Published:Updated:

சூரிய ஒளி மின்சாரம் பயன்படுத்தினால் குற்றமா?''

அதிர்ச்சியில் தனியார் பள்ளி

##~##

ல்லதுக்குக் காலம் இல்லை என்பார்​களே... அப்படித்தான் ஒரு முன்மாதிரிப் பள்ளிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது! 

திருவண்ணாமலை மாவட்டம் வேடியப்​பனூரில் அருணாச்சலா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி கடந்த 1999-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. ஏழை மாணவர்களுக்காக டிரஸ்ட் மூலம் எல்.கே.ஜி. முதல் ஐந்தாம் வகுப்பு வரை இலவசக் கல்வி இங்கு வழங்கப்படுகிறது. கடந்த ஆட்சியில், மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டதுமே, இந்தப்பள்ளி ஆக்கபூர்வமான காரியத்தில் இறங்கியது. இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து, பள்ளித் தேவைக்குப் பயன்படுத்தத் தொடங் கினார்கள். இதன்மூலம், ஆண்டுக்கு சராசரியாக சுமார் 4 கே.வி. மின்சாரம் சேமித்தார்கள். 'சூரியஒளி மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளும் கல்லூரிகளும் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தைத் தாங்களே தயாரித்துக் கொண்டால், தமிழகத்தின் மின் தேவை யைக் கணிசமாகக் குறைக்கலாம்’ என்று பள்ளியின் நிர்வாகி மதன்மோகன் பல நிறுவ னங்களுக்கும் ஆலோசனை சொல்லி வந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சூரிய ஒளி மின்சாரம் பயன்படுத்தினால் குற்றமா?''

இந்தப் பள்ளிக்கு விருது கொடுத்துக் கௌரவிக்க வேண்டிய மின்சார வாரியம், அபராதம் கட்டச் சொல்லி அதிர்ச்சி கொடுத்திருக்கிறது என்பதுதான் வேதனை.

சூரிய ஒளி மின்சாரம் பயன்படுத்தினால் குற்றமா?''

பள்ளி நிர்வாகியிடம் பேசினோம். ''இந்தப் பள்ளியில் கடந்த 2009 செப்டம்பரில் சுமார் எட்டு லட்சம் ரூபாய் செலவில் சூரிய மின்உற்பத்திக் கருவி பொருத்தப்பட்டது. அப்போதே பள்ளி நிர்வாகத்தின் சார்பில், 'எங்கள் பள்ளிக்கு சூரிய ஒளி மூலம் பெறப்படும் மின்சாரத்தைத்தான் உப யோகிக்கிறோம். வாரியத்தின் மின்சாரத்தைப் பயன்படுத்தவில்லை’ என்று மின்சார அலுவலகத்​துக்குக் கடிதம் கொடுத்து விட்டோம். எங்கள் பள்ளிக்குத் தேவையான மின்சாரத்தை நாங்களே உற்பத்தி செய்து பயன்படுத்தி வந்தோம். அதனால் மின்துறைக்கு மினிமம் கட்டணத்தை மட்டுமே செலுத்தி வந்தோம்.

இடையில் சில நாட்கள் சூரிய மின் உற்பத்தி இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால், அரசு வழங்கும் மின்சாரத்தை உபயோகப்படுத்திக் கொண்டோம். அதனால், அந்த மாதம் மின்சார மீட்டர் ஓடியது.  

அதனைக் கணக்கிட்ட மின்துறையினர், 'நீங்கள் தொடர்ந்து மின்சாரத்தைப் பயன்படுத்தி

இருக்கிறீர்கள். அதை மறைத்துள்ளீர்கள். உங்களது மீட்டர் பழுதாகி உள்ளது என்பதால் கடைசியாக வந்திருக்கும் அதிகபட்ச மின் அளவுப்படி, 10 ஆயிரம் பணம் செலுத்த வேண்டும்.  இல்லை என்றால் உங்களுடைய மின்இணைப்பு துண்டிக்கப்படும்’ என்று நோட்டீஸ் கொடுத்து உள்ளார்கள். அதற்கு பள்ளி

சூரிய ஒளி மின்சாரம் பயன்படுத்தினால் குற்றமா?''

சார்பில் முழுமையான விளக்கக் கடிதம் கொடுத்​தும்... அதை ஏற்றுக்கொள்ளாமல் பணம் செலுத்ததற்காக பள்ளியின் மின் சப்ளையைத் துண்டித்து விட்டார்கள்.

தமிழ்நாடே மின் பற்றாக்குறையால் தத்தளிக்கும் நிலையில், அதற்கு மாற்றாக நாங்கள் சூரிய ஒளி மின்சாரம் பெற முனைந்தது தவறா? நாங்கள் வெளி நாட்டில் இருந்து நிதிஉதவி பெற்றுத்தான் இந்தப் பள்ளியை நடத்துகிறோம். நாங்கள் உபயோகிக்காத மின்சாரத்துக்கு பணம் செலுத்தச் சொன்னால்,  எங்களால் எப்படி செலுத்த முடியும்?

மின் துறையால் வழங்கப்பட்ட மின் மீட்டர் பழுது என்கிறார்கள். உண்மையில் பழுது என்றால், அவர்​கள் மின் அளவுக் குறிப்பு பார்க்க வரும்போதே தெரிந்திருக்காதா? அப்போதே அதை அவர்கள் மாற்றி இருக்கலாமே? நாங்கள் சூரிய ஒளி கொண்டு, ஒரு நாளைக்கு சுமார் 12,600 வாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்​கிறோம். எங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் சுமார் 4,000 ரூபாய் வரை மின்​சாரக் கட்டணம் வந்து கொண்​டிருந்தது. அது முழுமை​யாகக் குறைந்துவிட்டது.

அந்தப் பணத்தை வைத்து, எங்கள் பள்ளிக் குழந்தைகளின் பல தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்ற சந்தோஷத்தில் இருந்தோம். மேலும், சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதால், அரசிடம் மானியம் வாங்கலாம் என்றும் முயற்சித்து வருகிறோம். இந்த நிலையில் எங்களுக்கு அபராதக் கட்டணம் விதிக்கப்பட்டதும், சப்ளை துண்டிக்கப்பட்டதும் மிகப்பெரிய வருத்தம்'' என்று ஆதங்கத்தோடு சொன்னார்.

திருவண்ணாமலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் வெங்கட்ராமனிடம் இதுபற்றிக் கேட்டோம். ''வாரியத்தின் மின்சாரத்தையும் அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதற்கான பணம் செலுத்தவில்லை என்பதால், இணைப்பைத் துண்டித்து இருக்கிறோம். இதுபற்றி, சென்னையில் இருந்து விவரம் கேட்டு வாங்கி உள்ளனர்'' என்றார் மேலோட்டமாக.

மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ் வநாதனிடம் பேசினோம். ''அபராதம் விதிக்கும் அளவுக்கு மின்வாரிய அதிகாரிகள் சென்றிருக்க வேண்டாம். எச்சரித்து இருக்கலாம். இதுபற்றி நான் விசாரிக்கிறேன்'' என்றார்.

பாராட்ட மனம் இல்லை என்றாலும், பாதகம் செய்யாமல் இருக்கலாமே!

- கோ.செந்தில்குமார்

படங்கள்: பா.கந்தகுமார்