Published:Updated:

டெல்லி: நடிகை சோனம் கபூர் வீட்டில் ரூ.1.41 கோடி நகை, பணம் திருட்டு!

சோனம் கபூர்

டெல்லியில் நடிகை சோனம் கபூர் இல்லத்தில் மர்ம நபர்கள் ரூ.1.7 கோடி மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை திருடியுள்ளனர்.

டெல்லி: நடிகை சோனம் கபூர் வீட்டில் ரூ.1.41 கோடி நகை, பணம் திருட்டு!

டெல்லியில் நடிகை சோனம் கபூர் இல்லத்தில் மர்ம நபர்கள் ரூ.1.7 கோடி மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை திருடியுள்ளனர்.

Published:Updated:
சோனம் கபூர்

நடிகை சோனம் கபூர் திருமணம் செய்து கொண்டு டெல்லியில் உள்ள அம்ரிதா மார்க்கில் இருக்கும் வீட்டில் தனது கணவர் ஆனந்த் அஹுஜாவுடன் வசித்து வருகிறார். தற்போது சோனம் கபூர் கர்ப்பமாக இருக்கிறார். இந்த நிலையில் டெல்லியில் உள்ள இவரின் வீட்டில் இருந்த ரூ. 1.41 கோடி மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். சோனம் கபூர் மாமியார் இத்திருட்டை கண்டுபிடித்தார். உடனே இது குறித்து போலீஸில் புகார் செய்துள்ளனர். உடனே போலீஸார் விரைந்து செயல்பட்டு இத்திருட்டு குறித்து விசாரித்து வருகின்றனர்.

சோனம் கபூர் வீட்டில் வேலை செய்யும் 25 வீட்டு வேலைக்காரர்கள், 8 டிரைவர்கள், தோட்ட பராமரிப்பாளர்கள் ஆகியோரிடமும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். திருட்டு நடந்த வீட்டில் இருந்து மோப்ப நாய்களின் துணையோடு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

சோனம் கபூர்
சோனம் கபூர்
Instagram Photo: @sonamkapoor

சோனம் கபூரின் அத்தை பிரியா அஹுஜா கடந்த மாதம் பிப்ரவரி மாதம் தனது வீட்டில் உள்ள பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை கணக்கிட்டுப்பார்த்த போதுதான் திருட்டு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே இத்திருட்டு குறித்து பிப்ரவரி 23-ம் தேதி போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் இத்திருட்டு குறித்து ரகசியமாக விசாரித்து வந்தனர். தற்போது இத்திருட்டு குறித்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடைசியாக பிரியா தனது நகைகளை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சோதனை செய்திருந்தார். அதன் பிறகு சோதனை செய்யவே இல்லை. வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். சோனம் கபூர் கணவருடன் தற்போது மும்பையில் வசித்து வருகின்றாஎ. டெல்லி வீட்டில் சோனம் கபூரின் அத்தை மற்றும் மாமனார் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோனம் கபூர் மாமனார் கம்பெனியில் 10 பேர் சேர்ந்து 27 கோடி ரூபாய் மோசடி செய்தது குறிப்பிடதக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism