Published:Updated:

விதைகள்

விதைகள்

விதைகள்

விதைகள்

Published:Updated:

பூவுலகின் நண்பர்கள், ஏ2 அலங்கார் பிளாசா, 425 கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை,

சென்னை - 10, விலை

விதைகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

70/-

விதைகள்

வளர்ச்சி மற்றும் அறிவியலின் பெயரால் விவசாயிகள் வெறும் கூலித்தொழி லாளிகளாகவும், நிலங்கள் வர்த்தகப் பண் டங்களாகவும் மாற்றப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒவ்வொரு விவசாயியும் சுயமாகவே ஒரு சிந்தனையாளன்தான்... விஞ்ஞானிதான்.

ஆனால், பசுமைப்புரட்சி என்ற பெயரில் கொண்டு வந்த திட்டங்கள் விளை நிலங்களைக் கட்டாந்தரையாக மாற்றிவிட்டன என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

புதிய புதிய பெயர்கள், பாக்கெட்டுகள், டின்களை எடுத்து வந்து நிலங்களை வளப்படுத்துவதாக கடந்த 40 ஆண்டுகளாகப் போட்ட எந்தத் திட்டமும் பெரிய பயனைத் தரவில்லை. உணவுப் பொருளின் தேவை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. நிலம் மற்றும் விளைபொருளின் தரம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. இந்த இரண்டுக்கும் மத்தியில் வர்த்தகம் செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் மட்டும் செழித்துக்கொண்டே போகின்றன. இந்த ஒழுங்கீனமான வேளாண் கொள்கையைக் கேள்வி கேட்க வந்திருக்கிறது 'விதைகள்’!

##~##

''எந்த உணவுப் பொருளை எந்த முறையால் உருவாக்க வேண்டும் என்பதை விவசாயி தீர்மானிப் பது இல்லை. வியாபாரமே அதைச் செய்கிறது'' என்று சொல்லும் இந்தப் புத்தகம், உலகத்தின் தானிய வியாபாரத்தை மிகச்சில பன்னாட்டு நிறுவனங்களே கட்டுக்குள் வைத்துள்ளன என்று பட்டியல் போடுகிறது. இந்த நிறுவனங்களை யார் நடத்துகிறார்கள், இதன் வர்த்தக மதிப்பு என்ன கணக்குகள் மலைப்பைத் தருகின்றன. பெரும்பாலும் மருந்து மற்றும் கெமிக்கல் நிறுவனங்களே விதை வர்த்தகத்தில் இறங்கி உள்ளன. இவர்கள் எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு நம்முடைய கிராமத்தில் என்ன பயிரிட வேண்டும், யார் எதைச் சாப்பிட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறார்கள். உணவுப் பொருட்களின் வகைகள் குறைந்ததும் தரம் மோசமானதும் இதனால்தான்.

''பழங்கால மனிதனின் உணவில் 2,500 வகையான காட்டுத் தாவரங்கள் இருந்தன. 500க்கும் மேற்பட்ட காய் வகைகள் உபயோகிக்கப்பட்டன. ஆனால், இன்று மனிதனின் உணவுச்சத்து முழுவதுமே 30 தாவர வகைகளில் மட்டுமே கிடைக்கின்றன. அதிலும் கோதுமை, அரிசி, சோளம் போன்ற மூன்று பயிர்கள் 75 சதவிகிதமாக உணவுப் பயன்பாட்டில் உள்ளது. காய்கறிகள் 20 வகைகள்தான் உள்ளன'' என்கிறது இந்தக் கட்டுரைகள். இத்தனை உணவு வகைகளைக் கொன்ற பூச்சிக்கொல்லி எது? நம்முடைய பண்பாட்டு உணவுகளை நாமே 'அநா கரிகமாக’ நினைத்து நவீனத் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறோமே... இது எங்கே போய் நிற்கும்? மண்ணுக்கு ஏற்ப வளரும் காய்கறிகளை விடுத்து, பல கோடி செலவில் ஆராய்ச்சி செய்து கண்டு பிடிக்கப்பட்ட விதைகளின் பின்னால் போனோமே... அதனால் என்ன பயன்?

வயிறு இருப்பவன் மனதில் எல்லாம் கேள்வி விதைகளை நடுகிறது இந்தப் புத்தகம்!

- புத்தகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism