொள்ளையர்கள் எல்லோரும் ஆந்திராவுக்கு ஓடிவிட்டார்கள்’ என்று சொன்னார் இந்த அம்மா. அப்படி என்றால் இப்​போது திருடுவது என்ன அ.தி.மு.க-காரர்களா? மக்கள் நலனில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, தி.மு.க-வினர் மீது பொய் வழக்குகள் போடுவதில்தான் குறியாக இருக்கிறார்கள். என் மீதும் வீடு தொடர்பான ஒரு வழக்குப் போட்டார்கள். ஆனால், இன்று வரை கைது செய்யவில்லையே? இது பனங்காட்டு நரி. சலசலப்புக்கு அஞ்சாது. எஃப்.ஐ.ஆர். என்றால் 'ஃபர்ஸ்ட் இன்ஃபர்மேஷன் ரிப்போர்ட்’ என்று அர்த்தம். இந்த ஆட்சியில் அது 'ஃபிராடு இன்ஃபர்மேஷன் ரிப்போர்ட்’ ஆகிவிட்டது. ஆட்சிக்கு வர துணை நின்றவர்கள், நல்லது கெட்டதுகளில் அவரோடு பங்கு கொண்டவர்களை, கெட்டவர்கள்போல் சித்திரித்துப் பழிவாங்குகிறார். தன்னை ஊழலுக்கு அப்பாற்​​பட்டவர் போலக் காட்டி ஊரை ஏமாற்றப் பார்க்கிறார். இவரது வண்டவாளம் விரைவில் பெங்களூருவில் தெரியும்...'' என்று ஆவேசமாக முழங்க... விசில் ஒலி விண்ணைப் பிளந்தது.

உடல்நிலை பரிசோதனைக்காக ராமச்சந்திரா மருத்துவமனையில் அன்று காலைதான் அட்மிட் ஆகியிருந்தார் ஸ்டாலின். அதனால், ஸ்டாலின் வர மாட்டார் என்றே பலரும் நினைத்திருக்க, 'செக்கப்’ முடித்துத் திரும்பி வந்த ஸ்டாலின், கூட்டத்தில் கலந்து கொண்டதில்... தொண்டர்களுக்கு ஏக உற்சாகம்!

- தி.கோபிவிஜய், படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்