Published:Updated:

இனி ரயில் கட்டணம் அடிக்கடி கூடும்!

ரயில்வே பட்ஜெட் பற்றி லாலு சீக்ரெட்

இனி ரயில் கட்டணம் அடிக்கடி கூடும்!

ரயில்வே பட்ஜெட் பற்றி லாலு சீக்ரெட்

Published:Updated:
##~##

கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ரயில் கட்டணம் உயர்த்தப் பட்டு உள்ளது. இதில் பொதுமக்கள் அடைந்த அதிர்ச்சியைவிட, கட்ட ணத்தை உயர்த்திய அமைச்சருக்குத்தான் அதிக அதிர்ச்சி. ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதியின் பதவியைப் பறித்து விட்டார், அவரது கட்சித் தலைவர் மம்தா. 

இந்தியாவிலேயே நீளமான பயணத்தைக் கொண்டது, விவேக் எக்ஸ்பிரஸ். கன்னியா குமரியில் இருந்து அஸ்ஸாமின் திப்ருகர் நகரம் வரை 4,200 கிமீ தூரத்துக்குச் செல்கிறது. இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பில் செல்லும் பயணியின் டிக்கெட் கிட்டத்தட்ட 250 ரூபாய் உயர்ந்து உள்ளது. பிளாட்ஃபார்ம் டிக்கெட் ஐந்து ரூபாய் ஆகியுள்ளது. அதனால், இதை மிகக் கடுமையான கட்டண உயர்வு என்று சொல்ல முடியாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்த அமைச்சர் தினேஷ் திரிவேதி, ''இந்தியாவுக்கு இமயமலையும் கங்கை நதியும் எவ்வளவு முக்கியமோ, அத்தனை முக்கியம் இந்தியன் ரயில்வே. ஆனால், ரயில்வே இப்போது ஐ.சி.யு. என்று சொல்லப்படும் அவசர சிசி ச்சை மையத்தில் உள்ளது. ஐ.சி.யு-வில் இரு ந்து ரயில்வேயை மீட்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பட்ஜெட்டை தயாரித்து உள்ளேன். நான் ரயில்வே மருத்துவமனைக்குச் சென்றாலும் பணம் இல்லை என்கின்றனர். ரயில் கோச்சில் ஏன் கரப்பான் பூச்சி இரு க்கிறது என்று கேட்டாலும் கிளீன் செய்யப் பணம் இல்லை என்கிறார்கள். ரயில்வே ஊழி யர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் பணம் இல்லை என்ற நிலைதான் ரயில்வேயில் இருக்கிறது'' என்று முன்னுரை கொடுத்தார்.

இனி ரயில் கட்டணம் அடிக்கடி கூடும்!

இதுகுறித்து, முன்னாள் ரயில்வே அமைச்சரான லாலு பிரசாத் யாதவ் என்ன சொல்கிறார் என்று கேட்டோம்.

''நான் பொறுப்பு ஏற்றபோதும் ரயில்வே மோசமாகத்தான் இருந்தது. மத்திய அரசுக்குக்

இனி ரயில் கட்டணம் அடிக்கடி கூடும்!

கொடுக்கவேண்டிய டிவிடெண்ட் கொடுக்கக்கூட முடியாத நிலையில் இருந்தது. எனக்கு முன்பு என்.டி.ஏ. ஆட்சியில் ரயில்வே அமைச்சர்களாக இருந்த மம்தா பானர்ஜியும் நிதீஷ் குமாரும் என்ன செய்தார்களோ தெரியாது. ஆனால், நான் பதவி ஏற்றவுடன், இதை ஒரு சவா லாகவே ஏற்றுக்கொண்டேன். நம்முடைய இந்திய ரயில்வேக்கு ஆற்றலும் செயல்படும் திறமையும் இருப்பதை அறிந்தேன். இதற்காக என்ன செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு பிரிவாக எடுத்து ஆய்வு செய்தேன்.

முதலில் ரயில்வே அதிகாரிகளையும், ஊழியர்களையும் அழைத்துப் பேசினேன். 'நீங்கள் எல்லோரும் ரயில்வேயின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று நினைத்துக்கொண்டுசெயல் படுங்கள். ரயில்வே என்பது ஜெர்ஸி மாடு மாதிரி, இதில் எவ்வளவு வேண்டுமானாலும் கறக்கலாம் என்பதற்காக, பலரும் ரயில்வேயைச் சுரண்டுவதை  நிறுத்த வேண்டும். அடுத்து உங்கள் ஒவ்வொருவருடைய உழைப்பையும் அறிவாற்றலையும் பயன்படுத்துங்கள்’ என்று வேண்டிக் கேட்டேன்.

அப்போது மத்திய அரசு, ரயில்வேயைத் தனியாரி டம் கொடுக்கும் மனநிலையில் இருந்தது. ஆனால், எனக்கு அதில் விருப்பம் இல்லை. அதனால்தான் ரயில்வேயைக் காப்பாற்றும் பொறுப்பை ஊழி யர்களிடம் ஒப்படைத்தேன். அவர்களிடம், 'நம்முடைய ரயில்வேயில் உள்ளவர்களுக்கு அனைத்து ஆற்றலும் திறமையும் இருக்கிறது. இது பழமையான நிறுவனம். இதுபோன்ற நெட்வொர்க் எந்த நாட்டிலும் கிடையாது. இந்தத் துறை தனியாரிடம் போகக்கூடாது. ஆனால், நீங்கள் ரயில்வே வளர்ச்சிக்கு உதவவில்லை என்றால், மத்திய அரசு நினைப்பதுபோல் நடந்து விடும். அப்படி நடக்க வேண்டாம் என்றால், நன்றாக வேலை செய் யுங்கள்’ என்று அடிக்கடி சொல்லி வந்தேன்.

இப்படிச் சென்னதற்கு காரணம் இருந்தது. அப்போது ரயில்வேயில் பலரும் வேலை பார்க் காமல் லூட்டி அடித்துக்கொண்டு இருந்தனர். அதனால் நிர்வாகம் மோசமாகி நிதி நிலைமையும் மோசமாக இருந்தது. குறிப்பாக சரக்கு ரயில் பிரிவில் ஏராளமான திருட்டுகளும் கொள்ளைகளும் நடந்தன. சரக்குப் போக்குவரத்தில் சாமான்கள் அதிக டேமேஜ் ஆகிவிட்டதாகச் சொல்லி, வர்த்தகர்கள் கோடிக்கணக்கில் நஷ்டஈடு பெற்றுக்கொண்டு இருந்தனர். இது ரயில்வேக்குப் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதனால் நாங்கள் அதிரடி ரெய்டுகள் நடத்தினோம். 68 டன் சரக்கு ஏற்றி இருந்தால், 15 டன் மட்டுமே சரக்கை ஏற்றியதாக கட்ட ணம் வசூலித்தைக் கண்டுபிடித்தோம். எடைபோடும் இயந்திரங்களில் தில்லுமுல்லுகள் செய்து வந்தனர். அதிலும் கனிம வளங்களுக்கானப் போக்குவரத்துக்களில் ஏராளமான தில்லுமுல்லுகள் நடந்து வந்தன. இந்திய ரயில்வே சரித்திரத்தில் முதன்முறையாக இப்படி தொடர்ந்து அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டு, ரயில்வேக்கு வராமல் இருந்த வருவாயை முறைப்படி கிடைக்கச் செய்தோம். இதனால் சரக்குப் பிரிவின் வருவாய் மளமளவென வளர்ந்தது.

அடுத்து நிர்வாக ரீதியில் ஏராளமான மாற் றங்களைச் செய்தோம். சிறு பணிகளுக்கு எல்லாம் தலைமை இடத்தை நம்பிக்கொண்டு இருந்தனர். அப்படி இருக்காமல் அனைத்து ரயில்வேயிலும் பொதுமேலாளர்கள் மட்டத்துக்கு, அதிகாரத்தைப் பரவலாக்கினோம். ரயில் கோச்சுகள், வீல்கள் எல்லாம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து, அதிலும் அதிக விலை கொடுத்து வாங்கிக் கொண்டு இருந்தார்கள். சிலர் லாபம் அடைவதற்காகத்தான் இப்படி வாங்கிக் கொண்டு இருந்தனர். அதைத் தடுத்து இங்கேயே புதிய வீல்கள், ரயில்வே கோச் தயாரிக்கும் தொழிற்சாலைகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. ஏற்கெனவே இருந்த தொழிற்சாலைகள் இன்னும் கூடுதலாகத் தயாரிக்கும் வண்ணம் விரிவுபடுத்தப்பட்டது. பெங்களூருவிலும் என்னுடைய சாரன் தொகுதியிலும் புதிய தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன.

ஏற்கெனவே, இருந்த ரயில்வே தொழிற் சாலைகளில், பல்வேறு பணிகளை தனியாருக்குக் கான்ட்ராக்ட் கொடுத்துக்கொண்டு, ஒரு மாஃபியா மாதிரி கொள்ளை அடித்துக்கொண்டு இருந் தனர். அவற்றைத் தடுத்து நிறுத்தி, சுரண்டல்களை ஒழித்து ரயில்வேயை அப்போது மீட்டோம். அதன் விளைவுதான் ரயில்வேயின் நிதி, சில ஆண்டுகளிலே 60 கோடி அளவுக்கு உபரியாக மாறியது.

இப்போதைய ரயில்வே அமைச்சரைப் பற்றி என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. மம்தா பதவியில் இருந்தபோதே, இந்த ரயில்வே சரிந்து விட்டது. அவர் அமைச்சராக இருந்தபோது, வேலையை ஒழுங்காகச் செய்யவில்லை. மீட்டிங் போட்டால் மட்டும், வேலை நடக்காது. மம்தா, மாயாவதி, ஜெயலலிதா போன்றவர்கள் கோபமாகப் பேசுவார்கள். பேசினால் போதுமா? அதிகாரிகளிடம் எப்படிப் பேச வேண்டும், எப்படி வேலை வாங்க வேண்டும் என்று தெரிய வேண்டும். அப்படி நடந்துகொள்ளாததன் விளைவாக, இப்போது ரயில்வே மோசமாகிவிட்டது. சரக்குக் கட்டணத்தை பட்ஜெட்டுக்கு முன்பே உயர்த்தி விட்டனர்.

பயணிகள் கட்டணத்தில் எல்லா வகுப்புப் பயணிகளுக்கும் பாதிப்பு வந்துள்ளது. இனி அத்தியாவசியப் பொருட்கள், சிமென்ட், ஸ்டீல் போன்றவை விலை உயர்ந்துவிடும்.

நாங்கள் என்னென்ன திட்டங்கள் போட் டோமோ, அவை எதுவும் தொடரவே இல்லை. அதன் விளைவுதான், ரயில்வே இந்த அளவுக்கு மோச மாகியுள்ளது. ரயில்வேக்கு சரக்குப் போக்குவரத்து தான் முக்கிய வருவாயைக் கொடுப்பது. இதனால் சரக்குப் போக்குவரத்துக்காக பிரத்யேக காரிடார்

இனி ரயில் கட்டணம் அடிக்கடி கூடும்!

அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பிரத்யேகப் பாதையில் எல்லா வண்டிகளையும் விட்டு, சரக்குப் போக்குவரத்துகளை லூப் லைனில் விட்டனர். பெரிய நபர்கள் போகிறார்கள் என்பதற்காக, ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும் சதாப்திக்கும் முக்கியத்துவம் கொடுத்து, சரக்குப் போக்குவரத்தை முடக்கினார்கள்.

இதனால் சரக்கு ரயில்கள் தாமதமாகப் போயின. சரக்கு ரயில்களை ஆங்காங்கே நிறுத்தி, திருட்டுக்களும் நடக்கின்றன. அதனால், சரக்குகளை ரயிலில் அனுப்புவது குறைந்து விட்டது. இதுதான் கடந்த மூன்று வருடங்களாக நடந்துவந்த நிர்வாகம். இந்த வகையில்தான் வருவாயை இழந்துவிட்டார்கள். நாங்கள் போட்டிருந்த பிரத்யேக சரக்கு ரயில் பாதைத் திட்டங்களை செயல்படுத்தி இருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது. சென்னை - மும்பை - கொல்கத்தா - லூதியானா - ஹாவரா - டெல்லி போன்ற வழித்தடங்களின் திட்டங்களுக்கு ஜப்பானும் உதவ முன்வந்தது. ஆனால், இந்தத் திட்டங்களை எல்லாம் நடக்காமல் செய்துவிட்டதால், ரயில்வே லைன்களில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுவிட்டது.

பல்வேறு ஒழுங்குமுறை ஆணையங்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதனால், இனி ரயில்வே அமைச்சருக்கு அதிகாரங்கள் பெரிய அளவில் இருக்காது. மூன்றாவது நபர்தான் ரயில்வேயை நடத்த உள்ளார். ரயில்வேதான் அதிக அளவில் டீசலை உபயோகிக்கிறது. இந்த ஆணையங்கள், எண்ணெய் விலைக்குத் தகுந்தவாறு டிக்கெட் கட்டணங்களை இனி நிர்ணயிக்கும். அதனால் டிக்கெட் கட்டணம் இனி அடிக்கடி மாறுபடும். தவிர, ரயில் நிலைய மேம்பாட்டுக் கழகம், உணவு வழங்குவதற்கும் பயணிகள் வசதிகளுக்கு என்றும் தனித்தனி கழகங்கள் வரவுள்ளன. இதில் வெளிநாட்டு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் பங்கு எடுக்கும். மிகவும் லாபகரமாக நடந்த ரயில்வேயை, தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்துக்குத்தான் இந்த அல்லாகுல்லா கூச்சல்கள். நிச்சயமாக அடுத்த சில வருடங்களில் அம்பானிகள் பிர்லாக்கள் வசம் ரயில்வே போய்விடும்'' என்றார் தீர்க்கமாக.

  - சரோஜ் கண்பத்

படங்கள்: சுபாஷ் பரோலியா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism