Published:Updated:

சாத்தியம் ஆகுமா விஷன் 2023?

சாத்தியம் ஆகுமா விஷன் 2023?

##~##

ஜெயலலிதாவின் கனவைப் படிக்கும்​போது பெருமையாக இருக்கிறது. ஆனால், அவை அத்தனையும் சாத்தியம் ஆகுமா என்ற சந்தேகமும் வருகிறது! 

தனி நபர் வருமானம் ஆறு மடங்காக உயரும், உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள், அனைத்துக் கிராமங்களிலும் இன்டர்நெட், இரண்டு கோடி இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி, சிறந்த மருத்துவச் சுற்றுலா மையம், இரண்டு மருத்துவ நகரங்கள், சென்னை அருகே கிரீன்ஃபீல்டு விமான நிலையம், சென்னை - கோவை - மதுரை - கன்னியாகுமரி இடையே அதிவேக ரயில் போக்குவரத்து, 2,000 கிமீ தூரத்துக்கு ஆறு மற்றும் எட்டு வழிச் சாலைகள், 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க புதிய மின் திட்டங்கள் என்று தன்னுடைய 'விஷன் - 2023’ திட்டத்தை அறிவித்து இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. 'தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023’ (விஷன் 2023) என்கிற அறிக்கை எந்த அளவுக்குச் சாத்தியம் என்று பொருளாதார நிபுணர்கள் சிலரிடம் பேசினோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சாத்தியம் ஆகுமா விஷன் 2023?

நாகப்பன் (நிதி ஆலோசகர்): ''முதல்வரின் தொலைநோக்குத் திட்ட அறிக்கை கச்சிதமாக இருக்கிறது. இந்த இலக்கை எட்டுவதற்கான பணத்தை எப்படிச் சமாளிக்கப்போகிறார்கள் என்பதையும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். வரி வருவாயையும் மத்திய அரசு வசூலிக்கும் வரியில் மாநிலத்துக்கு கிடைக்கக்கூடிய தொகுப்பையும் வைத்து சமாளிப்போம் என்கிறார்கள். மத்திய அர​சோடு இருக்கும் சுமுகமான சூழ்நிலையைப் பொறுத்தே நிதி உதவி கிடைக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின்போது, 2002-2003-ல் பற்றாக்குறை 4.26 சத விகிதமாக இருந்தது. ஆட்சியின் இறுதிக் காலத்தில் அதாவது 2005-2006-ல் அதை 0.8 சதவிகிதமாகக் குறைத் தார்கள். அதற்குக் காரணமே வருவாயை அரசு

உயர்த்தியதுதான். இப்போதும் மனது வைத்தால் செய்ய முடியும்.

அரசு வாங்கும் கடனைத் திருப்பி அளிக்க வேண்டுமானால், வரி விதித்தால் மட்டுமே முடியும். கடனை முழுவதுமாக அடைப்பது பற்றி தெளி​வாகக் குறிப்பிடவில்லை. இலவசங்களையும் மானியங்​களையும் அரசு குறைத்தால்தான், தொலைநோக்கை எட்ட முடியும். ஆனால், அதற்கு அரசியல் தன்னம்பிக்கை அவசியம். ஒரு முன்மாதிரி சமூகம் உருவாவதற்கான அனைத்து அம்சங்​களும் இந்த தொலை​நோக்கில் இருக்கிறது.

சாத்தியம் ஆகுமா விஷன் 2023?

ஆனால், அதை எட்ட பணம்தான் சவா​லானவிஷயம். பணத்தைத் திரட்ட முடிந்தால், இது சாத்தியமே!''  

எம்.ஆர்.வெங்கடேஷ் (ஆடிட்டர்): ''அடிப்படைக் கட்டமைப்புகள் மற்றும் உற்பத்தித் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்​திருப்பது வரவேற்கத்தக்க விஷயம். விவசாயம், நீர்ப்பாசனத் திட்டங்கள் பற்றி விரிவாக அலசப்படவில்லை. மனிதவள வளர்ச்சி பற்றியும் இந்த அறிக்கையில் எதுவும் இல்லை. திறமையான பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வரு​கி றது. கல்வி நிலையங்களின் கல்வித் தரம் உயர்ந்தால் மட்டுமே, திறமையான பணி​யாளர்கள் கிடைப்பார்கள். இதற்கு எந்த வழி​வகையும் தொலைநோக்குத் திட்டத்தில் சொல்லப்படவில்லை.

மின்சார உற்பத்தித் திட்டங்கள் பற்றி விரிவாகச் சொல்லி இருந்தாலும், அதை எப்படி நடைமுறைக்குக் கொண்டுவருவார்கள் என்பது தெரியவில்லை. முதல்வர் நினைத்தால் இதைச் செயல்படுத்த முடியும் என்றாலும், எல்லா விஷயங்களுக்கும் முதல்வரால் மட்டுமே முடியும் என்பது சரியான பாதையாக இருக்காது. முதல்வருடன் இருக்கும் அமைச்சர்களும் சேர்ந்து உழைக்க வேண்டும். சச்சின் மட்டுமே ஆடி மேட்ச்சை ஜெயிக்க வைக்க முடியாது. 11 பேரும் விளையாடினால்தான் வெற்றி கிடைக்கும். அதனால், இது நடைமுறைக்கு வருமா என் பதை செயல்பாட்டில் இருந்துதான் பார்க்க முடியும்.

இன்னொரு பக்கம் அதிகாரிகள் செயல்​திறனும் முக்கியம். 2,000 கி.மீ தூரத்துக்கு ஆறு மற்றும் எட்டு வழிச் சாலைகள் அமைக்கப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள். சென்னை சாலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கே திறன் இல்லாத அதிகாரிகளை வைத்துக்கொண்டு, இதெல்லாம் சாத்தியமா என்று தெரியவில்லை.

தொலைநோக்கு அறிவிப்புகளை நிறை​வேற்றுவதற்குப் பணம் தேவை. இலவசங்​களைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே இந்த அறிவிப்புகளை நிறைவேற்றுவது பற்றி யோசிக்க முடியும். குவார்ட்டர் இலவசமாகக் கிடைக்குமா என்று மக்களை பழக்கி வைத்துவிட்ட நிலையில், இலவசத்தைத் துறக்க மக்கள் முன்வருவார்களா? ஆட்சி​யாளர்கள், அதிகாரிகள், மக்கள் மூவரும் சரியாக இருந்தால் மட்டுமே தொலைநோக்கை எட்ட முடியும்.''

மாணிக்கம் ராமசாமி (நிர்வாக இயக்குநர், லாயல் டெக்ஸ்): தொலைநோக்கில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களில் 50 சதவிகிதம் நடந்தாலே, தமிழ்நாட்டுக்கு நல்லது. பாராட்டத்தக்க தொலைநோக்குத் திட்டம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மின்சாரப் பற்றாக்குறை இருக்கும்போது, எப்படி புதிய வர்த்தகம், புதிய முயற்சிகள் சாத்தியம் ஆகும்? விவசாய மேம்பாட்டுக்கு அடிப்​படையாக இருப்பதே நீர்தான். நீர் வளத்தை உருவாக்காதபோது எப்படி விவசாயம் வளரும்? சில அம்சங்களுக்கு முதலில் நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இந்த இலக்கை எட்டுவதற்கு சரியான நிர்வாகம் இருக்க வேண்டும். 1965-க்கு முன்பு இருந்த காமராஜர், கக்கன், வெங்கட்ராமன் போன்ற ஆட்சியாளர்களின் காலத்தைப்போல இப்போதும் ஆட்சி நிர்வாகம் நடந்தால், இலக்கை எளிதாக எட் டலாம். நேர்மையான லஞ்ச ஊழல் இல்லாத அரசில் இது சாத்தியம். குஜராத்தை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். இலக்கை எட்டுவதற்காக அடிப்படைக் காரணமே சரியான நிர்வாகம்தான்!''

ஜெயலலிதாவின் செயல்பாடு இந்தக் குறைபாடுகளைத் தவிர்ப்பதாக அமைந்தால்... விஷன் பூர்த்தியாகும்!

- எம்.பரக்கத் அலி

படம்: என்.விவேக்