Published:Updated:

இனி 'அது' குற்றம் அல்ல!

ஆனந்தத்தில் ஓரின ஈர்ப்பாளர்கள்

##~##

நீண்ட சர்ச்சைக்குப் பிறகு, ஓரின ஈர்ப்பாளர்கள் குறித்த தன்னுடைய ஆதரவு நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளது மத்திய அரசு. இந்த ஆதரவு காரணமாக எல்.ஜி.பி.டி. (ஆண் மற்றும் பெண் ஓரின ஈர்ப்பாளர்கள், இருபால் விரும்பிகள், திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள்) சமூகத்தினரும், அவர்​களுடைய ஆதரவாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த வழக்கின் ஆரம்பம் முதல் இப்போதைய நிலை வரை விவரிக்கிறார்கள் பாலியல் தொடர்பான மனித உரிமை குறித்த பணிகளில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர்கள் அனிருத்தன் வாசுதேவன் மற்றும் சிவக்குமார். 

'ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது 1860-ம் ஆண்டு மெக்காலே பிரபுவால் வரையறுக்கப்​பட்​டதுதான் இந்திய தண் டனைச் சட்டத்தின் 377-வது பிரிவு. இதன் துணைப்பிரிவில்,

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இனி 'அது' குற்றம் அல்ல!

'இயற்கைக்கு மாறான குற்றச் செயல்கள்’ என்ற தலைப்பில் சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறையும், ஓரின ஈர்ப்பும் வருகின்றன. அதாவது, ஆணும் பெண்ணும் இணையாமல், ஓர் ஆண் மற்றொரு ஆணுடனும், ஒரு பெண் மற்றொரு பெண்ணு டனும் அல்லது விலங்குகளுடன் இணைந்தால், ஆயுள் தண்டனை யும் அபராதமும் விதிக்கப்படும்.

இதை எதிர்த்து நாஸ் ஃபவுண்டேஷன் என்ற தனியார் என்.ஜி.ஓ. அமைப்பு, 2001-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது. இந்​தச் சட்டப் பிரிவு, எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவுதல் மற்றும் நோய் வராமல் தடுத்தல் போன்ற பணிகளுக்குத் தடையாக இருப்பதாக அந்த மனுவில் தெரிவிக்​கப்பட்டது. அதை எதிர்த்து அரசு சார்பில் மத்திய உள்​துறை அமைச்சகம், 'இந்தியச் சமூகம் ஓரின ஈர்ப்பை அங்கீகரிக்கவில்லை’

என்று சுட்டிக் காட்டியதால் வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டது.

மீண்டும் 2006-ல் உச்ச நீதி​மன்றத்தில் மேல் முறையீடு செய்தது நாஸ். 'மனுதாரரின் மனு வில் காணப்படும் விஷயங்களின் தகுதி அடிப்படையில் டெல்லி உயர் நீதி மன்றம் வழக்கை மறுபடியும்

இனி 'அது' குற்றம் அல்ல!

விசாரிக்க வேண்டும்’ எனத் தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். அதே ஆண்டு, ஹெச்.ஐ.வி. தடுப்பு முறைகளுக்கு 377-வது சட்டப் பிரிவு தடையாக இருக்கிறது என தேசிய எய்ட்ஸ் தடுப்பு அமைப்பு, இந்த வழக்குக்கு உறு துணையாக ஒரு பிரமாண மனுவைத் தாக்கல் செய்தது.

அதேசமயம், 'ஓரின ஈர்ப்பு என்பது இந்தியக் கலாசாரத்துக்கு எதிரானது என் பதால், இந்தச் சட்டம் நடைமுறையில் இருக்க வேண்டியது அவசியம்’ என்று பி.ஜே.பி-யைச் சேர்ந்த பி.வி.சிங்கால் என்பவர் மனுத்தாக்கல் செய்தார். இதற்கு இடையில், 'ஓரின ஈர்ப்பு சரி’ என மத்திய சுகாதாரத் துறை அமைச்​சக மும், 'ஓரின ஈர்ப்பு தவறு’ என மத்திய உள்துறை அமைச்சகமும் தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்து இருந்தன.

இந்த மனு மீதான இறுதிக் கட்ட வாதப் பிரதிவாதங்கள், நீதிபதிகள் ஏ.பி. ஷா மற்றும் ஜே.முரளிதர் ஆகியோர் முன்பு நடக்கலாம் என 2008-ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் நீதிபதிகள் கவனமாகக் கேட்டனர். 2008-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே இறுதி வாத ங்கள் முடிந்தாலும், 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் 2-ம் தேதிதான் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பின்படி, '18 வயதுக்கு மேற்பட்ட ஆணோ அல்லது பெண்ணோ, இருவரின் பரஸ்பர சம்மதத்துடன் தங்கள் பாலினத்துக்குள்ளேயே உறவு வைத்துக்கொள்வதை குற்றமாகக் கருத முடியாது’ என்றனர். உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து சுரேஷ் கவுஷல், பி.வி. சிங்கால், டெல்லி குழந்தைகள் உரிமைக் கமிஷன் உள்பட 13 பேர் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். ஓரின ஈர்ப்பாளர்களும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்தனர். நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, முகோபாத்யாயா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது.

சில நாட்களுக்கு முன் நடந்த விசாரணையில், 'ஓரின ஈர்ப்பு தொடர்பாக ஏற்கெனவே நடைபெற்ற வழக்கில் மத்திய அரசு ஏதாவது ஒரு கருத்தை உறு தியாகத் தெரிவிக்கவில்லை. நடுநிலையாக இருப்​ப தாகக் காட்டிக்கொள்வதற்காக சரி என்றும், தவறு என்றும் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தை மத்திய அரசு சாதாரணமாகக் கையாள்கிறது. இந்த நடவடிக்கை கண்டிக்கப்பட வேண்டியது’ என்று நீதிபதிகள் கடுமையாகச் சாடினார்கள்.

அதற்குப் பின்னரே, ஓரின ஈர்ப்பு குறித்த தனது ஒருமித்த நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளது. கடந்த புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி, 'ஓரின ஈர்ப்பு குற்றம் அல்ல என்பதை மத்திய அரசு ஏற்றுக் கொள்கிறது. உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்தத் தவறும் இல்லை’ என்றார். இப்போது, மத்திய அரசு தனது ஆதரவை வெளிப்படுத்தி உள்ளதால், கூடிய விரைவிலேயே உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்யும் என எதிர்பாக்கிறோம்!' என்​கிறார்கள் நம்பிக்கையாக!  

- சி. காவேரி மாணிக்கம்

படங்கள்: ச.இரா. ஸ்ரீதர்