Published:Updated:

வாங்காத விருது... பார்க்காத வாரிசு!

மாஃபியாக்களால் கொல்லப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி

வாங்காத விருது... பார்க்காத வாரிசு!

மாஃபியாக்களால் கொல்லப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி

Published:Updated:
##~##

கொடூரமான மரணங்களில் இதுவும் ஒன்று! 

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கல்குவாரி மாஃபியாவைக் கையும் களவுமாகப் பிடித்த ஐ.பி.எஸ். அதிகாரி நரேந்திரகுமார் சிங், டிராக்டர் ஏற்றிக் கொல்லப்பட்டு இருப்பது அகில இந்தியாவையும் அதிர வைத்துள்ளது.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கல்குவாரிகள் நிறைந்த மாநிலம் மத்தியப் பிரதேசம். இதன் சம்பல் பகுதியில் உள்ள மொரேனா மாவட்டத்தின் காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளராக இருந்தார் நரேந்திரகுமார் சிங். 45 நாட்களுக்கு முன், பார்மேர் நகரப் பொறுப்பு ஏற்றுக்கொண்ட நரேந்திரகுமார், அந்தப் பகுதியில்

வாங்காத விருது... பார்க்காத வாரிசு!

கல்குவாரிகளில் இருந்து சட்ட விரோதமாகக் கற்களைக் கடத்திச் செல்பவர்களைத் தீவிரமாக ஒடுக்கத் தொடங்கினார். கடந்த 8-ம் தேதி ஹோலி அன்று நகரம் முழுவதும் கொண்டாட்டத்தில் மூழ்கிக்கிடந்த நேரத்தில், ஆக்ரா - மும்பை நெடுஞ்சாலையில் உள்ள ரன்சோலி கல்குவாரியில் இருந்து கற்கள் கடத்தப்படுவதாக நரேந்திரகுமாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே தனது ஜீப்பில், துப்பாக்கி ஏந்திய காவலருடன் ஸ்பாட்டுக்குக் கிளம்பினார்.

அடுத்து நடந்ததை கிராமவாசிகளே விவரிக்கிறார்கள்.

''கற்களை ஏற்றிச் சென்ற டிராக்டரை விரட்ட ஆரம்பித்தார் நரேந்திரகுமார். ஒரு கட்டத்தில் டிராக்டரை முந்திச் சென்றவர், ஜீப்பில் இருந்து இறங்கி, கைத்துப்பாக்கியுடன் வழிமறித்தார். டிரைவரின் சட்டையைப் பிடித்து கீழே இறக்க முயல, இருவருக்கும் கைகலப்பு நடந்தது. அதில் கால்தவறி நரேந்திரகுமார் கீழே விழ, உடனே டிராக்டரைக் கிளப்பினார் டிரைவர். அதன்  இடது பக்க முன் சக்கரம் நரேந்திரகுமார் மீது ஏறியதைப் பார்த்த பிறகும் நிறுத்தாமல் டிரைவர் ஆக்ஸிலேட்டரை அழுத்தி தப்பிக்க முயல, இடது புறமாக லாரி கவிழ்ந்து விட்டது. டிராக்டரின் அடியில் ரத்தவெள்ளத்தில் சிக்கிக்கிடந்த நரேந்திரகுமாரை மீட்டு 10 கி.மீ தொலைவில் உள்ள குவாலியர் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்வதற்குள் உயிர் பிரிந்துவிட்டது'' என்று அதிர்ச்சி குறையாமல் சொல்கிறார்கள்.

2009 பேட்ஜ் ஐ.பி.எஸ். அதிகாரி நரேந்திரகுமார். இவரது மனைவி மதுராணி திவேத்தியா ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி. மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் துணை கலெக்டராக இருக்கும் மதுவுக்கு, நரேந்திரகுமாருடன் கடந்த 2009 டிசம்பரில் திருமணம் முடிந்து, இப்போது மகப்பேறு விடுமுறையில் இருக்கிறார். இவர்தான், அரசு மரியாதை செலுத்தப்பட்ட நரேந்திரகுமாரின் உடலுக்குத் தீ மூட்டினார்.

வாங்காத விருது... பார்க்காத வாரிசு!

இந்தோர் மாவட்ட காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளரான ருடால்ஃப் அல்வரீஜ், ''தனது

வாங்காத விருது... பார்க்காத வாரிசு!

திருமணத்துக்குப் பிறகே ம.பி. மாநிலத்தின் கேடருக்கு மாறினார் நரேந்திர குமார். இதற்கு முன் அவர் பணியாற்றிய பீகாரில் அரசு அறிவித்த பல முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்திருந்தார். இதற்காக, முதல் அமைச்சர் நிதிஷ்குமார் அறி வித்து இருந்த விருதினைப் பெறுவதற்குள் அநியாயமாகப் பலியாகிவிட்டார். அதேபோல், இன்னும் சில தினங்களில் பிறக்க இருக்கும் அவரது குழந்தையைப் பார்க்கவும் அவருக்குக் கொடுத்து வைக்கவில்லை'' என்று வருந்தினார்.  

இதற்கிடையே, டிரைவரும், டிராக்டர் உரிமையாளருமான மனோஜ் குஜ்ஜர் கைது செய்யப்பட்டு, கொலைவழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

நீதி விசாரணைக்கு உத்தரவு போட்டிருக்கும் ம.பி-யின் முதல் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், ''அதிகாரியின் சாவுக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. அதே சமயம், நம் மாநிலத்தில் சட்ட விரோதமாக கல்குவாரிகள் இருப்பதாகச் சொல்வது மிகவும் தவறு. நாம் அதனை எதிர்த்து கடுமையான நடவடிக்கை எடுக்கிறோம் என்பதற்கு அங்கு சோதனைக்காகச் சென்ற ஐ.பி.எஸ். அதிகாரியின் மரணமே சாட்சி'' என்கிறார்.

மாநில காங்கிரஸின் மீடியா பொறுப்பாளரான மானக் அகர்வால், ''ம.பி. முதல்வர் உட்பட பி.ஜே.பி-யின் தலைவர்கள் பலரும் அங்கு சட்ட விரோதமாகக் குவாரிகள் நடத்துகின்றனர். இதுகுறித்து ம.பி. முதல்வருக்குப் பல முறை கோரிக்கை விடுத்தும், அவர் காதில் போட்டுக்கொள்ளாத காரணம் என்ன?'' என்று கேள்வி எழுப்புகிறார்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு, கடந்த 10-ம் தேதி பண்ணா மாவட்டத்தின் அஜய்கர் காவல் நிலைய எல்லையில், நடவடிக்கை எடுக்கச் சென்ற துணை கலெக்டர் மற்றும் டி.எஸ்.பி. மீது மணல் மாஃபியாக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டியுள்ளனர்.

எங்கே போகிறது ம.பி.?

- ஆர்.ஷஃபி முன்னா

படங்கள்: ராஜீவ் குப்தா,

முகம்மது உமர் குரைஷி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism