Published:Updated:

எஸ்.எம்.எஸ். அனுப்பிய டீச்சர்... எகிறி ஓடிய மாணவன்..

காதல் கசமுசா?

எஸ்.எம்.எஸ். அனுப்பிய டீச்சர்... எகிறி ஓடிய மாணவன்..

காதல் கசமுசா?

Published:Updated:
##~##

சென்னை, சௌகார்பேட்டையில் இருக் கும் ஒரு தனியார் பள்ளியின் ஆசிரியை  குமுது. அவருக்குத் திருமணமாகி எட்டு வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. 37 வயதான குமுது, அந்தப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவருடன் தலைமறைவாகி விட்டார் என்ற செய் தியைக் கேள்விப்பட்டபோது நம்ப முடியவில்லை. 

கடந்த 4-ம் தேதியில் இருந்து இருவரும் தலை மறைவாகி விட, பரபரப்பு தொற்றிக் கொண்டது.. தனது மகனைக் கண்டுபிடித்துத் தருமாறு உயர் நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார் மாணவரின் தந்தை சரவண்குமார். உடனே விஷயம் வெளியில் பற்றிக்கொண்டுவிட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 'ஒரு வாரத்துக்குள் மாணவரைக் கண்டு பிடித்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று உத்தரவு போட்டு உள்ளார்கள். இதேநேரம் குமுதுவின் கணவரும், தனது மனைவியைக் காணவில்லை என்று எம்.கே.பி. நகர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சரவண்குமாரிடம் பேசினோம். ''என் பையனுக்கு 17 வயசுதான் நடக்குது. ஒருநாள், தற்செயலாக என்

எஸ்.எம்.எஸ். அனுப்பிய டீச்சர்... எகிறி ஓடிய மாணவன்..

பையனுடைய மொபைலில் இருந்த எஸ்.எம்.எஸ். ஒன்றைப் படித்தேன். அது, அவனுடைய ஆசிரியை குமுது அனுப்பிய ஆபாச எஸ்.எம்.எஸ். என்பதை அறிந்து அதிர்ந்து​விட்டேன். இதனால், யானைக்கவுனி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.  போலீ​ஸார் குமுதுவை அழைத்து எச்சரித்து அனுப்பினார்கள். பள்ளி நிர்வாகம் கேட்டுக் கொண்டதால் புகாரை வாபஸ் வாங்கினேன். இந்தச் சம்பவத்​தால் என் மகன் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தான். சிறப்பு வகுப்பு என்று கூறி இந்த மாதம்தான் பள்ளிக்குச் சென்றான். ஆனால், 4-ம் தேதியில் இருந்து அவனைக் காணவில்லை. ஆசிரியை குமுதுவும் தலைமறைவாகி விட்டார். மீண்டும் யானைக்கவுனி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஒரு

எஸ்.எம்.எஸ். அனுப்பிய டீச்சர்... எகிறி ஓடிய மாணவன்..

வாரத்துக்கு மேலாகியும், போலீஸார் என் மகனைக் கண்டுபிடிக்கவில்லை என்பதால், நீதிமன்றத்தை நாடினேன்'' என்றார் உடைந்த குரலில்.

பள்ளியின் ஆசிரியர்கள் சிலரிடம் பேசினோம். ''குமுது, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். அவர் இங்கு ஓர் ஆண்டாகத்தான் பணியில் இருக்கிறார். ஆபாச எஸ்.எம்.எஸ். பிரச்னை வந்தபோதே, பள்ளி நிர்வாகம் அவரைக் கடுமையாக எச்சரித்தது. வேலையில் இருந்து நீக்கவும் பள்ளி நிர்வாகம் முடிவு செய்து இருந்தது. அதற்குள் இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டது.  அந்த மாணவன், முதல் ரேங்க் எடுக்கும் மாணவன்.  ஆசிரியை குமுதுவின் இந்தச் செயலால் அந்த மாணவனின் எதிர்காலமே கேள்விகுறியாகிவிட்டது...'' என்றனர்.

பள்ளியின் தலைமை ஆசிரியரிடம்  பேசினோம். ''குமுதுவின் மீது வேறு எந்தக் குற்றச்சாட்டும் யாரும் கூறியது இல்லை. நாங்கள் கடுமையாக எச்சரித்தும் இப்படிச் செய்தது எங்களுக்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது...'' என்றார் வருத்தத்துடன்!

யானைக்கவுனி இன்ஸ்பெக்டர் ராஜசேகரிடம் பேசினோம். ''ஒரு மாதத்துக்கு முன்பு புகார் கொடுக்கப்பட்ட நேரத்தில் குமுதுவை அழைத்துப் பேசினோம். மைனர் பையனின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதால், எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தோம். டெல்லியில் பதுங்கி இருந்த இருவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து விட்டோம்'' என்றார்.

குமுது செய்தது நியாயம்தானா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்!

- ஜோ.ஸ்டாலின், படம்: வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism