Published:Updated:

உசுரே போகுது... உசுரே போகுது...

கரன்ட் கட் எரிச்சலில் அலறும் தமிழகம்

உசுரே போகுது... உசுரே போகுது...

கரன்ட் கட் எரிச்சலில் அலறும் தமிழகம்

Published:Updated:
##~##

'சென்னையில் இரண்டு மணி நேரம், மற்ற மாவட்டங்களில் நான்கு மணி நேரம் மின் தடை’- இது மார்ச் மாதம் வெளியான அரசு அறிவிப்பு. (இதைக் கேட்டதும் சென்னைவாசிகள் 'ஐயோ’ என அலறியதும், மற்ற மாவட்டத்துக் காரர்கள் 'ஆஹா... நாலே மணி நேரம்தானா...’ என சந்தோஷப்பட்டதும் தனிக்கதை). இப்போ உங்க ஊரில் எவ்வளவு நேரம் மின் வெட்டு பலரிடமும் கேட்டோம். அவர்கள் ஆதங்கம் அப்படியே... 

உசுரே போகுது... உசுரே போகுது...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அழகிரி, கல்லூரிப் பேராசிரியர், மேட்டூர்:  ''பீக் ஹவர்னுகூட பாக்காம காலை யில 6 டு 9 கட் பண்றாங்க. காலேஜ்ல 9 டு 12, 3 டு 6 கட் பண்றாங்க. இதனால லேப் பக்கமே பசங்க போக முடியலை. மிக்ஸி, ஃபேன், கிரைண்டர் எல்லாம் யாரு கேட்டா? இலவசங்கள் எல்லாத்தையும் நீங்களே வெச்சுக்குங்க. கரன்ட் மட்டும் கொடுங்க போதும்!''

கார்த்திக், குளிர்பானக்கடை உரிமையாளர், திருச்சி: ''பகல்ல பாதி நேரம் இல்லைங்க. பொழப்பு நாறினாலும் கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்னு வீட்டுக்குப் போறோம். எனக்கு ஒன்றரை வயசுப் பையன் இருக்கான். ராத்திரி ஃபேன் ஆஃப் ஆனதும் அழ ஆரம்பிச்சுடுறான். அவனை வைச்சுக்கிட்டு ராத்திரி பூராத் தூக்கம் வராம நாங்க படுற பாடு இருக்கே... அய்யய்யய்யோ!''

உசுரே போகுது... உசுரே போகுது...

'சூர்யா’ சுரேஷ்,  பட்டதாரி, சூரக் கோட்டை, தஞ்சாவூர்: ''பகல்ல எப்ப போகும்னு தெரியாத நிலையில மின் வெட்டு இருக்கறதால, கிட்டத்தட்ட இருண்ட காலத்துக்கே போயிட்டோம். அம்மா தாயே... வெளிச்சத்தைக் காட்டுங்க தாயி. பயமில்லாம நடமாடுவோம். நிம்மதியாத் தூங்குவோம்.''

ஸ்ரீதர், கல்லூரி மாணவர், பரமக்குடி:  ''பகல்ல 8-ல இருந்து 9 மணி நேரம் வரைக்கும் கரன்ட் இருக்காது. எங்க பகுதி முழுக்க நெசவுத்தொழில் கரன்ட் இல்லாம செத்தே போயிடுச்சு. பாத்திரம், பண்டம்  வித்துத்தான் சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம். இதே நிலை நீடிச்சா, பஞ்சம் வந்து செத்தே போவோம்.''

குணசேகரன், வழக்கறிஞர், வெள் ளாளப்பட்டி, கரூர்: ''காலையில 6-ல இருந்து 9, மதியம் 12-ல இருந்து 3. இது தவிர சாயந்திரம் 6 மணிக்குதான் ஆட் டத்தை ஆரம்பிப்பாங்க. முக்கால் மணி நேரம் முக்கால் மணி நேரமா நாலு தடவை நைட்டு 2 மணி வரைக்கும் கட் பண்ணிக்கிட்டே இருப்பாங்க. ஆக, நிம்மதியாத் தூங்கவிட மாட்டாங்க.''  

சித்ரா, அழகுக்கலை நிபுணர், திருப்பூர்: '' பகல்ல 12 டு 3 மட்டும்தான் கரன்ட் இருக்கு. அது எல்லாருக்குமே லன்ச் டைம். அப்புறம் கடைய மூடும் டயத்துலதான் கரன்ட் வருது. ஏற்கெனவே விலைவாசி எல்லாம் எகிறிப் போய்க் கிடக்கு. இப்போ கரன்ட்டும் கழுத்தை நெரிச்சா என்ன பண்றது? பேசாம கரன்ட்டை ஃபுல்லாவே கட் பண்ணிட்டு, ஆதிகால வாழ்க்கையை வாழச் சொல்லிடலாம்.''

உசுரே போகுது... உசுரே போகுது...

சூர்யா, 10-ம் வகுப்பு மாணவன், சங்கராம்பேட்டை, கும்பகோணம்: ''பகல்ல ரெண்டு மணி நேரம், நைட்ல ஒன்றரை மணி நேரம். அவ்வளவு நேரம்தான் எங்க ஊர்ல கரன்ட் இருக்கு. சமச்சீர் பிரச்னையால எல்லாப் புத்தகங்களும் எங்க கைக்கு வந்து சேர்ந்ததே போன மாசம்தான். எங்க ஸ்கூலுக்கு ஜெனரேட்டர் மே மாசம்தான் வரும் போலிருக்கு. பரீட்சை தேதியை தள்ளி வைக்கச் சொல்லுங்க சார்.''

சதீஷ்கண்ணன், அச்சுதமங்கலம், திருவாரூர்: ''பகல்ல மட்டுமே 10 மணி நேரம் போகுதுங்க... அதனால எத்தனை மணி நேரம் கரன்ட் இருக்குன்னு கேளுங்க. பவர்கட் புண்ணியத்துல யு.பி.எஸ், இன்வெர்ட்டர் வாங்கி விக்கிற பிசினஸ் ஆரம்பிச்சேன். ஒரு மாசத்துக்குள்ளயே செம பிக்-அப்.

உசுரே போகுது... உசுரே போகுது...

எக்கச்சக்கமா ஆர்டர் வருது. சப்ளைதான் கம்மியா இருக்கு. எல்லாத்தையும் நல்லதுக்குன்னு எடுத்துக்க வேண்டியதுதான்!''

மணிகண்டன், விவசாயி, திருவள்ளூர்: ''எட்டு மணி நேரம் கரன்ட் கட் ஆகுதுங்க. உடம்பு சரியில்லைன்னு எந்த மருத்துவ மனைக்குப் போனாலும் ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க முடியலை. நெல்லுக்குத் தண்ணி பாய்ச்ச முடியாமக் காய்ஞ்சுபோகுது. இப்படியே நிலைமை போனா, ரியல் எஸ்டேட்காரங்ககிட்ட நிலத்தை விக்கிற நிலைதான் வரும்.''  

மலர்க்கொடி, பொன்னேரி: ''எவ்வளவு நேரம்னு கணக்கே தெரியலைங்க. எப்போ கரன்ட் போயிடுமோன்னு பீதியில்தான் சட்னி அரைக்க வேண்டி இருக்கு. எந்த நேரம் எந்திரிச்சு வேலை பார்த்தாலும், சரியா ஆஃப் பண்ணி, வயித்தெரிச்சலைக் கொடுக்கிறாங்க. குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு நானும் வேலைக்குப் போறதுக்குள்ள உயிரே போகுதுங்க...''

சபரிசங்கரன் - தனியார் நிறுவன ஊழியர், வில்லாபுரம், மதுரை: ''மதுரை டவுன்லேயே பகல்ல ஒன்பது மணி நேரம் கட் ஆகுது. எப்ப போகும்னு தெரிஞ்சாக்கூட, அந்த டயத்துக்கு ஏத்த மாதிரி வேலைகளை பிரிச்சு செஞ்சுக்கலாம். ஆனா திடீர் திடீர்னு போறதால ஒரு வேலையையும் செய்ய முடியலைங்க.''

- க.நாகப்பன். க.ராஜீவ்காந்தி

படங்கள்: அ. ரஞ்சித், ந.வசந்தகுமார்,   ஜே.வெங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism