Published:Updated:

உச்சங்களின் யுகம்

உச்சங்களின் யுகம்

(வரலாற்றுப் பதிவுகள்), எஸ்.வி.ராஜதுரை, பொன்னி வெளியீடு, 2/1758 சாரதி நகர், என்ஃபீல்டு அவென்யூ, மடிப்பாக்கம், சென்னை-91. விலை

உச்சங்களின் யுகம்

140/-  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
உச்சங்களின் யுகம்

கம்யூனிஸம் என்ற தத்துவம், கம்யூனிஸ எதிர்ப்பாளர்களால் அல்ல... கம்யூனிஸத்தை ஏற்றுக்கொண்டவர்களாலேயே எப்படிச் சீரழிக்கவும் சிதைக்கவும் பட்டது என்பதை விளக்கும் வரலாற்றுப் பதிவுகளின் தொகுப்பு இது!

சோவியத் ரஷ்யாவில் நடந்த பாட்டாளி வர்க்க சோஷலிசப் புரட்சியும், சீனாவில் நடந்த பாட்டாளி வர்க்கப் பண்பாட்டுப் புரட்சியும், ஏகாதிபத்தியக் குணாம்சத்திலும் சந்தைப் பொருளாதாரத்திலும் முட்டி நின்றுவிட்டு, 20 ஆண்டுகள் கடந்த சூழ்நிலை​யில், எஸ்.வி.ராஜதுரையின் இந்தத் தொகுப்பு அர்த்த​முள்ளதாக இருக்கிறது.

''புரட்சியாளர்களின் அமைப்பு ஒன்றை எங்களுக்​குத் தாருங்கள். நாங்கள் ரஷ்யாவைப் புரட்டிக் காட் டுகிறோம்'' என்ற லெனின், அதற்கு வசதியான இறுக் கமான கட்சி ஒன்றை வடிவமைத்தார். படித்தவர்​களை சந்தேகக் கண் கொண்டே எப்போதும் பார்த்த லெனின், பாட்டாளிகளில் இருந்தே புதிய தலைவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும் என்று சொன்னார். இதைத் தவறுதலாகப் புரிந்துகொண்ட ஸ்டாலின்... அறிவாளிகளையே அப்புறப்படுத்தினார். அடுத்தடுத்து வந்த யெல்த்சின்... பாட்டாளிகளையே தூரத்தில் வைக்கத் தொடங்கினார். புரட்சியின் இரட்டை சக்திகளும் முடக்கப்பட்டதால், ரஷ்யா திரிந்து போனது. இந்த வரலாறுகள், எஸ்.வி.ஆரால் விவரிக்கப்படுகின்றன. 'ஸ்டாலினின் மறைவுக்குப் பிறகு, சோவியத் அரசாங்கமும் கட்சியும், சமுதாயத்தின் எல்லாப் பிரிவுகளுக்கும் பொதுவான சட்டங்களுக்கு உட்பட்டு நடக்கவில்லை’ என்பதற்கு ஆதார சாட்சிகள் அனைத்தையும் அடுக்குகிறார் எஸ்.வி.ஆர்.

ரஷ்யாவுக்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல சீனா!

##~##

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மீதும் அரசாங்கத்தின் மீதும் பரவலான அதிருப்தியும் கோபமும் வெளிப்​படுத்த மாணவர்களும் தொழிலாளர்களும், 1976 ஏப்ரலில் பெய்ஜிங் நகரின் தியனன்மென் சதுக்கத்தில் கூடினார்கள். ஆறு வார காலம் நடந்தது இந்தப் போராட்டம். ஒரு நாள் நள்ளிரவில் 40 ஆயிரம் துருப்புகளை உள்ளே விட்டு அனைவரையும் சுட்டுப் பொசுக்கிய விடியலில் 7,000 பேர் மாண்டதாகவும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் பதிவானது.

'எதிர்ப்புரட்சி நசுக்கப்பட்டது’ என்ற தத்து வார்த்த விளக்கத்துக்குப் பின்னால் இருந்தது எப்படி பொதுவுடைமைத் தத்துவமாக இருக்க முடியும்?

எஸ்.வி.ராஜதுரை, கம்யூனிஸ எதிர்ப்பாளர் அல்ல. அவரது 40 ஆண்டு கால அரசியல் மற்றும் எழுத்துப் பங்களிப்புகள் அந்தத் தத்துவத்துக்கு உறுதுணையாகவே இருந்துள்ளன என்பதைப் படிப்ப​வர்கள் உணருவார்கள். சோவியத் முகாமின் தகர்வும் சீனாவின் நிற மாற்றமும் அவரை மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறது. ''கட்சி சர்வாதிகாரம், தன்னிச்சையான ஒடுக்கு முறைகள், தனிமனிதத் துதிபாடல், கொடூரமான தணிக்கை முறைகள், சித்திரவதை முகாம்கள், கட் டாய உழைப்பு முகாம்கள் ஆகியன இல்லாத சோசலிஸத்தை உருவாக்க முடியும்'' என்று நம்பும்  மனிதர்களில் ஒருவர் எஸ்.வி.ஆர்..

'உனக்கும் சேர்த்து கட்சித் தலைமையே சிந்திக்கும்’ என்ற சர்வாதிகாரத் தலைமைகளை எதிர்க்கத் தூண்டு​கிறது இந்தப் புத்தகம்!

- புத்தகன்