Published:Updated:

''நீதிபதிகளும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டியவர்கள்தான்..''

ஏ.பி.ஷா தீர்ப்பு

''நீதிபதிகளும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டியவர்கள்தான்..''

ஏ.பி.ஷா தீர்ப்பு

Published:Updated:
##~##

திரடித் தீர்ப்பு களுக்குச் சொந்தக் காரர் அவர். 'நாட் டின் தலைமை நீதிபதி கூட, தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்குக் கீழ் கொண்டுவரப்பட வேண்டியவர்தான்’, 'பாதுகாக்கப் படும் பாரம்பரியக் கட்டடங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் எந்தக் கட்டுமானங்களும் ஏற்படுத் தக் கூடாது’, 'ஓரினச் சேர்க்கையைத் தடை செய்வது அடிப்படை உரிமை மீறலாகும்...’ என்பன போன்ற பலத்த சர்ச்சைக்குரிய பல தீர்ப்புகளைத் தந்தவர், சென்னை மற்றும் டெல்லி உயர் நீதிமன்றங்களின் நீதிபதியாக இருந்த ஏ.பி.ஷா!   

'நீதிபதிகளின் நியமனமும், பொறுப்பும்’ என்ற தலைப்பில் உரையாற்ற சனிக்கிழமை சென்னை  வந்தவரைச் சந்தித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அண்ணா ஹஜாரே குழு, 'நீதித்துறை யையும் லோக்பாலுக்குள் கொண்டுவர வேண்டும்’ என்று கேட்பது குறித்து உங்கள் கருத்து என்ன?''

''நீதிபதிகளும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டியவர்கள்தான்..''

''அண்ணா ஹஜாரேவை விடுங்கள். ஊழல் என்பது லஞ்சம் வாங்குவது மட்டுமே அல்ல. நீதித் துறையில் இருக்கும் நீதிபதிகள் தவறான வழிகளில் தங்களின் ஆதிக்கத்தைச் செலுத்தினால், பணியில் நேர்மை இல்லாதவராக இருந்தால், அவர்களும் விசாரணைக்கு உட் படுத்த வேண்டியவர்கள்தான். நீதித் துறையில் இருக்கும் சுதந்திரம், அத்தகைய நீதிபதிகளைப் பாதுகாக்கக் கூடாது!''

''அணுசக்தித் துறை அமைப்புகளை, 'அரை மனதுடன் செயல்படுபவை’ என்று, விமர்சித்து இருந்தீர்கள். இன்று அணுசக்தித் துறைக்கு எதிராகத் தொடுக்கப்படும் வழக்குகளின் மீது நீதிமன்றங்களின் நிலைப்பாடு சரிதானா?''

''நீதிபதிகளும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டியவர்கள்தான்..''

''ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தனிப் பட்ட முறையில் நான் அணு சக்திக்கு எதிராக இருக்கலாம். விமர்சனங்கள் செய்யலாம். ஆனால், ஒரு நீதிமன்றம் அவ்வாறு தனிப்பட்ட கருத்துடன் இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது.''

''நதி நீர் இணைப்பு என்பதை வழிகாட்டுதலாகவோ, பரிந்துரை யாகவோ அல்லாமல் 'அதைச் செயல்படுத்தியே ஆக வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பாகவே வழங்கியிருக்கிறதே..?''

''அதைப்பற்றித்தான் இன்றைய (17.3.2012) நாளிதழ் களிலும் செய்திகள் வந்திருக்கின்றனவே. 'சமீபத்தில் நாங்கள் நதி நீர் இணைப்பு குறித்து அறிவதற்கு ஒரு குழுவை நியமித்து இருக்கிறோம். பல்வேறு கருத்துகள் வந்திருக்கின்றன. எங்களின் முடிவை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு கட்டுரைகள் வெளிவந்து இருக் கின்றன. சிலர், உச்ச நீதிமன்றம் இதைச் செய்திருக்கக் கூடாது என்கிறார்கள். எங்களுக்கும் ஓர் எல்லை இருக்கிறது. அதற்குமேல் நாடாளுமன்றமும் அரசும் தான், அதில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் பற்றிச் சிந்திக்க வேண்டும்’ என்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள். வேறு என்ன சொல்வது?''

''நீதிமன்ற விவகாரங்களை ரிப்போர்ட்டிங் செய்ய பத்திரிகை களுக்கு நெறிமுறைகள் வகுக்கப்போவதாகச் சொல்லி இருக்கிறதே உச்ச நீதிமன்றம்... இது ஊடகச் சுதந்திரத்தில் தலையிடுவது ஆகாதா?''

''இதுபற்றி விவாதங்கள் நடந்து வருகின்றன. எந்த இடத்திலும் தவறுகள் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் எல்லோருக்கும் அக்கறை உண்டு. மற்றபடி, நானும் உங்களைப்போலவே காத்திருக்கிறேன். உச்ச நீதிமன்றம் அமைக்கும் குழு அளிக்கும் நெறிமுறைகள் தெரிந்த பிறகே, நாம் ஒரு முடிவுக்கு வர முடியும். அதற்கு முன், நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை!''

''நீதித்துறைக்கு கால்கட்டுப் போடும்விதமாக 'நீதித்துறை தரம் மற்றும் பொறுப்புடைமை மசோதா’ அமலாக்கப்படும் விதம் குறித்து...?''

''எம்.பி-க்களை இதற்குள் கொண்டுவந்தால், நீதித் துறையின் சுதந்திரம் வெகுவாகப் பாதிக்கப்படும். இப்போது இருக்கும் மசோதாவை அப்படியே செயல் படுத்தினால், அது நீதித்துறையின் அழிவுக்குத் தொடக்கமாக அமைந்துவிடும்!''

''போபால் விஷவாயுத் தாக்குதல், கந்தமால், குஜராத் கலவரம் போன்ற பல முக்கிய வழக்குகளுக்கு நீதி கிடைக்காமல் இருக்கிறதே. நீதிமன்றங்களின் மீது நம்பகத்தன்மை மக்களிடையே குறைந்து விடாதா...?''

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல், புன் னகைத்துக்கொண்டே காரில் ஏறிப் பறந்தார்.

- ந.வினோத்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism