Published:Updated:

பீகார்... பிஸ்டல்... பீதி!

சென்னை போலீஸ் வேட்டை

##~##

மோசமான நபரை ஆங்கிலத்தில் 'சன் ஆஃப் எ கன்’என்று திட்டுவார்கள். பிஸ்டலுடன் திரியும் பீகார் மாணவர்களை அப்படித்​​தான் திட்டுகிறார்கள் சென்னை போலீஸார். பழைய மகாபலி​புரம் சாலையில் உள்ள தனி​யார் பல்கலைக்​கழகம் ஒன்றில் பொறியியல் படிக்கும் பீகாரைச் சேர்ந்த மாணவர்கள் இருவரை, கள்ளத் துப்பாக்கி வைத்து இருந்ததாக கைது செய்​துள்ளது போலீஸ். 

இதுகுறித்து, தென்சென்னை போலீஸ் இணைஆணையர் சண்முகராஜேஸ்வரன், ''பீகாரைச் சேர்ந்த சகோதரர்கள் சத்தி​யராய், அம்ரித்பூரி ஆகிய  இருவரும், வெட்டுவாங்கேணியில் தங்கி இருக்கும் மாணவர்களான ப்ரதோஷ் பாண்டே, சேகர் ஆனந்த் ஆகியோரிடம் சமையல் பணி செய்தவர்கள். தங்களது சம்பளப் பாக்கியைக் கேட்டபோது பணத்தைத் தராமல் துப்பாக்கியைக் காட்டி சத்தியராயை மிரட்டி இருக்கிறார்கள் மாணவர்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பீகார்... பிஸ்டல்... பீதி!

இதுகுறித்து நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மாணவர்களின் அறையை சோதனை போட்டு ஒரு கள்ளத் துப்பாக்கி​யையும் நான்கு தோட்டாக்களையும் கைப்பற்றினோம்.  ப்ரதோஷ் பாண்டே, சேகர் ஆனந்தை கைது செய்துள்ளோம். கைப்பற்றப்பட்ட துப்பாக்கியை சைலேஷ் யாதவ் என்ற கல்லூரி அட்மிஷன் புரோக்கர் கொடுத்துவிட்டுச் சென்றதாக இருவரும் தெரிவித்து உள்ளனர். இப்போது அவரையும் தேடி வருகிறோம்...'' என்றார்.

பீகார்... பிஸ்டல்... பீதி!

''இந்தியாவில் பீகார்தான் ஆயுதங்களுக்கான மிகப்பெரிய கள்ள மார்க்கெட். நேஷனல் க்ரைம் ரிக்கார்ட்ஸ் பீரோவின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆயுதத் தடை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 35.41 சதவிகிதம் பீகாரில் மட்டுமே பதிவாகி உள்ளது. 2006-ம் ஆண்டில் மட்டும் பீகாரில் 151 சட்டவிரோதத் துப்பாக்கித் தொழிற்சாலைகளில் 30 ஆயிரம் கள்ளத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. 2010-ம் ஆண்டு 10 ஆயிரம் கள்ளத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. 30 ஆயிரம் ரூபாய் தொடங்கி 1.5 லட்சம் வரை இவர்களிடம் துப்பாக்கிகள் கிடைக்கின்றன. இதனால்தான், பீகாரைச் சேர்ந்த மாணவர்களிடம் துப்பாக்கி சர்வ சாதாரணமாகப் புழங்குகிறது'' என்கிறார் ஒரு அதிகாரி.

தமிழக போலீஸ் இன்னும் அலெர்ட்டாக இருக்க வேண்டும்!

- டி.எல்.சஞ்சீவிகுமார், படங்கள்: வீ.நாகமணி