Published:Updated:

770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு!

770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு!

770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு!

770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு!

Published:Updated:
770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு!
##~##

புராதனச் சின்னம் என்ற பெருமை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உண்டு. இந்தப் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டு, 'மதுரை மாநகராட்சி எல்லைக்குள் 15 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டடம் கட்டக் கூடாது’ என்று விதிமுறை வகுத்து இருக்கிறார்கள். ஆனால், சில அபார்ட்மென்ட் முதலைகள், பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து, கொடுக்க வேண்டிய தைக் கொடுத்ததால், 'மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் 9 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டடம் கட்டக் கூடாது’ என்று விதிமுறை தளர்த்தப்பட்டது.  இதிலும் அதிகாரிகள் குறுக்குச்சால் ஓட்டியதால் விதிமீறல் கட்டடங்களின் வளர்ச்சி எகிறியது. இதைத் தடுக்கத்தான் தனக்கே உரிய பாணியில் சாட்டையைச் சுழற்றி இருக்கிறார் மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு!

 விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் திருக்கோயில் திருமடங்கள் பிரிவின் மாநில அமைப்பாளர் சின்மயா சோமசுந்தரம் இதுபற்றி நம்மிடம் பேசினார். ''மீனாட்சி அம்மன் கோயில் ஹெரிட்டேஜ் சட்டத்தின் கீழ் வருகிறது. இந்த விதிகளின்படி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் எங்கிருந்து பார்த் தாலும், நான்கு கோபுரங்களும் தெளிவாகத் தெரிய வேண்டும். அப்படியானால் ஒரு கிலோ மீட்டர் எல்லைக்குள் வரும் கட்டங்கள் ஒன்பது மீட்டர் உயரத்துக்கு மேல் இருக்கக்கூடாது. ஹோட்டல்கள் மட்டும் பல கட்டடங்கள் உள்ளன. ஒன்பது மீட்டருக்குள் கட்டப்படும் கட்டடங்களின் கதவு கள், ஜன்னல்கள் உள்ளிட்டவை பண்பாடு மற்றும் கலை அம்சம் கொண்டவையாக அமைக்கப்பட வேண்டும். இதற்காக மத்திய அரசு மானியத்துடன் கூடிய கடனும் தருகிறது.

கோயிலின் தெற்கு கோபுர வாசலுக்கு எதிரே மார்வாடி ஒருவர் 80 அடி உயரக் கட்டடத்தைக் கட்டி இருக்கிறார். கிழக்கு கோபுர வாசலில் இருந்து சுமார் 20 அடி தூரத்தில் ஒரு ஜவுளிக்கடை இருக்கிறது. இந்தக் கடைக்குக் கீழே அண்டர் கிரவுண்ட் தோண்டியதால்தான், கோயிலின் கிழக்கு சுற்றுச்சுவர் சரிந்தது. கோயிலைச் சுற்றிலுமே இப்படிப்பட்ட அத்துமீறல்கள் அதிகம் உள்ளன. கைவினைப் பொருட்கள் விற்பதாகக் கூறிக்கொண்டு வெளிமாநிலத்தவர்கள், குறிப் பாக காஷ்மீரிகள் சிலர் கோ யிலைச் சுற்றி கடைகள் அமைத்து இருப்பதன் திட்டம் என்னவென்று போலீஸ்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

கடந்த ஆட்சியில் விதிமீறல் கட்டடங்களை அப்புறப்படுத்தும் பொறுப்பை போலீஸ் உதவிக் கமிஷனர் வெள்ளத்துரையிடம் ஒப்படைத்தார்கள். ஆனால் அவரை, முஸ்லிம் எம்.எல்.ஏ. ஒருவர் மேலிடத்தில் பிரஷர் கொடுத்து, மதுரையை விட்டு தூக்கினார் என்ற தகவல் உள்ளது.

முறையான நடவடிக்கை எடுத்தால் மதுரைக்குள் பிரபலமான லாட்ஜுகளும் ஜவுளிக் கடைகளும் இடிபடுவதில் இருந்து தப்ப முடியாது. விதிமுறை மீறிய கட்டடங்களுக்கு அனுமதி வாங்குவதற்காக  இந்தப் பிரமுகர்கள்  கடந்த 18 வருடங்களில் சுமார் 300 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளார்கள்.  இதில் தொடர்புடைய 29 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு, வழக்கும் தொடரப்பட்டது. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்களை சிறையில் அடைக்க வேண்டும்'' என்று கொந்தளித்தார்.

விதிமுறை மீறிய கட்டடங்கள் வரிசையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்குச் சொந்தமான கட்சி அலுவலகமும் இருக்கிறது. அந்தக் கட்சியின் மாநிலப் பொருளாளர் சுந்தர்ராஜன் எம்.எல்.ஏ-விடம் கேட்ட போது, ''நாட்டுல எத்தனையோ பிரச்னை இருக்கு. அதை எல்லாம் விட்டுட்டு இதுல எதுக்கு இவ்வளவு ஆர்வம் காட்டுறாங்கன்னு தெரியலை. அந்தக் கட்டடத்தை நாங்க கட்டலை. 1987-ல் விலைக்கு வாங்கினோம். நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள். சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி நடப்போம்'' என்றார்.

இந்த விவகாரங்கள் குறித்து மதுரை திட்டக் குழுமத்தின் தலைவரான கலெக்டர் சகாயத்திடம் கேட்டோம். ''கோயிலைச் சுற்றியுள்ள பிரமாண்டக் கட்டடங்களுக்காக அதிக அளவில் தண்ணீர் உறிஞ்சப்படுவதால்தான், பொற்றாமரைக் குளத்தில் தண்ணீரைத் தேக்க முடியவில்லை. அளவுக்கு அதிகமான தண்ணீரைப் பூமியில் இருந்து உறிஞ்சு வதால் நிலத்தின் அமைப்பில் மாறுதல் ஏற்பட்டு, கோயிலுக்குள் வெடிப்புகள் உண்டாகின்றன. இதை எல்லாம் தடுக்காவிட்டால், கோயிலுக்கு ஆபத்து வரலாம். நாங்கள் எடுத்த கணக்குப்படி மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றிலும் 770 கட்ட டங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டிருக்கின்றன. 60 நாட்களுக்குள் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்கச் சொல்லி இருக்கிறேன். அதோடு, அந்தக் கட்டங்களுக்கு அனுமதி கொடுத்த மாநகராட்சி அதிகாரிகளின் பட்டியலையும் கேட்டி ருக்கிறேன்'' என்றார்.

கோபுர தரிசனம் அனைவருக்கும் கிட்டட்டும்!

- குள.சண்முகசுந்தரம்                                            

  படங்கள்: கே.ராஜசேகரன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism