Published:Updated:

காணாமல் போனாரா... இறந்து போனாரா?

சர்ச்சையில் முன்னாள் எம்.பி-யின் மகன்

காணாமல் போனாரா... இறந்து போனாரா?

சர்ச்சையில் முன்னாள் எம்.பி-யின் மகன்

Published:Updated:
##~##

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. காசிநாத துரை, ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் வாரிசு​களில் ஒருவர். இவரது மகன் கதிர்நாயகம் மின்வாரியத்தில் மேற்பார்​வையாளராக பணியாற்றி வந்தார். 2008-ல் விருப்ப ஓய்வு பெற்ற அவர், தன் மாமியார் ஊரான ராஜபாளையம் சேத்தூரில் செட்டில் ஆனார். கடந்த 6.4.10 அன்று படியில் இருந்து தவறி விழுந்து காயம் அடைந்ததால் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு மாயமாகிப் போனவரை உடனே கண்டுபிடிக்காததால், இப்போது பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது மதுரை போலீஸ். 

கதிர்நாயகத்தின் மனைவி சண்முகசுந்​தரியைச் சந்தித்தோம். 'மாமனார் காசிநாத துரை இறந்தபிறகு எங்க குடும்பம் நலிஞ்சுப் போச்சு. அதனாலதான் என் கணவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். குடிக்கிறதுக்குத் தண்ணி எடுக்கப்போன நேரத்துல திடீர்னு காணாமப் போயிட்டார். கொஞ்சம் மனநிலைசரியில்லாத மனுஷனாச்சேன்னு பதறிப்​போய் ஆஸ்பத்திரி முழுக்கத் தேடியும் கிடைக்​கலை. உடனே மதிச்சியம் ஸ்டேஷன்ல புகார் கொடுத்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காணாமல் போனாரா... இறந்து போனாரா?

போலீஸார் ரொம்பவும் மெத்தனமா இருந்ததால, 2011 ஆகஸ்ட் மாசம் மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு போட்டோம். 'உடனே அவரைக் கண்டுபிடிச்சி ஆஜர்படுத்துங்க’ன்னு மதிச்சியம்

காணாமல் போனாரா... இறந்து போனாரா?

போலீஸாருக்கு கோர்ட் உத்தரவு போட்டுச்சு. அப்புறமும் நட​வடிக்கை இல்லை. மதுரை கமிஷனர் கண்ணப்பனுக்கு நீதிபதி உத்தரவு போட்டதுக்கு அப்புறம்தான் என் புருஷனைத் தேட ஆரம்பிச்சாங்க. உதவி கமிஷனர் வெள்ளத்துரை தலைமையில் ஒரு டீம் ஊரெல்லாம் தேடிட்டு கடைசியில, 'உங்க புருஷன் செத்துப்போயிட்டார்மா. இந்தப் போட்டோவில் இருக்கிறது அவரான்னு பாருங்க’ என்று காட்டினார்கள். அதிர்ச்சியில நான் மயங்கி விழுந்திட்டேன். பதட்டத்துல இருந்த என் பசங்ககிட்ட,

காணாமல் போனாரா... இறந்து போனாரா?

'எங்கள் தந்தை இறந்துவிட்டதால் இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம்’னு எழுதி வாங்கிட்டாங்க போலீஸ்காரங்க. ஈமக்கிரியை செய்சு, நானும் பூவு.. பொட்டெல்லாம் அழிச்சிட்டு...' என்று கதறி அழுதவர் சிறிது நேரம் கழித்து, 'பின்னால்தான் தெரிஞ்சது போலீஸ் சொன்னது பொய்யின்னு. இப்பவும்கூட அவரை திருச்செந்தூர்ல பார்த்தோம், ராமேஸ்வரத்துல பார்த்தோம்னு தகவல் வருது. அவர் உயிரோடத்தான் இருப்பார்னு என் உள் மனசும் சொல்லுது' என்றார் வேதனை பொங்க.

அவரைத் தொடர்ந்து பேசிய வழக்​கறிஞர் சோமசுந்தரம், 'இதெல்லாம் போலீ​ஸோட திருவிளையாடல் சார். அந்த போட்டோவில் இருக்கும் நபர், 16.4.10 அன்று பீ.பி.குளம் காட்டுப்பிள்ளையார் கோவில் பஸ் ஸ்டாப்பில் இறந்து கிடந்ததாகவும், தல்லாகுளம் போலீஸார் இது தொடர்பாக வழக்குப் பதிஞ்சி விசாரிச்சதாகவும், யாருன்னு கண்டுபிடிக்க முடியாமல் மூன்று நாளிலேயே பிணத்தைப் புதைச்சிட்டதாகவும் சொல்றாங்க. இந்த வழக்குல நிறைய சந்தேகங்கள் இருக்குது.

காணாமல் போனாரா... இறந்து போனாரா?

கதிர்நாயகத்துக்கு கொஞ்சம் வழுக்கை. காது லேசா மடங்கியிருக்கும். நெஞ்சுக்குக் கீழே பெரிய மச்சம் இருக்கும். இது எதுவுமே போலீஸ் காட்டுற போட்டோவுல இல்லை. 174 செக்ஷன் போட்டா இன்ஸ்பெக்டர்தான் பிரேத விசாரணை நடத்தணும். ஆனா நடக்கலை. உடலைப் புதைக்கும் முன்பு, இறந்தவரோட கைரேகையைப் பதிவு செஞ்சி, அவர் அணிந்திருந்த உடைகளைப் பத்திரப்படுத்தி இருக்கணும். அதையும் செய்யலை. பக்கத்து ஸ்டேஷன்ல மேன் மிஸ்ஸிங் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தும், அவரா இவர்னு கன்ஃபார்ம் பண்ணி இருக்​கணும் அதையும் செய்யலை. தல்லாகுளம் போலீஸார் இறந்தவரின் வயது 52 என்று பதிவு செஞ்சிருக்காங்க. போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டரும் வயது 53 என்றுதான் போட்டிருக்கிறார். ஆனால், மாயமானபோது கதிர்நாயகத்தின் வயது 62.

ஒரு மனிதன் இறந்துகிடந்தால், மிருகங்​களைப் புதைப்பது போல புதைப்பதற்கு எதற்கு காவல் துறை? அந்த உடலைப் பாதுகாத்து வைத்து, அவர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டாமா? கணவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று தெரியாத வேதனையில் தவிக்கும் அந்தம்மாவுக்கு என்ன பதில்?' என்று கேட்டார் கோபமாக.

இதுபற்றி உதவி கமிஷனர் வெள்ளத்துரை​யிடம் கேட்டோம். 'ஆரம்பத்தில் கோயில், கோயிலாகத் தேடினோம். பிறகு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள முதியோர் இல்லங்களில் தேடினோம். கிடைக்கவில்லை. அப்போதுதான், கதிர்நாயகம் தனது வங்கிக் கணக்கில் இருந்து பென்சன் பணத்தை எடுக்கவே இல்லை என்பது தெரியவந்தது. காணாமல் போன அன்று அவரிடம் பணமே கிடையாது. இவ்வளவு காலம் அவர் உயிரோடு இருந்தால், கண்டிப்பாக பேங்கில் இருந்து பணத்தை எடுத்திருப்பார் என்பதால், இறந்து அடையாளம் காணப்படாத பிரேதங்​களின் புகைப்படத்தைத் தேடத் தொடங்கினோம். அப்போதுதான், காணாமல் போன ஒரு வாரத்துக்குள்ளேயே அவர் தல்லாகுளம் காவல் நிலைய எல்லைக்குள், இறந்திருப்பது தெரியவந்தது. உடனே, அந்தப் போட்டோவை கதிர்நாயகத்தின் மனைவி, பிள்ளைகளிடம் காட்டினோம். அவர்களும் ஒப்புக்​கொண்டு, காரியமே செய்து​விட்டார்கள். ஆனால், வழக்கறிஞர் அவர்களைக் குழப்பிவிட்டார் என்று நினைக்கிறேன். கோர்ட்டுக்கு வந்த அந்தம்மா, 'அது என் கணவர்தானா?’ என்று சந்தேகமாக இருக்கிறது என்று சொல்லிவிட்டார்.

மேன் மிஸ்ஸிங் வழக்குப் பதிந்ததிலும், அனாதைப் பிணத்தின் கைரேகை பதியாமல் விட்டதிலும் காவல் துறை தவறு செய்திருப்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், 'ஆஸ்பத்திரியில் ஏன் பிணத்தைப் பாதுகாத்து வைக்கவில்லை?’ என்று கேட்டபதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது. கோர்ட்டில் பிரச்னை இருப்பதால் விரிவாகப் பேச விரும்பவில்லை. கதிர்நாயகத்தின் புகைப்படத்தையும், எங்களிடம் உள்ள பிரேதத்தின் புகைப்படத்தையும் தடய அறிவியல் சோதனைக்காக சென்னைக்கு அனுப்பியுள்ளது கோர்ட். அதன் முடிவு வரும்போது உண்மை தெரியும்'' என்றார். பார்க்கலாம்!

- கே.கே.மகேஷ், எம்.கார்த்தி

படங்கள்: பா.காளிமுத்து, ஆர்.எம். முத்துராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism