Published:Updated:

தத்தளிக்கும் 'நாளைய' ஆசிரியர்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வு களேபரம்

##~##

ராணுவத்துக்கு ஆள் எடுப்பது போல் அடித்துப் பிடித்து வரிசையில் நிற்கி றார்கள். சேலத்தில் ஒரே நேரத்தில் 10,000 பேர் திரளவே, மிகப் பெரிய அளவுக்கு நிலவரம் கலவரம் ஆனது. தருமபுரியில் நிலைமையைச் சமாளிக்க முடியாத போலீஸ், கண்ணில் பட்ட வர்களை எல்லாம் அடித்து நொறுக்கியது. 20 தொடங்கி 50 வயது வரை ஆண்களும் பெண் களும் வெயிலையும் நெரிசலையும் பொருட்படுத்தாமல் தவித்து நிற்கிறார்கள். எல்லாம் எதற்காக? ஜூன் மாதம் 3-ம் தேதி நடைபெற இருக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத விண் ணப்பம் வாங்குவதற்குத்தான்! 

டி.டி.எட் படித்த இடைநிலை ஆசிரியர்கள், இதுவரை பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டார்கள். அதேபோல், பி.எட் படித்த பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வு மூலமும், வேலை வாய்ப்பகத்தின் பதிவு மூப்பு அடிப்படையிலும் பணி நியமனம் செய்யப்பட் டார்கள். ஆனால் இனி, அவர்கள் யாரையும் அப்படி பணி நியமனம் செய்ய முடியாத வகையில் மத்தியஅரசு தடை செய்துவிட்டது. இலவசக் கட் டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் ஆசிரியர் தகுதித் தேர்வு என்ற ஒன்றை, இந்த ஆண்டு அறிமுகம் செய்து இருக்கிறது கல்வித்துறை. அந்தத் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றால் மட்டுமே, இனி ஆசி ரியராக முடியும். வெற்றி பெற்றால் மட்டும் போதாது, அதற்குப் பிறகும் போட்டித்தேர்வு உள்ளிட்ட சில படிநிலைகள் இருக்கின்றன. அதையும் கடந்துதான் பணியில் சேர முடியும். அந்த முதல்கட்டத் தகுதித் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பம் வாங்கத்தான் முண்டி அடிக்கிறது கூட்டம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தத்தளிக்கும் 'நாளைய' ஆசிரியர்கள்

''மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த ஆசிரியர்களுக்கு இப்படி தகுதித்தேர்வு நடத்துவது

தத்தளிக்கும் 'நாளைய' ஆசிரியர்கள்

நியாயம்தான். ஆனால், அதை ஆசிரியர் கல்வி முடித்தவர்களுக்கு மட்டும் என்று வைக்காமல் சுண் டல் கொடுப்பது போல் இப்போது இறுதி ஆண்டு படித்துக்கொண்டு இருப் பவர்களும், பி.லிட் படித்தவர்களும் எழுதலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். 2 முடித்து வீட்டில் இருக்கும் பலர், தொலைதூரக் கல்வியில் ஏதாவது படிப்போமே என்று பி.லிட் படிக்கிறார்கள். இவர்கள்தான் போட்டி போட்டுக்கொண்டு மிக அதிக அளவில் விண்ணப்பங்கள் வாங்கக் குவிகிறார்கள். இந்த எண்ணிக்கையைத் தேர்வு வாரியம் எதிர்பார்க்க வில்லை. அதனால், விண்ணப்பங்கள் மிகக் குறைந்த அளவே அனுப்புகிறார்கள். ஆசிரியர் பயிற்சியோ அல்லது பி.எட் முடித்தவர்களோ மட்டுமே இந்தத் தேர்வை எழுதலாம் என்று வரையறை இருந்தால் இவ்வளவு கூட்டமும் இருக்காது, பிரச்னையும் வராது'' என்கிறார் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தி. இவர் கடந்த 2004-ல் இருந்து வேலைக்காகக் காத்திருப்பவர்.

தகுதித்தேர்வு விஷயத்தில் மிகக் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள், வேலை வாய்ப்பக பதிவு மூப்பில் இருப்பவர்கள். வேலைக்கு காத் திருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திண்டுக்கல் கார்த்திக், ''நாங்கள் 1992-93 ஆண்டு காலகட்டத்தில் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், பயிற்சி முடித்தவர்கள். ஆனால், அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் படித்தவர்கள் என்று கூறி எங்கள் படிப்பை ரத்து செய்தது அரசு. அதற்குப் பிறகு, 10 ஆண்டுகள் கடந்து 2002-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில், எங்களை அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் திரும்பவும் சேர்த்து இரண்டு ஆண்டு கள் படிக்க வைத்தார்கள். ஒரே படிப்பை இரண்டு முறை படித்த எங் களிடம் இன்னும் என்ன தகுதியை எதிர்பார்க்கிறார்கள்?

உச்ச நீதிமன்றமும், மத்திய அரசின் கட்டாயக் கல்விச் சட்டமும், மாநில அரசு விரும்பினால் மட்டுமே தகுதித் தேர்வு நடத்திக்கொள்ளலாம் என்கிறது. அதனால் சான்றிதழ் சரிபார்த்துக் காத்திருக்கிற 1,743 பேரையும் கடந்த ஆண்டு முதல்வர் அறிவித்த 9,000 பேரையும் தகுதித் தேர்வு இல்லாமல் பதிவு மூப்பு அடிப்படையிலேயே நியமிக்க வேண்டும்'' என்கிறார்.

தகுதித்தேர்வு குறித்த பயம் இவர்களுக்கு இருப்பதற்கு காரணம் இருக்கிறது. அதைச் சொல்கிறார் பதிவு மூப்பு பட்டதாரிகள் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ரத்தினகுமார். ''இந்தத் தகுதித்தேர்வு என்பது முழுக்க முழுக்க வசூல் செய்யும் தேர் வாகத்தான் நடக்கும். இப்போதே கரை வேட்டிக்காரர்கள் பேரம் பேச ஆரம்பித்து விட்டார்கள். அதனால், இந்தத் தகுதித் தேர்வை ரத்து செய்துவிட்டு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நியமனம் செய்ய வேண்டும்'' என்று கொதித்தார் அவர்.

பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ''மற்ற மாநிலங்கள் எல்லாம் கடந்த ஆண்டே கட்டாயக் கல்விச் சட்டத்தை நடை முறைப்படுத்தி விட்டன. நாம்தான் கால தாமதமாக இந்த ஆண்டு கொண்டு வந்து இருக்கிறோம். இது, ஆசிரியர்களைத் தேர்ந்து எடுக்கும் போட்டித்தேர்வு இல்லை, வெறும் தகுதித்தேர்வுதான். அதனால், தேர்வில் முறைகேடுகள்

நடக்க வாய்ப்பே இல்லை. தேர்வுக்குப் பிறகு, வெற்றி பெறுகிற இடைநிலை ஆசிரியர்கள் வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வு அடிப்படையிலும் தேர்ந்து எடுக்கப் படுவார்கள். அதனால், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி இந்தத் தேர்வை எழுதி ஆசிரியர்கள் தகுதியோடு வெளியே வரட்டும்'' என்று சொன்னார்.

அரசியல் விளையாடி விடாமல் பார்த்துக்கொள்வதுதான் முக்கியம்!

- கரு.முத்து

படங்கள்: கே.குணசீலன்