கோவை மாவட்டம், பொள்ளாச்சி மாரியப்பன் பிள்ளை வீதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (76). இவரின் கணவர் சதாசிவம். இவர்களுக்கு மூன்ரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். சதாசிவம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதனால் நாகலட்சுமி மகனுடன் வசித்துவந்தார். மகன் செந்தில் பணிக்குச் சென்றிருந்தபோது, மகள் சாந்தா நாகலட்சுமியைப் பார்க்க வந்திருக்கிறார். அப்போது அவர் மயங்கியநிலையில் இருந்திருக்கிறார்.
அவர் வாயிலிருந்து ரத்தம் வடிந்திருந்தது. எவ்வளவு தட்டியும் எழவில்லை என்பதால், மருத்துவரை அழைத்து சோதனை நடத்தினர். அப்போது, `நாகலட்சுமி ஏற்கெனவே இறந்துவிட்டார்.’ என்று மருத்துவர் கூறினார். நாகலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த நகைகள் மாயமாகியிருந்தன.

இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில், அருகிலுள்ள 17 வயது ப்ளஸ் டூ மாணவி முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
முதலில் மறுத்த அந்த மாணவி, பிறகு நாகலட்சுமியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அந்த மாணவியும், அருகிலுள்ள இளைஞர் ஒருவரும் காதலித்துவருகின்றனர். சில மாதங்களில் திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில், அதற்காகத்தான் மூதாட்டியைக் கொலைசெய்து நகையைத் திருடியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

நாகலட்சுமியைக் கழுத்தை நெரித்துக் கொன்று 21 சவரன் நகையை மாணவி திருடியுள்ளார். மாணவியைக் கைதுசெய்த போலீஸார் நகையையும் மீட்டுக் கொடுத்துள்ளனர்.