Published:Updated:

சிதைக்கப்பட்ட மானுடம்

ஜூ.வி. நூலகம்

சிதைக்கப்பட்ட மானுடம்

ஜூ.வி. நூலகம்

Published:Updated:

(ஒரு 'தடா’ கைதியின் குமுறல்கள்)

அ.அருள்தாஸ், மக்கள் கண்காணிப்பகம் வெளியீடு,

6, வல்லபாய் சாலை சொக்கிகுளம், மதுரை - 2,  விலை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிதைக்கப்பட்ட மானுடம்

250/-  

##~##

''என்னைப் பொறுத்தவரை நான் 1993லேயே இறந்துவிட்டேன். எனக்கும் இந்த மக்களுக்கும் நடந்த சித்திரவதைகளின் தாக்கம் அப்போது தெரியாவிட்டாலும் வயது ஆகஆக, வாங்கிய அடி உதைகள், மின் அதிர்வுகளினால் உடல் மிகவும் பலவீனம் ஆகிவிட்டது. வீரப்பன் செய்த கொலைகள் 120. ஆனால், அவனைத் தேடப்போன அதிரடிப்படையினால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் 80 பேர். அதிரடிப்படையினர் எந்தத் தப்பும் செய்யவில்லை என்று யாராவது என் முன் வந்து பேசுங்கள். நான் அவர்களுக்கு ஆதாரங்களுடன் கூடிய பதிலைத் தருகிறேன். அதிரடிப் படையினரே! என்னை நீங்கள் மிரட்டலாம். கொலை செய்ய முயற்சிக்கலாம். நான் ஏற்கெனவே செத்துப் போய்விட்டேன். என்னைக் கொன்​றால், அது செத்துப்போன பாம்பை அடிப்பதற்குச் சமம்'' என்று சவால் விடும் புத்தகம்!

சிதைக்கப்பட்ட மானுடம்

நீதிமன்ற, நாடாளுமன்ற, சட்டமன்றங்களைவிட வலிமையானது போலீஸ்​காரரின் லத்தி என்பதை அனுபவப்​பூர்வ​மாக உணர்ந்த​வர்களில் அருள்தாஸும் ஒருவர். பர்கூர் வனப்பகுதியில் உள்ள கிரானைட் குவாரி ஒன்றில் வேலை பார்த்த இவரை, வீரப்பனுக்கு வெடிபொருட்கள் கடத்திச் சென்று கொடுத்ததாகச் சந்தேகத்தின் அடிப்படையில் அதிரடிப்படை கைது செய்தது. மேட்டூர் பகுதியில் இருந்த அதிரடிப்படை முகாம்களில், தான் அனுபவித்த சித்திரவதைகளும் தன்னோடு சிறை இருந்தவர்கள் சொன்ன கொடூரங்களின் நேரடிக் காட்சிகளும்தான் இந்தப் புத்தகம். எந்தவிதமான பூச்சு வார்த்தைகளும் இல்லாமல், ஒரு சாமான்ய நடையில் வர்ணிப்பதுதான் புத்தகத்தின் பெரிய பலம்!

''டைனமோ கருவியை எடுத்து ஒரு கிளிப்பைத் தொப்புளிலும் இரண்டாவது கிளிப்பை என் மார்பிலும் பொருத்திச் சுற்ற, என் உடம்பில் மின்சாரம் பாய... கத்தினேன். இதேபோல் ஆண் உறுப்பு, மூக்கு, காது, கண் புருவம் ஆகிய இடங்களில் மின் அதிர்ச்சி கொடுத்தனர். மனித உடலில் எங்கெங்கு துவாரங்கள் உள்ளதோ அத்தனை துவாரங்களிலும் இந்த மின்அதிர்ச்சி கொடுக்கப்பட்டது. கதறினேன். கதறினேன். பாவிகள் மனம் இறங்கவில்லை'' என்பதை எழுத்தால் கதறும் அருள்தாஸ், ''ஆண்களுக்குப் பகல் வரக்கூடாது. சித்ரவதை செய்யப்படுவார்கள். பெண்​களுக்கு இரவு வரக்கூடாது. பாலியல் வன்முறைக்கு ஆளா வார்கள்'' என்கிறார்.

வீரப்பன் ஆட்கள் என்ற சந்தேகப்பட்டு அந்தப்பகுதி பொதுமக்கள் அத்தனை பேரையும் சித்திரவதை செய்தது போலீஸ். அவர்கள் அப்பாவிகள் என்பதற்​குச் சாட்சிதான் அரசாங்கம் வழங்கிய நஷ்டஈடு. இறுதித் தீர்ப்பில் அருள்தாஸ் ஒரு நிரபராதி என்று விடுதலை செய்யப்​பட்டார். ஆனால், அவரைச் சித்திரவதை செய்தவர்களுக்கு என்ன தண்டனை? இதை  நினைக்கும்போதுதான், போலீஸுக்குத் தரப்பட்டுள்ள 'இருட்டறை’ அதிகாரம் இறைவனால் கூட கேள்வி கேட்க முடியாததாக மாறி வருகிறதோ என சந்தேகப்பட வைக்கிறது.

பல வாரங்கள் தான் அனுபவித்த சித்திரவதை, இரண்டு ஆண்டுச்சிறை, எட்டு ஆண்டு நீதி​மன்ற அலைக்கழிப்புக்குப் பிறகும் அருள்தாஸ் போன்றவர்கள் மனித உரிமைக்காகப் பேசத் துணிவதுதான் மகத்தானது!

- புத்தகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism