Published:Updated:

வயிற்றுக்குள் வளர்ந்தது மாமலை!

எடுக்க எடுக்கக் கற்கள்!

##~##

ந்திய அளவில் இதுவரை அதிகமாக எடுக்கப்பட்ட கற்களின் எண்ணிக்கை 870. உலக அளவில் ஜெர்மனியில் எடுக்கப்பட்ட கற்களின் எண்ணிக்கை 3,110. ஆனால், இதை எல்லாம் தவிடுபொடியாக்கி இருக்கிறது ஈரோட்டில் எடுக்கப்பட்ட 4,294 கற்கள். விரைவில் கின்னஸ் சாதனைக்கும் செல்ல இருக்கிறது. 

'வைரமா... வைடூரியமா... என்ன கல் என்று சொல்லாமல் இது என்ன ஓப்பனிங்’ என்று டென்ஷன் ஆகிறீர்களா? இவை, ஒருவரின் பித்தப் பையில் இருந்து எடுக்கப்பட்ட கற்கள். வயிற்றுக்குள் ஒருவர் மலையையே வைத்திருந்து இருக்கிறார்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஈரோட்டைச் சேர்ந்த துரைசாமிக்கு 62 வயது. கடந்த வாரம் இவருக்கு வயிற்றில் வலி ஏற்பட்டது. பரிசோதித்த டாக்டர்கள், பித்தப்பையில் கற்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். அதற்கு அறுவைச் சிகிச்சை செய்தபோது... எடுக்க, எடுக்க சரமாரியாகக் கற்கள் வந்துகொண்டே இருக்கவே... அதிர்ந்துபோனார்கள் டாக்டர்கள்.

வயிற்றுக்குள் வளர்ந்தது மாமலை!

துரைசாமியின் மகன் பிரபுவை சந்தித்துப் பேசினோம். ''அப்பாவுக்கு 10 வருடங்களாகவே சர்க்கரை நோய் இருக்கு. அதுக்காக ஈரோட்டில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். 10 நாட்களுக்கு முன், உடம்பு எல்லாம் அரிக்குதுன்னு சொன்னார். அதே மருத்துவமனைக்கு போய்ப் பரிசோதனை செஞ்சோம். அப்போ, ஸ்கேன் எடுத்துப் பார்த்த டாக்டருங்க, அவரோட பித்தப் பையில் கல் இருக்கிறதாவும் வள்ளி மருத்துவமனைக்குப் போய் சிகிச்சை எடுத்துக்கச் சொல்லியும் அனுப்பினாங்க. அங்கே அப்பாவுக்கு ஆபரேஷன் நடந்தது. முடிச்சுட்டு வெளியே வந்த டாக்டர்கள், 'உங்க அப்பா வுக்கு ஆபத்து இல்லை. ஆனா, உலக அளவில் பித்தப் பையில் அதிக எண்ணிக்கையில கல் சேர்த்துவைச்சு இருந்தது உங்க அப்பாவாத்தான் இருப்பார்’னு ஆச்சர்யமா சொன்னாங்க...'' என்றார்.

துரைசாமிக்கு அறுவைசிகிச்சை செய்த டாக்டர் சுவாமியிடம் பேசினோம். ''பித்தப் பையில் சராசரியாக

வயிற்றுக்குள் வளர்ந்தது மாமலை!

நான்கு ஐந்து கற்கள் இருக்கும். இந்தியாவில் இதுவரை அதிகபட்சமாக ஒருவரின் பித்தப் பையில் இருந்து 870 கற்களைத்தான் அகற்றி இருக்கிறார்கள். அதை மட்டுமின்றி உலக சாதனையையும் இவர் முறியடித்து விட்டார்.

துரைசாமியின் ஸ்கேன் அறிக்கையைப் பார்த்தபோது பெரிய சைஸ் கல் ஒன்று இருப்பதாகத்தான் நினைத்தோம். பொதுவாக பித்தப் பையில் கொழுப்பு, உப்பு நீர், கால்சியம் ஆகியவை இருக்கும். இதில் கொழுப்பு அதிகமாகி, உப்பு நீர் குறையும்போது கால்சியமும் கொழுப்பும் சேர்ந்து இறுகி, கற்களாக மாறிவிடும். அப்படித்தான் இவருக்குக் கற்கள் சேர்ந்துள்ளன.

நாங்கள் லேப்ராஸ்கோபி மூலமாக பித்தப் பையை அகற்ற வயிற்றில் துளையிட்டுப் பார்த்தபோது, பித்தப் பை ஒரு மொந்தை வாழைப்பழம் அளவுக்கு பெரியதாக இருந்தது. பித்தப் பையில் நீர் அதிகமாக இருக்கும் என்று நினைத்து பித்தப் பையில் துளையிட்டால், அது முழுவதும் கடினமான கற்களால் நிரம்பி இருந்தது கண்டு அதிர்ந்துபோனோம். பிறகு, பித்தப் பையில் இருந்து இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக ஒவ்வொரு கல்லாக மொத்தம் 4,294 கற்கள் எடுக்கப்பட்டன. இவை கடந்த 15 ஆண்டுகளாக உருவாகி இருக்க வேண்டும் என்பது எங்களது கணிப்பு.

பித்தப்பை கல் பிரச்னை இரண்டு வகை. வலி ஏற்படுத்துவது ஒரு வகை. மற்றொன்று, வலி இல்லாதது. பெரும்பாலும் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு உருவாகும் பித்தப்பை கற்கள் அவ்வளவாக வலி ஏற்படுத்தாது. அதனால்தான் துரைசாமிக்குப் பெரிதாக மாற்றம் தெரியவில்லை. பித்தப்பையில் கற்கள் இருப்பது தெரிந்தால், உடனடியாக அறுவைசிகிச்சை செய்துகொள்ள வேண்டும். இல்லை என்றால், பித்தப் பை சீழ் பிடித்து உயிருக்கே ஆபத்து ஏற்படும். சர்க்கரை நோய் இல்லாத வர்களுக்குப் பித்தப் பையில் ஏற்படும் கற்களால், அல்சர், வாயுத் தொல்லை, ஏப்பம் போன்றவை ஏற்படுகிறது. பித்தப் பையில் கற்கள் ஏற்படுவதைத் தவிர்க்க, நார்ச்சத்து நிறைந்த வாழைத் தண்டு, பாகற்காய் போன்றவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்...'' என்றார்.

ம்!

- ம.சபரி

படங்கள்: க.ரமேஷ்