Published:Updated:

பீகார் பள்ளி குழந்தைகள் இறப்பு: இதுவரை யாரும் கைது இல்லை

பீகார் பள்ளி குழந்தைகள் இறப்பு: இதுவரை யாரும் கைது இல்லை
பீகார் பள்ளி குழந்தைகள் இறப்பு: இதுவரை யாரும் கைது இல்லை
பீகார் பள்ளி குழந்தைகள் இறப்பு: இதுவரை யாரும் கைது இல்லை

பாட்னா: பீகாரில் மதிய உணவு உட்கொண்ட பள்ளிக் குழந்தைகள் 23 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாததால், மக்களிடையே அதிருப்தி நிலவுகிறது. 

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் அண்மையில் 23 பள்ளி குழந்தைகள் மதிய உணவு சாப்பிட்டதில் இறந்து போயினர். இந்த செய்தி நாட்டையே பரபரப்புக்கு உள்ளாக்கியது.

இந்நிலையில் இந்த சம்பவம் நடந்து 5 நாட்கள் ஆகிறது. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தடய அறிவியல் வல்லுனர்கள் சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெய், உருளைக் கிழங்கு, சோயாபீன்ஸ் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த  ஆய்வறிக்கை வந்தபின் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

##~~##
மதிய உணவின்போது அதனுடன் வழங்கப்பட்ட  காய்கறிகளை கொண்டு சமைக்கப்பட்ட  துணை உணவை சாப்பிட்ட பின்னர் 55லிருந்து 65 குழந்தைகளின் உடல் நலம்  பாதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 23 பேர் உயிரிழந்ததாகவும்   சிகிச்சை அளித்த டாக்டர்களில் ஒருவரான சந்திரசேகர சிங் தெரிவித்தார்.