Published:Updated:

மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள்

ஜூ.வி. நூலகம்

தமிழில்: சிவ.முருகேசன், சந்தியா பதிப்பகம், பு.எண் 77, 53வது தெரு,

9வது அவின்யூ, அசோக் நகர், சென்னை-83. விலை

மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

.300/-  

##~##

மொகலாயப் பேரரசன் ஷாஜஹானுக்கு நான்கு ஆண் வாரிசுகள். இரண்டு பெண் வாரிசுகள். இந்த ஆறு பேரும் சேர்ந்து அன்பாலும் ஆத்திரப்பட்டும் அப்பாவை என்ன பாடு​படுத்தினார்கள் என்பதைச் சொல்லும் புத்தகம்!

மாமன்னராக இருந்தவர் தன் மகன்​களாலேயே அரண்மனைச் சிறையில் வைக்கப்பட்டதும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் வயிற்றை நோக்கி வாள் வீச முயற்சித்ததும் பதவி என்கிற மூன்று எழுத்துக்​காகத்தான். பேராசைப் புதல்​வர்​களை அடக்க அப்பா கண்டு பிடித்த வழி... நான்கு ஆண் வாரிசு​களையும் நாட்டின் நான்கு முக்கிய பகுதிகளுக்கும் வைஸ்ராயாக நியமித்தார். போன இடத்தில் மாகாணங்களைக் கவனிக்காமல் அப்பா இருக்கும் இடத்தை நோக்கியே நகர்ந்து வரத் தொடங் கினார்கள் மகன்கள்.

மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள்

மகள்கள் சும்மா இருப்பார்களா? மூத்த மகள் பேகம் சாஹேப், 'அப்பாவைக் கவனித்துக்கொள்கிறேன்’ என்று ஷாஜஹானுடன் இருந்தாள். இளைய மகள் தனது சகோதரன் ஒளரங்கசீப்புக்கு உளவு சொல்பவளாக அரண்மனையில் இருந்தார். மகன்கள் தாரா - ஒளரங்கசீப் சண்டை வாளால் நடந்தது என்றால் மகள்கள் பேகம் சாஹேப் - ரௌஷனரா பேகம் சண்டை வாயால் நகர்ந்தது. பேரரசர்கள் எதிரிகளோடு மோதுவதைவிட சொந்தங்களைப் பழிதீர்க்கச் செலவழித்த நேரமே அதிகமாக இருந்தது. குடும்பத்தினரின் நயவஞ்சகத்தையும் பக்கத்தில் இருந்து பார்த்த பெர்னியர், பக்கத்துக்குப் பக்கம் அதிர்ச்சியையே அவிழ்க்கிறார்.

ஒளரங்கசீப்பின் அண்ணன் தாராவுக்கு மருத்துவராக அவருடன் மூன்று ஆண்டு காலம் இருந்தவர் இந்த பெர்னியர். ''நாட்டின் விதியை வாளே முடிவு செய்யும் என்று நான்கு வாரிசுகளும் சூளுரைத்தனர். எப்படி ஷாஜஹான் தனது கரங்களை சகோதரர்களின் குருதியில் நனைத்து ஆட்சியைப் பிடித்தாரோ, அதே போன்ற நிலை உருவாகிவிட்டது'' என்று சொல்வதன் மூலம் ஷாஜஹான் எதை விதைத்தாரோ... அதையே அறு​வடையும் செய்தார். அந்த வரலாற்று நீதிக்கு சாட்சி​யாக​வும் மொகலாயர் ஆட்சி அமைந்தது.

எத்தனை படைகள் வைத்து இருந்தாலும், போரில் தந்திரங்களே வெல்லும் என்பதற்கு உதாரணம் தாராவை, ஒளரங்கசீப் வென்ற செயல். ஒளரங்கசீப்தான் முதலில் தோற்று ஓடுகிறார். தாராவின் அருகில் இருக்கும் ஒளரங்கசீப்பின் ரகசியக் கையாள் ஒருவன், 'ஓடுகின்ற படையை விரட்டிச் சென்று அடியுங்கள். அப்போதுதான் முழுமை​யாக வீழ்த்த முடியும்’ என்று தாராவிடம் சொல்கிறான். மன்னர்கள் யானை மீது அமர்ந்து போரைப் பார்ப்பது தான் வழக்கம். இதைக்கேட்டதும் யானை மீது இருந்து இறங்கி... ஒரு குதிரையில் ஏறுகிறார் தாரா. யானை மட்டும் தனியாக நிற்கிறது. அதைப் பார்த்து, 'ஐயையோ மன்னரை வீழ்த்தி விட்டார்களா? தாராவைக் காணவில்லையே’ என்று அவரது படை வீரர்கள் பலவீனம் அடைந்து சிதறி ஓடத்தொடங்குகிறார்கள். ஒளரங்கசீப் வெற்றி பெறு கிறார். ரத்தம் சொட்டி, தாராவின் தலையை ஹிமாயூனின் கல்லறைக்கு அருகே புதைத்துவிட உத்தரவு போட்ட ஒளரங்கசீப், 'ஓர் அரசனின் பேராசை அவனது நிழலால் எழுதப்பட வேண்டும்’ என்று சொன்ன வார்த்தை இந்தக் குடியாட்சிக் காலத் துக்கும் பொருந்துகிறது.

12 ஆண்டு காலம் (1656-1668) இந்தியாவில் இருந்த பெர்னியர் விவரிக்கும் காட்சிகள் கவனிக்கத்தக்கவை. குறிப்பாக, பெண்கள் உடன்கட்டை ஏறுவதை நேரில் பார்த்து இருக்கிறார் பெர்னியர். சில பெண்களை அப்படிச் செய்ய வேண்டாம் என்று தடுத்தும் இருக்கிறார். கணவனுக்காக மனைவியும், அந்த மனை வியின் அடிமைகள் என்று ஐந்து பெண்களுமாக ஒரே சிதையில் ஆறு பேர் விழுந்த காட்சி கடந்த காலத்தின் மீதே கசப்பை விதைக்கிறது.

மொகலாயர் மூலமாக இந்தியர் முகம் பார்க்க பெர்னியரின் பயணங்கள் பயன்படுகின்றன!

- புத்தகன்