Published:Updated:

தாய் மொழியே வணக்கம்!

தமிழ்ப் பெருமை பேசிய மயில்சாமி அண்ணாதுரை

தாய் மொழியே வணக்கம்!

தமிழ்ப் பெருமை பேசிய மயில்சாமி அண்ணாதுரை

Published:Updated:
##~##

தாய் மொழியான தமிழின் பெருமையை உரக்​கச் சொல்லும் விழாவாக,கடந்த சனிக்கிழமை நடந்தது சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் 'தமிழ்நாடு கையேடு 2012’ நூல் வெளியீட்டு விழா! 

இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வு எழுதுவதற்கு தமிழ்நாட்டு மாணவர்களைத் தயாரித்து அனுப்பும் முக்கியமான நிறுவனங்களில் ஒன்று சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொதுஅறிவுப் புத்தகமான தமிழ்நாடு கையேட்டை வெளியிட்டு சங்கர் பேசுகையில், ''நல்லாக்​கவுண்டன்பாளையம் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். ஊத்தங்கரையில் எட்டாம் வகுப்பு படித்தபோது, ஐந்து பாடங்களிலும் சேர்த்து நான் மொத்தமாகவே 32 மதிப்பெண்கள்தான் எடுத்தேன். 'நீ படிக்க லாயக்கு இல்லை’ என்று கேலி செய்யப்பட்டேன். அடுத்துப் படித்தது நல்ல சமுத்திரம் பள்ளியில்.  வகுப்பின் முதல் நாளே, ஆங்கில ஆசிரியர் புத்தகத்தை எடுத்துப் படிக்கச் சொன்னார். நெற்றியில் வழியும் வியர்வையைத் துடைத்துக் கொண்டு பதற்றத்தோடும் பயத்தோடும் நான் படித்து முடித்ததும், 'நன்றாகப் படித்தாய்’ என்று, சாக்லேட் பரிசு கொடுத்தார். எனக்கான முதல் பாராட்டு அதுதான். அந்தப் பாராட்டுதான், 10-ம் வகுப்பில் என்னை முதல் ரேங்க் எடுக்கவைத்தது.

தாய் மொழியே வணக்கம்!

கல்லூரிப் படிப்பு முடிந்ததும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்பினேன். ஆனால், 'சீக்கிரம் வேலைக்குப் போ’ என்று அப்பா அழுத்தம் கொடுத்தார். வறு மையின் கொடுமையால் முறையாகத் தேர்வுக்குத் தயாராக முடியாமல், நான்கு முறை ஐ.ஏ.எஸ் தேர்வில் தோல்விகளை மட்டுமே சந்தித்தேன். எனக்குக் கிடைத்த நான்கு வருட அனுபவத்தைக்கொண்டு, எனக்குக் கிடைக்காத ஐ.ஏ.எஸ். பதவியை எல்லோருக்கும் கொடுக்க ஆசைப்பட்டேன். அதன் விளைவாகத் தோன்றியதுதான் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி. 2004-ல் 36 மாணவர்களோடு ஆரம்பிக்கப்பட்ட அகாடமியில் இப்போது 1,200 மாணவர்கள் படிக்​கிறார்கள். என் சகோதரி உட்பட 200 மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்., என்று உயர் பதவிகளில் இருக்கிறார்கள். படிக்கச் சிரமப்படும் தமிழக மாணவர்களின் கவலையைப் போக்குவதற்காக,  'ஃபோர்ஸ் 27’ என்ற திட்டத்தைத் தீட்டி உள்ளோம். வறுமையில் வாடும் திறமையுள்ள 27 இளைஞர்களுக்கு வாய்ப்புத் தந்து, ஐ.ஏ.எஸ். படிக்க உதவி செய்து வருகிறோம். அனைத்து மாணவர்களுக்கும் உணவு, தங்கும் இடம், புத்தகங்கள், உபகரணங்கள் இலவசமாகத் தரப்படுகிறது. நம்பிக்கையுடன் வருபவர்கள் வெற்றி பெறலாம்'' என்று நம்பிக்கை வைட்டமின்களை வழங்கினார்.

தாய் மொழியே வணக்கம்!

'ஃபோர்ஸ் 27’ திட்டத்தின் மூலமாகத் தேர்ந்து எடுக்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் முழுப்படிப்புச் செலவையும் மதுரை அப்பு ஹோட்டல் உரிமையாளர் சந்திரசேகர் வழங்குகிறார். ஏழை மாணவர்கள், முதல்தலைமுறையில் படிக்க வந்திருப்பவர்கள், 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவான வருட வருமானம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்தச் சலுகை கிடைக்கும் என்று அறிவித்துள்ளார்கள்.

அடுத்துப் பேசிய மயில்சாமி அன்ணாதுரை, ''தாய்மொழிக் கல்வியால் சாதிக்க முடியாதது ஒன்று​மே இல்லை. சுயசிந்தனையை வளர்ப்பது தாய்மொழிதான். நான் தமிழில் படித்ததால்தான் அறிவியல் விஷயங்களை எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது. தாய்மொழிக் கல்வி பலவீனம் அல்ல... பலம். சந்திராயன் 1 செயற்கைக்கோள் திட்டத்தில் என்னுடன் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்கள் பணிபுரிந்தனர். அவர்​களுடன் தொடர்புகொள்ளும் மொழியாக மட்டுமே எனக்கு ஆங்கிலம் பயன்பட்டது.

சந்திராயன் 1 விண்கலம், 'நிலவு வறண்ட பகுதி அல்ல... அங்கு  நீர் நிலைகள் இருக்கின்றன’ என்று உறுதிப்படுத்தியது. அடுத்தக் கட்டமாக சந்திராயன் 2 விண்கலத்தை 2013-க்குள் நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டு உள்ளோம். நிலவின் கடினமான பகுதியான துருவப் பகுதியில் இந்தச் செயற்கைக் கோளை இறக்க ஏற்பாடு செய்து வருகிறோம். இது வரை எந்த நாட்டின் விண்கலமும் துருவப் பகுதியில் இறங்கியது கிடையாது. இந்த விண்கலத்தில் இயந்திர மனிதனை அனுப்ப உள்ளோம். நிலவில் உள்ள பாறைகள், மண்வளம், கனிமங்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டு, நிலவில் மனிதன் வாழ முடியுமா என்பதையும் கண்டறிய இருக்கிறோம். அதனால் தமிழில் படித்தாலும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையுடன் வாருங்கள்'' என்று அறிவியல்

தகவல்களை அள்ளித் தெளித்தார்.

இனியாவது தமிழர்கள் விழிக்கட்டும்!

- க.நாகப்பன், படம்: என்.விவேக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism