Published:Updated:

அடித்தள மக்கள் வரலாறு

ஜூ.வி. நூலகம்

அடித்தள மக்கள் வரலாறு

ஜூ.வி. நூலகம்

Published:Updated:

ஆ.சிவசுப்பிரமணியன் - பாவை பப்ளிகேஷன்ஸ், 142 ஜானி ஜான்கான் சாலை,

இராயப்பேட்டை, சென்னை.14. விலை

அடித்தள மக்கள் வரலாறு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

150

அடித்தள மக்கள் வரலாறு

''குறுக்கு விசாரணை செய்வதே வரலாற்று ஆசிரியனின் முக்கியமான தொழில்'' - என்று வரையறுத்தார் பிரெஞ்சு வரலாற்று ஆசிரியர் மார்க் பிளாங்க்ஸ். தமிழக அறிவுத் தளத்தில் அந்தப் பணியை தொடர்ச்சியாகவும் மிகச் சரியாகவும் செய்து வரும் ஒரு சிலரில் குறிப்பிடத்தக்கவர் பேரா சிரியர் ஆ.சிவசுப்பிரமணியன். அவர் எழுதியுள்ள இந்தக் கட்டுரைகளில் குறுக்கு விசாரணையோடு சரியான தீர்ப்புகளையும் வழங்கி இருக்கிறார். 

''இதுவரை எழுதப்பட்ட வரலாறுகள் அனைத்தும் ஆள்வோரின் வரலாறு ஆகும். ஆள்வோர் உருவாக்கிய தரவுகளின் அடிப்படையில் உருவாகும் வரலாறுகள், சாதாரண மக்களின் வரலாற்றை எடுத்து ரைப்பது இல்லை'' என்று குற்றம் சாட்டுவதோடு நின்று விடாமல், மக்களின் வரலாற்றைத் தோண்டி எடுத்து வந்து தருகிறார். ஆவணங்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், அகழ்வாராய்ச்சிகள் மட்டும்தான் ஆதாரங்களா? உயிரான ஆதாரங்கள் இருந்தால்?

காலங்காலமாகச் சொல்லப்பட்டு வரும் வாய்மொழிப் பாடல்கள் மூலமாகக் கிடைக்கும் வரலாறுகள் ஆச்சர்யமானதாகவும் அதிர்ச்சியாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கின்றன. அத்தகைய  வாய்மொழிப் பாடல்கள் தான் இவர் எழுதும் வரலாற்றுக்கு ஆதாரம்.

உலக அதிசயமாக இன்று சொல்லப் படுகிறது சீனப் பெருஞ்சுவர். ஆனால் அதைக் கட்டியவர்கள் பட்ட துன்பமும், செத்துப்போனவர் எண்ணிக்கையும் சொல்ல வரலாறு உண்டா?

'பெருஞ்சுவரே! பெருஞ்சுவரே! எங்கள்

பகைவர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்ற

முடியுமென்றால்

எங்கள் அன்புக்குரியவர்களை ஏன் காப்பாற்றக் கூடாது?’ - என்ற பாடல் மூலமாகத்தான் காதலன் வான்ஷிலாங்கைத் தேடி அவனது காதலி மென்ங்ஜியாஸ் வந்ததை அறிய முடிகிறது.

'மரக்காலுருண்ட பஞ்சம் மன்னரைத் தோற்ற பஞ்சம்

நாழியுருண்ட பஞ்சம் நாயகனைத் தோற்ற பஞ்சம்

ஆழாக்குருண்ட பஞ்சம் ஆளனைத் தோற்ற பஞ்சம்’ - என்று, இன்று எத்தனை பஞ்ச காலங்களைக் கடந்து வந்திருக்கிறோம் என்பதைச் சொல்கிறது நல்ல தங்காள் கதைப்பாட்டு.

'ஏட்ட இருக்க வச்சான்

இன்சுபெட்டரக் கட்டி வச்சான்

போலீசு சூபரென்டெ

போடச் சொன்னான் தோப்புக்கரணம்’ - என்ற பாட்டு மூலம், தென்தமிழகத்து ஜம்புலிங்கம் கதையை முழுமையாகத் தெரிய முடிகிறது.

##~##

கிராமப்புறங்களில் நிற்கும் சிறுதெய்வங்களின் இளம்பிராயப் பின்னணிக் கதை, பக்தியைவிட சோகத்தையே தூண்டுகிறது. 'கொலையில் உதித்த தெய்வங்கள்’ என்று இவர்களைச் சொல்கிறார். ராமநாதபுரம் பகுதியை ஆண்ட கிழவன் சேதுபதி இறந்தபோது அவரது 47 மனைவியரும் உடன்கட்டை ஏறியதை யேசுசபை பாதிரியாரின் கடிதம் சொல்கிறது. ஒரே ஒரு பெண் மட்டும் தீயில் குதிக்காமல் சிப்பாய் ஒருவனின் காலைப் பிடிக்க... அவன் காலை உதற... அந்த வேகத்தில் தீயினுள் விழுந்திருக்கிறாள். காவிரிப்பூம் பட்டினத்தில் வாழ்ந்த குறிப்பிட்ட சமூகப் பெண்களை சோழ மன்னன் பாலியல் தொந்தரவு செய்ததால்... அச்சமூகமே கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இடம் பெயர்ந்து போயிருக்கிறது. இப்படி... இது வரை மறைக்கப்பட்ட எழுதப்படாத வரலாறுகள் இதில் இருக்கிறது. வாய் மொழிக் கதைகளில் உண்மையும் கற்பனையும் பிரித்து அறிய வேண்டியது முக்கியமானது.

இன்றைக்கு மத்திய, மாநில அரசு களுக்குச் சவாலாக இருக்கும் இடிந்தகரை கிராமத்து மீனவ மக்கள், நடத்திய தூவிக் குத்தகை எதிர்ப்புப் போராட்டத்தின் முக்கியமான பதிவு இப்புத்தகத்தில் இருக்கிறது. சொந்த சமூகத்தையும் சமயத்தையுமே எதிர்த்து போராடி இருக்கிறார்கள் அந்த மக்கள். கடைசியில் சமூகமும் சமயமும் இவர்களுக்குப் பணிந்து போயிருக்கிறது என்பதைப் படிக்கும்போது, அவர்களின் இன்றைய போராட்டத்தின் வலிமையை உணர முடிகிறது.

சம்பவங்களைச் சொல்வதுடன் மக்கள் மன உணர்வையும் சொல்வதாக ஆ.சிவசுப்பிரமணியன் ஆய்வுகள் இருக்கின்றன!

புத்தகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism