Published:Updated:

பொண்ணுங்க மனசு ஒண்ணுதானுங்க!

கடல் கடந்து வந்த காதல்

பொண்ணுங்க மனசு ஒண்ணுதானுங்க!

கடல் கடந்து வந்த காதல்

Published:Updated:
##~##

பிடித்து இருந்தால் சேர்ந்து வாழ்வது, இல்லை என்றால் வெட்டி​விடுவது​​தான் வெளிநாட்டுப் பெண்களின் ஸ்டைல் என்று நினைப்​போம். அப்படி இல்லை என்று நிரூபித்து இருக்கிறார் ஒரு இத்தாலிப் பெண். அவரது கதையைக் கேட்போம்!     

திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் இந்தர் கணேஷ். அமெரிக்காவில் இருக்கும் கப்பல் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் தேனியைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகள் ப்ரியாவுக்கும் கடந்த 2.11.11 அன்று  நிச்சயதார்த்தம் நடந்தது. அதன்படி வரும் 23.5.12 அன்று திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து கிளம்பி​வந்த இத்தாலிய இளம்பெண் ஒருவர், 'தனக்கும் இந்தர் கணேஷ§க்கும் ஏற்கெனவே பதிவு திருமணம் நடந்து​விட்டது. நாங்கள் தம்பதியாக வாழ்ந்து வருகிறோம். என்னைவிட்டு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்ய

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொண்ணுங்க மனசு ஒண்ணுதானுங்க!

இருப்​பதாகக் கேள்விப்பட்டேன். அதனை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று புகார் கொடுக்கவே, இப்போது சிறை​யில் இருக்கிறார் திண்டுக்கல் மாப்​பிள்ளை!

திருமணம் நிச்சயம் செய்யப்​பட்டு இருந்த ப்ரியாவின் தந்தை ஜெயபாலிடம் முதலில் பேசினோம். ''நான் ரொம்பக் கஷ்டப்​பட் டுத்தான் என் பொண்ணை படிக்க​ வெச்சேன். தெரிஞ்சவர் மூல​மாத் தேனியைச் சேர்ந்த போஸ் என்பவரோட மகன், இந்தர் கணேஷை நிச்சயம் பண்ணினோம். கல்​​யாணத்​துக்கு 50 பவுன் நகையும், அஞ்சு லட்ச ரூபாய் பணமும் தர்றதாச் சொன்னோம். நிச்சய​தார்த்தம் தடபுடலா நடத்திய அன்றைக்கே அஞ்சு லட்சம் ரூபாயையும் கொடுத்துட்டோம்.

இந்தர் கணேஷ் விடுமுறையில் ஊருக்கு வந்து இருந்தார். திடீர்னு அமெரிக்காவில் இருந்து இத்தாலியப் பொண்ணு ஒண்ணு, இந்தர் கணேஷ் வீட்டுக்கு வந்தது. 'இந்தர் கணேஷ் இங்கே கிளம்பி வந்து 40 நாட்​களுக்கு மேல் ஆச்சு. ஒரு போன்கூட பண்ணலை. மெயில் அனுப்பலை. இந்தர் கணேஷ் என் புருஷன்’னு சத்தம் போட்டு இருக்காங்க. அந்த நேரம் இந்தர் கணேஷ் வீட்​டுல இல்லை. அப்ப டேபிள் மேல இருந்த நிச்சயதார்த்தப் போட்டோவை பார்த்து அதிர்ச்சி அடைஞ்ச அந்தப் பொண்ணு,உடனே போட்டோ ஸ்டூடி​யோவுக்​குப் போன் பண்ணி, எங்க போன் நம்பரை வாங்கி என் பொண்ணுகிட்ட பேசினாங்க.

அந்தப் பொண்ணு பேர் லியோ நினா லூதர். இந்தர் கணேஷ் கூட அமெரிக்காவில் ஒண்ணா வேலை செய்யுதாம். நாலு வருஷத்துக்கு முன் னாடியே ரெண்டு பேரும் மோதிரம் மாத்தி, பதிவுத் திருமணம் செஞ்சுக்கிட்டு புருஷன் - பொண்டாட்டியா சேர்ந்து வாழுறாங்களாம். இந்தர் கணேஷ், ஊருக்கு வந்ததுல இருந்து போன் பண்ணலை... மெயில் பண்ணலைன்னு என்னாச்சோ ஏதாச்சோனு பதறிப்போய் அந்தப் பொண்ணு இங்கே வந்துச்சாம். இதை எல்லாம் என் பொண்ணுகிட்ட அந்த இத்தாலிப் பொண்ணு சொன்​னாங்க.

பொண்ணுங்க மனசு ஒண்ணுதானுங்க!

உடனே, நாங்க மிரண்டு​​போய் திண்டுக்கல் கிளம்​பிப் போ​னோம். அங்க அந்தப் பொண்ணு, எங்​களைப் பார்த்ததும் தடால்னு என் கால்ல விழுந்து, 'ப்ளீஸ் சேவ் மை லைஃப். ஹி இஸ் மை ஹஸ்பெண்ட்’னு கண்ணீர் விட்டு அழுதுட்​டாங்க. இத்தாலிப் பொண்​ணுன்​னாலும்... இந்தியப் பொண்ணுன்னாலும் எல்லாப் பொண்ணுங்களுக்கும் மனசு ஒண்​ணுதானுங்க. அதனால, போலீஸ்ல புகார் கொடுத்துட்​டோம். இதுல மனசு உடைஞ்ச என் பொண்ணு, பிளேடால கையைக் கிழிச்சிக்கிட்டா...'' என்றார் சோகமாக!

இந்தர் கணேஷ் பெற்றோரிடம் பேசினால், ''எங்களுக்கும் ஒண்​ணும் புரியலை. எந்த விஷ​யமும் தெரியலை..'' என்றனர். இது​குறித்து தேனி இன்ஸ்​பெக்டர் கோபியிடம் பேசினோம். ''புகார் வந்ததும், இந்தர் கணேஷ் வெளி​நாடு தப்பிச் செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் தகவல் கொடுத்தோம். அவருடன் சேர்த்து 14 பேர் மீது வழக்குப் போட்டு இருக்கோம். 22-ம் தேதி இந்தர் கணேஷ் வெளிநாட்டுக்குத் தப்பிக்க முயற்சி செஞ்சப்ப, சென்னை விமான நிலையத்தில் அவரைக் கைது செஞ்சோம். அவர் மேல் பெண்கள் வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் போட்டு இருக்​கோம். இந்தச் சம்பவத்தால் மனசு உடைஞ்சுபோன அந்தப் பொண்ணு, அமெரிக்காவுக்குத் திரும்பிப் போயிட்டாங்க. அவங்க​கிட்டேயும் விளக்கம் கேட்டு மெயில் அனுப்பி இருக்கோம்...'' என்றார்.

ப்ரியா வீட்டுக்கு லியோ நினா லூதர் அனுப்பிய புகைப்​படங்கள் அந்த இத்தாலிப் பெண்ணின் காதலைச் சொல்​கின்றன. சிறையில் இருக்கும் இந்தர் கணேஷ் என்ன சொல்லப்​போகிறாரோ?

- சண்.சரவணக்குமார்

படம்: வீ.சக்தி அருணகிரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism