Published:Updated:

ஐ.பி.எல். சூதாட்டம்: முக்கிய தரகர் ஜிதேந்திர சிங் கைது

விகடன் விமர்சனக்குழு
ஐ.பி.எல். சூதாட்டம்: முக்கிய தரகர் ஜிதேந்திர சிங் கைது
ஐ.பி.எல். சூதாட்டம்: முக்கிய தரகர் ஜிதேந்திர சிங் கைது
ஐ.பி.எல். சூதாட்டம்: முக்கிய தரகர் ஜிதேந்திர சிங் கைது

புதுடெல்லி: ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய தரகரான ஜிட்டு என்ற ஜிதேந்திர சிங் கைது செய்யப்பட்டார்.

##~~##
ஐ.பி.எல். சூதாட்டம் சம்பந்தமாக ஸ்ரீசாந்த் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதில் ஸ்ரீசாந்த் உள்பட மூன்று வீரர்கள் ஜாமீனில் வந்துள்ள நிலையில், ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் முக்கிய தரகராக செயல்பட்டு வந்த ஜிட்டு என்ற ஜிதேந்திர சிங் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள ஜிதேந்திர சிங், நிழல் உலக தரகர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். ஐ.பி.எல். சூதாட்ட விவகாரம் வெளியில் வந்ததும் இவர் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில் இன்று டெல்லி போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.