Published:Updated:

தி.க.சி. நேர்காணல்கள்

ஜூ.வி. நூலகம்

தி.க.சி. நேர்காணல்கள்

ஜூ.வி. நூலகம்

Published:Updated:

தொகுப்பாசிரியர்: வே.முத்துக்குமார், உயிர் எழுத்து பதிப்பகம் 9, முதல் தளம், தீபம் வணிக வளாகம், கருமண்டபம், திருச்சி-1. விலை:

தி.க.சி.  நேர்காணல்கள்

.140/-

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தி.க.சி.  நேர்காணல்கள்

அர்த்தமும் அழகியலும் பொருந்திய எழுத்து உங்களிடம் இருந்து வெளிப்படுமானால், உடனே உங்கள் வீட்டுக்கு உற்சாகக் கடிதம் ஒன்றுவரும். அதை அனுப்பியவர் அநேகமாக தி.க.சி.யாக இருப்பார்!

''நான் ஒரு எளிய தோட்டக்காரன். எல்லாச் செடிகளுக்கும் தண்ணீர் பாய்ச்சுவேன். மலர்கின்ற செடி மலரட்டும். எந்தச் செடியும் கருக எனக்கு மனம் இடம் தராது. நிறையப் படைப்பாளிகளை உருவாக்குவதே எனது நோக்கம்''- என்று, தமிழ்ப் படைப்பாளிகளை அரை நூற்றாண்டு காலமாக வளர்த்தெடுப்பவர் தி.க.சிவசங்கரன். இன்றைக்கும் பூமணியும் பிரபஞ்சனும் பா.செயப்பிரகாசமும் கந்தவர்வனும் தமிழ்ப் படைப்புகளில் வலம் வர தி.க.சி. கொடுத்த உற்சாகமே காரணமாக இருக்க முடியும். விமர்சன வித்வான்கள் பெருத்துவிட்ட இந்தக் காலத்தில், தி.க.சி. போன்றவர்கள்தான் புதியவர்களுக்குப் பாதை அமைத்துத் தருபவர்களாக இருக்கிறார்கள். அத்தகைய நல்ல விமர்சகரின் மொத்தப் பேட்டிகளையும் தொகுத்துள்ளார் வே.முத்துக்குமார்.

பாரதி, பாரதிதாசன் ஆகிய இருவரையும் தனது இரு கண்களாகவும், ஜீவாவைத் தனது நெற்றிக் கண்ணாகவும் பொருத்திக்கொண்ட தி.க.சி.க்கு... பாரதி, வ.ரா., புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி ஆகிய நான்கு படைப்பாளிகள் மீது அதிகப்படியான ஈர்ப்பு. ''இவர்களின் எழுத்துக்களில் கலைநயமும், மனிதநேயமும், சமுதாய நல நாட்டமும், ஊடும் பாவுமாக இணைந்து நிற்கின்றன. இவர்களது எழுத்துக்களில் புதுமை, தனித்தன்மை, புதுயுகத்தைப் படைப்பதற்கான தத்துவ தரிசனமும் உள்ளன'' என்பார். தி.க.சி.யின் இலக்கிய அளவுகோல் இதுதான். எல்லா எழுத்துக்களிலும் இவர் இதைத்தான் தேடுவார். தேடியது கிடைத்தால், அந்தப் படைப்பாளியை உச்சி முகர்ந்து கொண்டாடுவார். வேண்டியவர், வேண்டாதவர், பிரபலமானவர், பெயர் தெரியாதவர்... என எந்தப் பாகுபாடும் இவருக்கு இல்லை.

எடுத்ததை எல்லாம் பாராட்டுவார், போஸ்ட் கார்டு விமர்சகர் என்று தி.க.சி.யும் விமர்சிக்கப்பட்டார். ''புதுமைப்​பித்தன் போல் வாழ்க்கையின் குரூரங்கள் மீது கவனமுடைய எந்த ஓர் எழுத்தாளரும் எனக்கு முக்கியமாகப்படுகிறார்கள். உடனே நான் 35 மார்க் போட்டுவிடுவேன்'' என்று பதில் சொன்னார். தி.க.சி.யிடம் 35 மார்க்பெற்ற​ வர்கள்தான் இன்று முழு மதிப்​பெண்கள் அடைய எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். அளவுக்கு அதிகமாகப் புதுமைப்பித்தன்  கொண்​டாடப்பட்டபோது, ''அவருக்கு வணக்கம் சொல்லுங்கள், வீர வணக்கம் வேண்டாம்'' என்று சொல்லும் துணிச்சல் தி.க.சி.க்கு மட்டுமே இருந்தது. ஜெயமோகன் எழுத்தை விமர்சித்தால் 'நமக்கு நவீனப் பரிச்சயம் இல்லை என்று சொல்லிவிடுவார்களோ’ என்று பலர் தயங்கிய நேரத்தில், 'விஷ்ணுபுரம் வெறும் பம்மாத்து’ என்று சொன்னவர் தி.க.சி. 'மலசல வாடை அதிகமாக வீசுவதால் ஒரு படைப்பு தலித் இலக்கியமாகிவிடாது’ என்று சொன்னவரும் இவரே.

'தி.க.சி. இஸ் எ லிட்டரரி ஆக்டிவிஸ்ட்’ என்று ஈழத்து இலக்கிய விமர்சகர் கைலாசபதி சொன்னார். 18 வயதில் எழுதத் தொடங்கி 80-க்குப் (இரண்டு மூன்று அறுவைச் சிகிச்சை​களுக்குப் பிறகும்!) எழுதியும் இயங்கியும் தி.க.சி. அதை மெய்ப்பித்துக்கொண்டு இருக்​கிறார். புதிதாக எழுத முனைபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பால பாடங்கள் எத்தனையோ இதில் இருக்கின்றன!

- புத்தகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism