Published:Updated:

அறியப்படாத தமிழ் உலகம்

ஜூ.வி. நூலகம்

தொகுப்பாசிரியர்கள்: பா.இளமாறன், ஜ.சிவக்குமார், கோ.கணேஷ், புதிய புத்தகம் பேசுது,

421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18. விலை

அறியப்படாத தமிழ் உலகம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

.225/-

##~##

ணக்கற்ற மனிதர்களும் கோடிகளில் மானியங்களும் கொண்ட பெரும் பல்கலைக்கழகங்கள் பார்க்க வேண்டிய வேலையைச் சில தனிமனிதர்கள் தங்களது ஆர்வத்தின் மூலமாகச் சிறப்பாகச் செய்து வருகிறார்கள். இதற்கு நல்ல உதாரணம், 'அறியப்படாத தமிழ் உலகம்’ என்ற செறிவான தொகுப்பு நூல்.

'புதிய புத்தகம் பேசுது’ சார்பில் வெளியிடப்படும் மூன்றாவது முக்கிய ஆவணம் இது. தமிழ்ப் பதிப் புலகம் (1800-2009), தமிழ்நூல் தொகுப்பு வரலாறு (சங்ககாலம் முதல் சமகாலம் வரை) ஆகிய இரண்டு ஆவணங்கள் ஏற்கெனவே இவர்களால் வெளியிடப்பட்டு உள்ளன. தமிழ்ப் பதிப்பு, தமிழ்நூல் தொகுப்பு, அறியப்படாத தமிழ் ஆளுமைகள் என்று, இலக்கியத் தரவுகளைச் சொல்லிச் சிலாகிக்காமல்,

அறியப்படாத தமிழ் உலகம்

சமூகவியல் நோக்கில் ஆவணப்படுத்தி வருவதுதான் தொடர் வெற் றிக்கு அடிப்படையாக இருக்க முடியும். 'சமூக இடைவெளிகளை இட்டு நிரப்பும் முயற்சி’ என்று இதைச் சொல்கிறார்கள்.  உண்மைதான்!

சொன்ன பெயர்களையே திருப்பித் திருப்பிச் சொல்லி.... அறிந்த புத்தகங்களையே அடுத்தடுத்து மேற்கோள்காட்டி பல்கலைக்கழக ஆய்வேடுகளாக தமிழ் ஆய்வுச் சூழல் தேங்கிய காலத்தில், ஒரு தொகு ப்பில்... எல்லாமே புதிய தகவல்களாக இருந்தால்..? அப்படித்தான் இருக்கிறது இந்தத் தொகுப்பு.

செங்கோட்டை ஸ்ரீஆவுடை அக்காள், ஜே.எம். நல்லசாமிப் பிள்ளை, அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயகர், சித்தி ஜுனைதா பேகம், மேஜர் கிருஷ்ண மூர்த்தி போன்ற கேள்விப்படாத முகங்களை இதில் தரிசிக்கலாம். நெல்லை மாவட்டம் செங்கோட்டை என்ற ஊரில் 17-ம் நூற்றாண்டில் ஓர் ஏழைப் பிரா மணக் குடும்பத்தில் பிறந்த ஆவுடை அக்காள் என்ற பெண், கல்யாணம் என்றால் என்னவென்று தெரி யாத வயதில் விதவைக் கோலமும் தாங்கினார். இத்தகைய வாழ்க்கை வெறுமையில் இருந்து பாடல் கள் புனைய ஆரம்பித்த ஆவுடை அக்காளின் பாடல்கள்தான் நெல்லை வட்டாரத் திருவிழாக் காலங்களில் அதிகம் ஒலித்திருக்கிறது. அவரை இன்று இந்தப் புத்தகம் அறிமுகம் செய்கிறது. ஆனால், 1940-களில் இல்லஸ்டிரேட்டட் வீக்லியில் 'சிஸ்டர் ஆவுடை’ என்ற தலைப்பில் கட்டுரை வந்த தகவல் அதிசயமாக இருக்கிறது.

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் நாகூரில் பிறந்த வர் சித்தி ஜுனைதா பேகம். 'தமிழ் நாவல் எழுதிய முதல் முஸ்லிம் பெண்’ என்று இவரைச் சொல்கிறார் கீரனூர் ஜாகீர் ராஜா. சித்தியின் நாவல் தலைப்பு 'காதலா கடமையா’. ஒரு முஸ்லிம் பெண், அதுவும் காதலைப் பற்றி எழுதலாமா என்று சுற்றுவட்டாரப் பெண்கள் எல்லாம் அவரை வந்து வந்து பார்த்துச் சென்றார்களாம். ''சும்மா அல்ல. கெட்டுப்போன ஒரு நல்ல குடும்பத்துப் பெண்ணை விசாரிக்க வருவது போல!''

திராவிட இயக்கத்தின் கருதுகோள்களுக்கு அடித்தளம் அமைத்தவர்களில் ஒருவரான  எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை முதல்... ஏதோ ஒரு நோக்கத்துக்காக இங்கே வந்து தமிழ் படிப்பதில், விமர்சிப்பதில், தொகுப்பதில் முழு வீச்சில் இறங்கிய ஐரோப்பியர்களை அடையாளப்படுத்துவது வரை... பக்கத்துக்குப் பக்கம் அறியப்படாத ஆளுமைகள். ஆண்டுக்கு ஒரு முறை இதுபோன்ற தொகுப்புகள் வந்தால், அறியப்படாதவர் யாரும் இனி இல்லை என்ற நிலை வரலாம்!

- புத்தகன்