Published:Updated:

விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தங்கம்!

பட்ஜெட்டுக்கு எதிராகப் போராட்டம்

விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தங்கம்!

பட்ஜெட்டுக்கு எதிராகப் போராட்டம்

Published:Updated:
##~##

மூன்று நாட்கள் தொடர் கடை அடைப்புப் போராட்டம் நடத்தும் அளவுக்கு, நகைக்கடை உரிமையாளர்கள் இந்தியா முழுக்கவே கொந்தளிப்பின் உச்சத்தில் இருக்கிறார்கள். காரணம், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்! 

பட்ஜெட்டில் பிராண்டட் அல்லாத தங்க நகைகளுக்கு, இதுவரை இல்லாத வகையில் ஒரு சதவிகிதம் உற்பத்தி (கலால்) வரி விதிக்கப்பட்டு, உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. மேலும், இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு சுங்க வரி இரண்டு சதவிகிதத்தில் இருந்து நான்கு சதவிகிதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இது ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தங்கம்!

ரொக்கமாக இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் தங்கநகை வாங்கும்போது, பான் கார்டு எண்ணைக் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும். அதோடு தங்க நகை வாங்குபவரிடம் இருந்து ஒரு சதவிகித வரியை டி.டி.எஸ். ஆகப் பிடித்து அரசுக்கு செலுத்த வேண்டும். இது, வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. நகை செய்கூலிக்கு 12 சதவிகித சேவை வரி விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒட்டுமொத்தமாக தங்கத்தைப் போட்டு வாட்டி இருக்கிறார்கள். இதற்குத்தான் இந்தியா முழுக்க நகைக்கடை உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு. வரி உயர்வை வாபஸ் பெறக் கோரி இந்தியா முழுவதும் நகைக் கடைகளை மூன்று நாட்கள் மூடுவது என்று, மும்பையில் உள்ள அகில இந்திய தங்கநகை வியாபாரிகள் சம்மேளனம் முடிவு செய்தது. அதன்படி, மார்ச் 17 முதல் இந்தியா முழுவதும் உள்ள நகைக் கடைகள் மூன்று நாட்கள் மூடப்பட்டன.

விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தங்கம்!

புதிய வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னை நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்தி லாலிடம் கேட்டோம். ''இந்த வரிகள் அனைத்தும் நகை வாங்கும் மக்கள் மீது சுமத்தப்படும் என்பதால், அவர்களுக்கும் சேர்த்துதான் நாங்கள் போராடி வருகிறோம். நான்கு விதமான வரிகளால், தங்கத்தின் விலை, சவரனுக்கு 1,000 ரூபாய்க்கு மேல் அதிகரிக்கும்.

விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தங்கம்!

உற்பத்தி செய்யும் நகைக்கு செய்கூலியை வாடிக்கையாளரிடம் இருந்து வாங்குகிறோம். அந்தச் செய்கூலி மீது விதிக்கப்படும் 12 சதவிகித சேவை வரியும் இனி நகை வாங்குபவர்களிடம் இருந்துதான் வசூலிக்கப்படும். பல கடைகளில் செய்கூலி இல்லை என்று தள்ளுபடி இருக்கிறது. இனி செய்கூலி தள்ளுபடி செய்யப்பட்டாலும், அதற்கான சேவை வரியை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளோம். இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் நகை வாங்க வேண்டும் என்றால், பான் கார்டு கொண்டுவர வேண்டும். அவர்களிடம் அது இல்லை என்றால் 20 சதவிகிதம் வரி வசூலிக்கச் சொல்லி இருக்கிறார்கள். வாடிக்கையாளர்கள் பலருக்கு பான் கார்டு என்றால் என்ன என்றே தெரியாமல்தான் இருக்கிறார்கள். மிக மிக எளிமையான ஒரு கல்யாணத்துக்காக 10 சவரன் தங்க நகை வாங்கினால்கூட, இரண்டு லட்ச ரூபாயைத் தாண்டிவிடும். அப்போது பான்கார்டு வேண்டும் என்றால் எங்கே போவார்கள்? அதனால் இது நடைமுறைக்கு சரிப்பட்டு வராத விஷயம். அதனால்தான் மத்திய அரசின் அறிவிப்புக்கு நாங்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கிறோம்'' என்றவர், இன்னொரு பாதிப்பையும் குறிப்பிட்டார்.

''இப்போது மற்ற நாடுகளைவிட, இந்தியாவில் ஒரு கிலோ தங்கம் சுமார் இரண்டு லட்ச ரூபாய் விலை அதிகமாக உள்ளது. மத்திய அரசு வரிகளால் இது இன்னும் அதிகரிக்கும். அதனால், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் அதிக அளவில் கடத்தல் தங்கம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இந்தியப் பணம் வெளிநாடுகளுக்கு ஹவாலா மூலம் செல்லும் சூழ்நிலை உருவாகும். இந்த சட்டவிரோதச் செயலை ஊக்குவிக்கும் வகை யில்தான், மத்திய அரசு வரிவிதித்து உள்ளதா?'' என்று கேள்வி எழுப்பினார்.  

'கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காகத்தான் இந்த அதிரடி நடவடிக்கை’ என்று மத்திய அரசு உறுதி யுடன் இருப்பதால், இந்தப் பிரச்னை இப்போதைக்கு முடியாது!    

- சி.சரவணன்

படங்கள்: வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism