Published:Updated:

நண்பர்கள் தினத்தில் காதலை கூறிய இளைஞர்: ஏற்க மறுத்த நர்சுக்கு கத்திகுத்து

சென்னை: நண்பர்கள் தினத்தை கொண்டாட இளம்பெண்ணை அழைத்து தனது காதலை வாலிபர் கூறியதால், ஏற்க மறுத்த அவருக்கு கத்திகுத்து விழுந்தது. சென்னையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னையை சேர்ந்த வாலிபர் வீணாசாகர். இவரது பெண் தோழி நர்ஸ் சாரதா. நண்பர்கள் தின கொண்டாட்டத்துக்கு சாரதாவை இன்று தியாகராயர் நருக்கு அழைத்துள்ளார் வீணாசாகர்.

நண்பர்கள் தின கொண்டாட்டத்துக்கு சென்ற சாரதாவிடம் திடீரென தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார் சாகர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாரதா, சாகரின் காதலை ஏற்க மறுத்துவிட்டார்.

இதனால், ஆத்திரம் அடைந்த சாகர், சாரதாவை கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த சாரதா, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

##~~##
இது குறித்து புகாரின் பேரில் வாலிபர் வீணாசாகரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நண்பர்கள் தின கொண்டாட்டத்தில் இளம்பெண்ணிடம் காதலை வெளிப்படுத்திய வாலிபரின் காதலை ஏற்க மறுத்த நர்சுக்கு கத்திகுத்து விழுந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.