Published:Updated:

இந்திய அரசும் மரண தண்டனையும்

இந்திய அரசும் மரண தண்டனையும்

எஸ்.வி.ராஜதுரை, விடியல் பதிப்பகம், 88 இந்திரா கார்டன் 4-வது வீதி,

உப்பிலிப்பாளையம் அஞ்சல், கோயமுத்தூர் 15, விலை  

இந்திய அரசும்  மரண தண்டனையும்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

40

##~##

ரண தண்டனையை எதிர்நோக்கி இந்தியச் சிறைகளில் இப்போது எத்தனை உயிர்கள் ஊசலாடிக்கொண்டு இருக்கின்றன என்ற கேள்வியுடன் உச்ச நீதிமன்றத்தில் விவாதங்கள் தொடங்கி இருக்கின்றன.

நீதிமன்றத்துக்கு வெளியே, மக்கள் மன்றத்திலும் முந்தைய காலத்தைவிட மரண தண்டனைக்கு எதிரான போராட்டங்கள் அதிகமாகி வருகின்றன. மக்கள் மன்றத்தில் நடக்கும் உணர்ச்சிமயமான போராட்டங்களைவிட, நீதிமன்றத்தில் நடக்கும் சட்டப் போராட்டங்களின் மூலமாக மட்டுமே மரண தண்டனையை மரணிக்கச் செய்ய முடியும் என்கிறார்  எஸ்.வி.ராஜதுரை. 'சட்டத்தின் மூலம் மரண தண்டனையை ஒழிக்கும்போதுதான், ஒருவரது உயிரைப் போக்குவதா... பாதுகாப்பதா என்பதில் நீதிபதிகளுக்குள் உள்ள தன்னிச்சையான அகநிலை சார்ந்த விருப்ப அதிகாரத்தைச் செயலற்றதாக்க முடியும்’ என்கிறார்.

இந்திய அரசும்  மரண தண்டனையும்

இந்திய தண்டனைச் சட்டம், போதைப் பொருள் தடுப்புச் சட்டம், பட்டியலின சாதியினர், பட்டியலினப் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், ஆயுதங்கள் சட்டம், ராணுவச் சட்டம் என அதிமுக்கியமான சட்டங்கள் அனைத்திலுமே 'மரண தண்டனை’ உண்டு. தனிச் சிறப்பான காரணங்கள் இருந்தால் மட்டுமே மரண தண்டனை தரலாம், மரண தண்டனை தரும்போது, சிறப்புக் காரணங்களை விளக்க வேண்டும், அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை தர வேண்டும் என்றெல்லாம் பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகள் கூறுகின்றன. அரிதினும் அரிதான வழக்கு எது என்று பிரித்துப் பார்ப்பதில்தான் சிக்கலே வருகிறது.

ஏனென்றால், இந்த முடிவை எடுக்கும் அதிகாரம் நீதிபதிகளுக்குத் தரப்படுகிறது. ஒரு நீதிபதிக்கு மிகக் கொடூரமான வழக்காகத் தெரிவது, அப்பீல் மனுவை விசாரணை செய்யும் உயர் நீதிபதிகளுக்கு அப்படித் தெரிவது இல்லை. அப்படியானால், சட்டப்படி இந்த தண்டனை வழங்கப்படுகிறதா? நீதிபதிகளின் தனிப்பட்ட விருப்புரிமை அடிப்படையில் இந்தத் தண்டனை தரப்படுகிறதா? இரண்டாவது பதிலையே தேர்ந்தெடுக்க வேண்டி உள்ளது. எனவே, ஒட்டுமொத்தமாக இந்த விருப்புரிமை பறிக்கப்படாதது வரை மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் வெறும் உணர்ச்சிமயமான போராட்டமாக மட்டுமே இருக்கும் என்று வாதிடுகிறார் எஸ்.வி.ஆர்.

ராஜீவ் கொலையை இந்தப் புத்தகம் நியாயப்படுத்தவில்லை. 'தனிநபரை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகள், விவேகமான அரசியலுக்கோ, வெகுமக்களின் ஆதரவு சார்ந்த போராட் டங்களுக்கோ மாற்றீடு அல்ல’ என்று கருத்தாக்கம் கொண்டவர் இந்த நூலின் ஆசிரியர். அதற்காக பழிக்குப் பழி படுகொலைகளைத் தடுத்துவிடுமா என்ற யதார்த்தமான கேள்வி பலரது பதிலுக்காகவே கேட்கப்படுகிறது. நாகரிகத்தின் உச்சத்தில் நிற்கும் பலர், அடிமனதில் பழிக்குப்பழி வாங்கும் மனோபாவத்தில் நிற்பது நியாயமா என்று பல்வேறு வாதங்களின் மூலமாகக் கேட்கிறது இந்தப் புத்தகம்!

- புத்தகன்