Published:Updated:

பங்களா... சிகரெட்... உயர்தர உணவு!

இத்தாலி கொலையாளிகளுக்குப் பலே கவனிப்பு

##~##

முத்திர வெளிகள் தமிழ் மீனவர்களின் பலி பீடங்களாகி விட்டன. சிங்கள சிப்பாய்​களால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் துயரம், பழகிப்போன பயங்கரவாதம். ஆனால், சமீபத்தில் கேரளக் கடல் பரப்பு அருகே இத்தாலியர்கள் நடத்திய வெறி ஆட்டமும், அதன்பிறகு நடந்துவரும் சம்பவங்களும் இந்திய இறையாண்மைக்கே சவால் விடுகின்றன! 

கேரள மாநிலம், கொல்லத்தில் உள்ள நீண்டகரா துறைமுகத்தில் இருந்து பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழக மற்றும் கேரள மீனவர்கள் 16 பேர் மீன் பிடிக்க ஆழ்கடலுக்குச் சென் றனர். கடந்த 15-ம் தேதி மாலை, 'என்ரிகா லக்ஸி’ என்ற இத்தாலிய வர்த்​தகக் கப்பலுக்கு அருகே இவர்களின் படகு சென்ற​போது, கப்பலில் இருந்து சரமாரியாக இவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்​பட்டது. இதில், அஜீஸ் பிங்கு, ஜெலஸ்டின் ஆகிய இரண்டு மீனவர்கள் இறந்தனர். இத்தாலியக் கப்பலில் இருந்து இந்திய மீனவர்களைச் சுட்ட மசிமிலியானோ லதோர் மற்றும் சல்வடோர் கிரோனே என்ற இருவரையும் காப்பாற்ற இத்தாலிய வெளியுறவுத் துறை துடித்தது.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பங்களா... சிகரெட்... உயர்தர உணவு!
பங்களா... சிகரெட்... உயர்தர உணவு!

கடந்த 22-ம் தேதி டெல்லி வந்த இத்தாலிய வெளியுறவுத்துறை துணை மந்திரி ஸ்டீபன் டி மிஸ்டுரா,

பங்களா... சிகரெட்... உயர்தர உணவு!

'இரு நாடுகளுக்கு இடையிலான உறவு முக்கியமானது. இந்த சம்பவத்தில் விசாரணை சரியாக நடக்க வேண்டும். சம்பவம் சர்வதேசக் கடல் பரப்பில் நடந்துள்ளது. அதனால், விசாரணை சர்வதேச சட்ட முறைப்​படி நடத்து​வதுதான் பொருத்தமாக இருக்கும்’ என்று மீண்டும் விடாப்பிடியாகப் பேசி இருக்கிறார். அதே நேரத்தில் இத்தாலிய அதி​காரிகள், கைது செய்யப்பட்ட இருவர் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்யக்கோரி கேரள உயர் நீதி​மன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கிடையே நம்மிடம் பேசிய கேரள மாநில பி.ஜே.பி. தலைவர் முரளிதரன், ''கொலை​காரர்கள் இத்தாலியர்கள் என்பதால், அவர்களுக்கு ஏராளமான சலுகைகள் அளிக்கப்​படுகின்றன. இருவரையும்தாமதமாகக் கைது செய்ததே ஒரு நாடகம்தான். இவர்கள் விசாரணை என்ற பெயரில் வசதியான பங்​களாவில் தங்க வைக்கப்பட்டு உள்ளார்கள். விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் சிகரெட் பிடிக்கிறார்கள். போலீஸ் வாகனங்களில் வி.ஐ.பி-கள் போல் முன் ஸீட்டில் அமர்ந்து செல்கின்றனர். இருவருக்கும் உயர்தர உணவு வழங்கப்படுகிறது. கேரளாவை ஆளும் காங்கிரஸ் யாரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக இத்தாலியக் கொலைகாரர்களுக்கு இவ்வளவு கரிசனம் காட்டுகிறது என்பது மக்களுக்குத் தெரியும்...'' என்றார் காட்டமாக!

நீதிமன்றம் நியாயம் பேசட்டும்!

- எஸ்.ஷக்தி,

படங்கள்: வி.ராஜேஷ், ரா.ராம்குமார்