Published:Updated:

பரிதியை இழுக்கத் திட்டமா?

அ.தி.மு.க. 'ரெய்டு' பாலிடிக்ஸ்

பரிதியை இழுக்கத் திட்டமா?

அ.தி.மு.க. 'ரெய்டு' பாலிடிக்ஸ்

Published:Updated:
##~##

'கருணாநிதியின் கட்டுப்​பாட்டில் கட்சி இல்லை’ என்று கூறி தி.மு.க-வில் பரபர திரியைப் பற்ற வைத்தவர் பரிதி இளம்வழுதி. ஆனாலும், கட்சியை விட்டு அவரை நீக்காமல் தி.மு.க தலைமை அமைதி காத்து வருகிறது. இந்த நிலையில், அவர் மீது பாய்ந்திருக்கிறது லஞ்சஒழிப்புத்துறை.

 சென்னை பாலவாக்கத்தில் இருக்கும் பரிதி இளம்வழுதியின் வீடு, திருவல்லிக்கேணியில் உள்ள அவரது தாயார் கண்ணம்மாளின் வீடு, ராயப்பேட்டையில் வசிக்கும் தம்பி இளம்​பரிதியின் வீடு, அயனாவரத்தில் உள்ள மகன் இளம்சுருதியின் வீடு, பட்டினப்பாக்கத்தில் பரிதிக்கு வேண்டப்பட்டவராக கருதப்படும் எலிசபெத் வீடு ஆகிய ஐந்து இடங்களிலும், கடந்த 8-ம் தேதி அதிகாலை நேரத்தில் புகுந்தது லஞ்ச ஒழிப்புப் படை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாலைக்குள் அனைத்து இடங்களிலும் ரெய்டு முடிந்து விட்டது. பரிதியின் வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்களையும் கணக்கில் வராத நகைகளையும் கைப்பற்றிய போலீஸார், விரைவில் அவர் மீது வரு மானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கலாம் என்று சொல்லப்படுகிறது.

பரிதியை இழுக்கத் திட்டமா?

இந்தச் சோதனை குறித்து லஞ்சஒழிப்புத் துறை அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, ''கடந்த தி.மு.க.

பரிதியை இழுக்கத் திட்டமா?

ஆட்சியில் செய்திமற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருந்த​போது பரிதி இளம்வழுதி அவர் பெயரிலும் அவரது குடும்பத்தினர் பெயரிலும் வரு மானத்துக்கு அதிகமாகச் சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பதாக எங்களுக்கு நிறையவே புகார்கள் வந்தன. இதுகுறித்து நாங்கள் நுணுக்கமான விசாரணையில் இறங்கியபோது, அமைச்சராக இருந்த காலகட்டத்தில் சுமார் 1 கோடியே 56 லட்சம் மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பதாகக் கண்டறிந்தோம். எனவே, ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன் படி அவர் மீது ஏற்கனவே வழக்குப் பதிவு செய்துள்ளோம். இந்த வழக்கில் சோதனை நடத்துவதும் அவசியம் என்பதால் திடீர் சோதனை நடத்தினோம். சில இடங்களில் எங்களுக்குத் தேவையான ஆவணங்கள் கிடைத்தன. அதுகுறித்து, அப்போதே அவரிடம் விரிவான விசாரணையும் நடத்தி விட்டோம். இதில் எந்தவிதமான அரசியல் குறுக்கீடும் கிடையாது. பரிதி இளம்வழுதியைக் கைது செய்வோமா என்பது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது'' என்று சஸ்பென்ஸ் வைத்தனர்.

பரிதி இளம்வழுதியைத் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் அவரது மகன் பரிதி இளம்​சுருதியிடம் பேசினோம்.

''காலையில 6 மணிக்கு எங்க வீட்டுக்கு வந்த போலீஸ்​காரங்க நாலு மணி நேரம்சோதனை நடத்தினாங்க. எங்க வீட்ல எதுவும் இல்லை. அதனால் வெறுங்கையோட திரும்பிட்​டாங்க. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதிதான். எங்க அப்பா இதை சட்டப்படி எதிர்கொள்வார். அந்தத் துணிவு எங்கள் ரத்தத்தில் பிறந்தது'' என்றார்.

பரிதியை பணிய வைத்து கட்சிக்குள் இழுப்பதற்காக ஆளும்கட்சி நடத்தும் அதிரடி என்று அவருக்கு நம்பிக்கை​யானவர்களே சொல்வதையும் நம்பாமல் இருக்க முடியவில்லை!

- தி.கோபிவிஜய்

படங்கள்: வி.செந்தில்குமார்,

சொ.பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism