Published:Updated:

'அருந்தவப் பன்றி’ சுப்பிரமணியபாரதி

ஜூ.வி. நூலகம்

'அருந்தவப் பன்றி’ சுப்பிரமணியபாரதி

ஜூ.வி. நூலகம்

Published:Updated:

பாரதி கிருஷ்ணகுமார், தி ரூட் வெளியீடு , 7/4 ஏழாவது தெரு, தசரதபுரம்,

சாலிகிராமம், சென்னை.93 விலை

'அருந்தவப் பன்றி’ சுப்பிரமணியபாரதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

200  

பாரதி வாழ்ந்ததே 39 ஆண்டுகள். அவர் எழுதியதில் சீனி.விசுவநாதன் தொகுத்தது மட்டும் பல நூறு பக்கங்களைத் தாண்டிப் போய்க்கொண்டே இருக்கிறது தொகுதி தொகுதியாக. எழுதும்போது திருப்தி அடையாமல் கிழித்துப் போட்டவை எத்தனையோ. ஆனால்,  பாரதி தன் வாழ்வில் ஆறு ஆண்டுகள்

'அருந்தவப் பன்றி’ சுப்பிரமணியபாரதி

எதையும் எழுதாமலே இருந்திருக்கிறார் என்கிற ஆச்சர்ய அதிர்ச்சியைக் கண்டு​பிடித்​துச் சொல்லி இருக்கிறார் பாரதி கிருஷ்​ணகுமார்.

'வாராய்! கவிதையாம் மணிப்பெயர்க் காதலி!

பன்னாள் பன்மதி ஆண்டுபல கழிந்தன.

நின்னருள் வதனம்நான் நேருறக் கண்டே!’

என, பாரதி எழுதிய இந்த மூன்று வரிகளுக்கு என்ன காரணம் இருக்க முடியும் என்ற கேள்வியில் பிறந்துள்ளது இந்தப் புத்தகம். எட்டயபுரம் வீதிகளில் காந்திமதி நாதன் கிண்டல் செய்த சிறுவயதுக் காலம் முதல் திருவல்லிக்​கேணி யானையின் காலால் மிதிபட்டது வரை, கவிதாதேவியின் காதலைத் துறக்காமல் வாழ்ந்த பாரதிக்கு, இடையில் ஒரு தொய்வு. தன் பதினான்காம் வயதில் ஏழு வயது செல்லம்மாளைத் திருமணம் முடித்த நேரத்தில் தந்தை நடத்தி வந்த பருத்தி மில் படுத்து விட்டது. அந்த சோகத்தில் அப்பா சின்னச்சாமி அய்யரும் இறந்து போனார். வாழ்க்கையை எப்படி நகர்த்துவது என்று தெரியாததால் தனது அத்தை வீடான காசிக்குச் சென்று அங்குள்ள மடத்தில் தங்கி இருக்கிறார் பாரதி. இப்படியே நான்கு ஆண்டுகள் கழிகின்றன. காசிக்கு வந்த எட்டயபுரம் மகாராஜா அழைப்பை ஏற்று மீண்டும் எட்டயபுரம் வந்து அரண்மனையில் இருக்கிறார். அதில் இரண்டு ஆண்டுகள் கழிகின்றன. 1898 - 1904 வரையிலான காலகட்டம்தான் 'அருந்தவப்பன்றி’யாக இருந்தேன் என்கிறார் பாரதி.

##~##

கொடிய சாபத்தால் பன்றி உருவம் பெறுகிறான் ஒரு முனிவன். தன்னுடைய தந்தைக்கு இப்படி ஓர் இழிவான சாபம் வந்துவிட்டதே என்று அவரை வெட்டி அழிக்க வருகிறான் மகன். அந்தப் பன்றி வாழ்க்கை பிடித்துப்போய் வாழத் தொடங்கிவிடுகிறார் முனிவர். மகாராஜாவுக்கு அருகில் தான் வாழ்ந்த வாழ்க்கையை 'அருந்தவப் பன்றி’ வாழ்க்கையாகச் சொல்கிறார் பாரதி. இப்படிச் சொல்வதற்கே ஒரு துணிச்சல் வேண்டும். மன்னரையே மறைமுகப் பாத்திரமாக வைத்து 'சின்னச் சங்கரன் கதை’ எழுதி​யவர்க்கு இந்தத் துணிச்சல் இருக்கத்தானே செய்யும்!

பாரதி இந்தக் காலகட்டத்தில் எழுதவில்லை என்ற வருத்தம் பாரதி கிருஷ்ணகுமாருக்கு அதிகமாகவே இருக்கிறது. ஆனால், பாரதி என்ற கலைஞன் உருப்பெற்றது இந்தக் காலத்தில்​தான். கட்டுப்பெட்டித் தனமான நெல்லைச் சிறுவனாக காசிக்குப் போன பாரதி, அங்கேதான் கிராப் வைத்தார். மீசை வைத்தார். இந்தியும் சமஸ்கிருதமும் படித்ததும் அங்குதான். அன்னி பெசன்ட் அம்மையாரைப் பார்த்ததும், பெண்கள் முன்​னேற்றம் குறித்த சிந்தனை வந்ததும் காசியிலேயே. எட்டயபுரம் அரண்மனை வந்ததும் பொதுமக்களின் பரிபாலனங்கள் எவ்வளவு தூரம் காமெடியான சம்பவங்களாக இருக்கின்றன என்பதை உணர்கிறார். கோழிச் சண்டையும் காம ரசம் ததும்பும் கூளப்பநாயக்கன் காதலுமாக சபை நடவடிக்கைகள் கழிவதைப் பார்க்கிறார். இந்த நேரத்தில் தமிழைவிட ஆங்கில இலக்கிய மோகம்தான் பாரதிக்கே அதிகம் இருந்தது. 'ஷெல்லிதாஸன்’ என்று புனைப்பெயர் வைத்துக்கொள்ளும் அளவுக்கு அது வளர்ந்தது. இந்த அனைத்து உருவகங்களும் உடைந்து எழும்போது அவன் பாரதியாக நமக்குக் கிடைக்கிறான்.

'அருந்தவப் பன்றி’யாக இருந்த காலத்தில் பாரதி எழுதவில்லையே என்று வருத்தப்படுவதைவிட ஒரு மகாகவி உருவான காலமாகவும் மகிழ்ச்சி அடையலாம்!

- புத்தகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism