Published:Updated:

துறவாடைக்குள் மறைந்த காதல் மனம்

துறவாடைக்குள் மறைந்த காதல் மனம்

பிரபஞ்சன், நற்றிணை பதிப்பகம், எண் 123 ஏ, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 5. விலை

துறவாடைக்குள் மறைந்த காதல் மனம்

130

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
துறவாடைக்குள் மறைந்த காதல் மனம்

பழந்தமிழ்ப் பாடல்களின் அழகியலைச் சொல்லி ரசனை கூட்டுவார்கள் பட்டி​மன்றப் பேச்சாளர்கள். சங்கப் பாடல்களின் பெருமையைச் சொல்லி தமிழர் வீரத்தை மீட்டெடுப்பார்கள் அரசியல் தலைவர்கள். அதே பாடல்களுக்குள் ஆண்டுக் கணக்குகளைக் கண்டுபிடித்து வரலாற்றுப் புத்தகங்களைப் குவிப்​பார்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே... அந்தக் கால மக்களின் வாழ்க்கையை அதில் இருந்து தோண்டி எடுப்பார்கள். 

இந்த நான்காவது நிலையில் இருப்பதால்தான், 'எட்டுத் தொகை மற்றும் பத்துப்பாட்டு ஆகிய பதினெட்டு நூல்களும் தமிழ் இலக்கியம் என்பதில் ஐயம் இல்லை. அவை தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளன. ஆனால், அவை தமிழர் இலக்கியமா என்பது பற்றி விசாரிக்க வேண்டும்’ என்று எழுத்தாளர் பிரபஞ்சனால் கேட்க முடிகிறது. தமிழனின் தொன்மம், கலாசாரம், பண்​பாடு, வீரம் ஆகியன பேசும் அகநானூறு, புறநானூறு முதல் மணிமேகலை வரையிலான இலக்கியங்களில் வரும் மனிதர்களின் உள்​மனங்கள் யோசித்திருக்கும் கேள்விகளை எத்தனையோ பல நூறு ஆண்டுகள் கழித்து பிரபஞ்சன் கேட்கிறார்.

பாடல்கள் புனைந்து வலம் வந்த பாணர் சமூகத்தின் முடிவில்தான் சங்ககாலப் புலவர்கள் வளர்ந்தார்கள் என்று சொல்லும் பிரபஞ்சன், இந்தப் புலமை வர்க்கம் அதிகார வர்க்கத்துக்கு அடிவருடியே பிழைத்ததை பல்வேறு பாடல்கள் மூலம் நிறுவுகிறார்.

##~##

'மொழி, அதிகாரத்தோடு வளர்ந்தது. அதிகார வர்க்கத்தின் ஆதிக்கத்துக்குச் சேவை செய்யவே மொழி வளர்க்கப்பட்டது. மொழியைப் பிழைப்பு ஊடகமாக எடுத்துக்கொண்ட பிழைப்பு வர்க்கம் உருவானது’ என்று சொல்லும் பிரபஞ்சன் அதிகாரத்தைக் கேள்வி கேட்ட புலவர்களையும் சொல்லத் தவறவில்லை. 'தமிழ்ப் புலவர்களில் கணிசமான புலவர்கள் ஆரோக்கிய​மானவர்கள். புலமை வர்க்கத்தில் மனித விரோதிகளும் இருந்தார்கள்’ என்ற வரிகள் அழுத்தமானவை.

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் வரிவரியாய் பல்வேறு கட்டுரைகளில் கட்டுடைக்கப்படுகின்றன. மணிமேகலையைத் தெய்வமாகப் பார்க்கிறார் சீத்தலைச் சாத்தனார். ஆனால், அவளை மனுஷியாகப் பார்க்கிறார் பிரபஞ்சன். ''மணிமேகலை, சூழலின் குழந்தை. அவளுக்காக அவள் ஒருபோதும் சிந்திக்க அனுமதிக்கப்படவில்லை. அவள் சுயஉணர்வோடு செய்தது உதயகுமரனைக் காத லித்தது மட்டுமே. அதுவும் ஒரு கணத்தில் அவள் தாயால் அழிக்கப்​பட்டுவிட்டது. உதய​குமரனுக்கு மணி​மேகலையின் உடம்பு மட்டும்தான் தெரிந்ததே தவிர, அவள் மனதைப் புரிந்து​கொள்ளும் தகுதி இல்லை. தலைக்குப் பின்னால் ஒளி​வட்டப் பெண்ணாக வடிவ​மைக்​கப்​பட்டாலும், மணி​மே கலை தரையோடு தன்னை ஒட்டவைத்துக்கொண்டுதான் இருக்கிறாள்’ என்பது புதிய பார்வையாய்ப் படர்கிறது. தமிழ் இலக்கியங்களின் புனிதங்களில் இருந்து புதிய புரிதல்களைநோக்கி நகர்த்தும் கட்டுரைகள் இவை.

திருவண்ணாமலையில் சண்முகம் என்ற யோகியைச் சந்தித்​ததும் அவரது பேட்டியும் இதில் இருக்கிறது. 'தனித்திருக்க விரும்பாதே. கூட்டத்தில் உன்னைக் கரைத்துக்கொள். நாக்கை வலிமைப்படுத்தி, அதிகாரத்தின் அருட் பார்வையில் இடம்பெற்று அறிஞர் குழாத்தில் இடம் பெறு. சொத்துக்களைப் பெருக்கிக்கொள். சுவிஸ் வங்கியில் போடு. சினிமா எடு அல்லது சினிமாவில் பங்கெடு. துரோகம் செய். பழிவாங்கு. எல்லாச் சட்டமீறல்களையும் சட்ட​பூர்வமாகச் செய். காட்டிக்கொடுத்தலை ஒரு கலையாகச் செய்’ என்று சொல்லி சமூகத்தை அம்பலப்​படுத்தும் சண்முகத்தை ஒருமுறையாவது போய்ப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை அனைவருக்கும் ஊட்டும்.

அடக்கப்பட்ட குரலை எதிரொலிப்பதே அறம். அதை பிரபஞ்சனிடம் இருந்து கேட்க முடிகிறது!

-  புத்தகன்