Published:Updated:

''வரும்போதே, கரன்ட் கொண்டு வந்திருக்க வேண்டாமா?''

ரெய்டு போலீஸ்... கிண்டல் வேலு!

##~##

.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல், இதுவரை 11 முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். இந்த லிஸ்ட்டில் லேட்டஸ்ட் எ.வ.வேலு! 

கடந்த தி.மு.க. ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதை அடுத்து, கடந்த 22-ம் தேதி வேலுவுக்குச் சொந்தமான அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் புகுந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், அதிரடி சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை அள்ளிச் சென்றுள்ளனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திருவண்ணாமலையில் உள்ள அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜீவா வேலு ரெசிடென்ஸியல் பள்ளி, குமரன் பாலிடெக்னிக், வேங்கிக்காலில் உள்ள கம்பன் ஐ.டி.ஐ., காம்பட்டில் உள்ள அருணை கிரானைட்ஸ், கொளக்குடியில் உள்ள அருணை வாட்டர்ஸ்,

''வரும்போதே, கரன்ட் கொண்டு வந்திருக்க வேண்டாமா?''

கச்சிராப்பட்டில் உள்ள அருணை ஜல்லி உடைக்கும் நிலையம், சே.கூடலூரில் உள்ள வீடு, திருவண்ணாமலை - பாலாஜி நகரில் உள்ள வேலுவின் தம்பி மனோகரன் வீடு, அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள வேலுவின் வீடு மற்றும் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வேலுவின் வீடு ஆகிய இடங்களில் ரெய்டு.

இந்தச் செய்தி திருவண்ணாமலை தி.மு.க. வட்டாரத்தை எட்டியதும், முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை நகரமன்ற முன்னாள் தலைவர் ஸ்ரீதரன் தலை​மையில் தி.மு.க. கவுன்சிலர்கள், தி.மு.க. வழக்கறிஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அருணை கல்லூரி வளாகத்தை நோக்கிப் படைஎடுத்து வரத்தொடங்கினர். ஆனால், வேலுவின் மனைவி ஜீவாவோ ரெய்டு நடந்து​கொண்டு இருந்த நேரத்திலேயே, அனுமதி வாங்கிக்கொண்டு எந்தவிதமான சலனமும் இல்லாமல், திருவண்ணாமலை மலையில் உள்ள கிளிக்குகை ஆசிரமத்துக்குச் சென்று சாமி கும்பிட்டு விட்டுத் திரும்பினார்.

திரண்டு நின்ற தொண்டர்களிடம் பேசி​னோம். ''இந்த ஆட்சியில் எல்லோர் வீட்டுக்கும் போலீஸ் போகுது. நம்ம வீட்டுக்கு மட்டும் இதுவரை வரலையேன்னு ரொம்ப நாளாவே எங்ககிட்ட அண்ணன் கிண்டலாச் சொல்லிட்டு இருந்தார். நாங்களும் இப்படி ஒரு ரெய்டு வரும்னு ரொம்ப நாளாவே எதிர்பார்த்துக் காத்துஇருந்தோம். இப்பத்தான் வந்திருக்​​காங்க. என்னதான் சல்​லடைப் போட்டுத் தேடினாலும் ஒண்ணும் கிடைக்​காது. அண்ணனுக்கு எல்லா இடத்திலும் ஆளுங்க இருக்காங்க. நேரத்தை வேஸ்ட் பண்ணாம, சீக்கிரம் கிளம்பச் சொல்லுங்க'' என்று நமுட்டு சிரிப்பு சிரித்தனர்.

''வரும்போதே, கரன்ட் கொண்டு வந்திருக்க வேண்டாமா?''

ஆனால், சோதனையின் முடிவில் திருவண்ணாமலை வீட்டில் இருந்து சொத்து தொடர்பான பல்வேறு ஆவணங்களையும், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்குகளையும் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் எடுத்துச் சென்றதாகத் தகவல்.

ரெய்டு நேரத்தில் சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டில்தான் வேலு இருந்தார். அங்கு, டி.எஸ்.பி. சரஸ்வதி தலைமையில் சோதனை நடந்தது. காலை 9 மணிக்கே வீட்டின் முன் கட்சிக்காரர்களும், வழக் கறிஞர்களும் பெருந்திரளாகக் கூடிவிட்டனர். அடுத்த சில நிமிடங்களில், முன்னாள் அமைச்சர்

''வரும்போதே, கரன்ட் கொண்டு வந்திருக்க வேண்டாமா?''

பொன்முடி ஸ்பாட்டுக்கு வரவே, பலத்த ஆரவாரம். பூட்டியிருந்த கேட் அருகே போன பொன்முடி, 'நானும் உள்ளே வர்றேன். கதவைத் திறங்க’ என்று கேட்டார். ஆனால் போலீஸாரோ, 'சாரி சார்... நோ என்ட்ரி’ என கண்டிப்பாக கூறிவிட்டனர்.

திரண்டிருந்த மீடியாக்கள் பக்கம் திரும்பிய பொன்முடி, 'ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தது முதல் அரசியல் காழ்ப்பு உணர்ச்சிகொண்டு தி.மு.க-வினரைப் பழிவாங்குவதிலேயே அதிக நேரம் செலவிடுகிறார். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை. இந்த விவகாரத்தைச் சட்டப்படி எதிர்கொள்வோம்'' என்று கூறிவிட்டு, அங்கிருந்து கிளம்பினார்.

அதன் பின்னர் கேட் அருகே போன சிலர், ''நாங்கள் எல்லாம்  அட்வகேட். எங்களை உள்ளே போகக் கூடாதுன்னு சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது'' என்று போலீஸிடம் வாக்குவாதம் செய்தபடி கதவை நெட்டித் தள்ளினர். அவர்களைப் பெரும்பாடுபட்டு சமாதானப்படுத்திய போலீஸார், இறுதியில் ஒருவரை மட்டும் வீட்டுக்கு அனுமதித்தனர்.

11 மணி வாக்கில் அந்த ஏரியாவில் கரன்ட் கட் ஆனது. இதனால்வீட்டில் இருந்த கம்ப்யூட்டரை சோதனை செய்ய முடியாமல் தவித்த போலீஸார், வெளியில் இருந்து இரண்டு யு.பி.எஸ்-களைக் கொண்டுவந்து சோதனையைத் தொடர்ந்தனர். சோதனை டீமில் இருந்த சில காக்கிகள், கரன்ட் இல்லாத புழுக்கத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் காற்றுக்காக வராண்டாவில் அமர்ந்து, ரிலாக்ஸ்டாக பேப்பர் படிக்கத் தொடங்கினார்கள்.

இதைப் பார்த்து புன்னகைத்த வேலு, 'இந்த ஆட்சியோட லட்சணம்தான் உங்களுக்கு நல்லாத் தெரியுமே... வரும்போதே கரன்ட் கொண்டு வந்திருக்க வேண்டாமா’ என்று கேட்க, போலீஸார் அசட்டுச் சிரிப்பு சிரித்தார்களாம்.

எல்லாம் நேரம்தான்!

- தி.கோபிவிஜய், கோ.செந்தில்குமார்

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், பா.கந்தகுமார்