Published:Updated:

கண்ட்லா துறைமுகம்... ஜி.கே.வாசனுக்கு சிக்கலா?

அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

##~##

'மத்திய அமைச்சர்களில் 14 பேர் ஊழல் வாதிகள்’ என்று சொல்லி இந்திய அளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறார், அண்ணா ஹஜாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால். அந்த 14 பேரில், மூவர் தமிழர் கள். ப.சிதம்பரம், மு.க.அழகிரி போன்றவர்கள் மீது ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனால், முதல்முறையாக ஒரு புகார் மத்தியக் கப்பல் துறை அமைச்சரான ஜி.கே.வாசன் மீது கூறப்பட்டது. 

குஜராத் மாநிலம் கண்ட்லா துறைமுகத்தில் குத்தகை அடிப்படையில் நிலஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரத்தில்தான் ஜி.கே.வாசன் மீது குற்றம் சாட்டு கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கண்ட்லா துறைமுகத்தின் வசம் 2.20 லட்சம் ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில், சுமார் 16 ஆயிரம் ஏக்கர் நிலத்தை உப்பு உற்பத்திக்கு என்று 30 வருடக் குத் தகைக்கு 1960-ம் ஆண்டு துறைமுக நிர்வாகம்

கண்ட்லா துறைமுகம்... ஜி.கே.வாசனுக்கு சிக்கலா?

ஒதுக்கீடு செய்தது. இது ஏல முறையில் அல்லாமல், நியமன முறையில் நடந்தது. குத்தகைத் தொகையும் மிகக் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டது. துறைமுக நிலங்களின் குத்தகைக் காலம் முடிந்த பிறகு, 2004-ம் ஆண்டு வரையில் நீட்டிக்கப்பட்டது. ஆனால், இப்போதும் குத்தகைத் தொகை மாற்றப்படவில்லை. 'குத்தகைத் தொகையை மாற்றி அமைப்பது தொடர்பாக பல்வேறு துறைகளுடன் துறைமுக நிர்வாகம் கலந்து ஆலோசித்து வருவதால், குத்தகைத் தொகையை உயர்த்தவில்லை’ என்று காரணம் சொல்லப்பட்டது.

இந்த நிலையில், 2007-2008-ம் ஆண்டுக்கான துறைமுகக் கணக்கு வழக்குகளை ஆராய்ந்த துறைமுகத்தின் துணைத்தலைவரும் தலைமைக் கண்காணிப்பு அதிகாரியுமான மனோரஞ்சன் குமார், 'கண்ட்லா துறைமுகத்தில் பல்வேறு தலைவர்களால் அனுமதிக்கப்பட்ட நில ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நிகழ்ந்திருக்கிறது’ என்று ஓர் அறிக்கை சமர்ப்பித்தார். இதைத் தொடர்ந்து, விசார ணையை மத்தியப் புலனாய்வுத் துறை மேற்கொண்டது. அண்மையில், சி.பி.ஐ. தனது விசாரணையை முடித்து, அறிக்கையை நீதிமன்றத்திடம் அளித்துள்ளது.

இதற்கிடையில், கடந்த 2010-ம் ஆண்டு, குத்தகை நிலத்தை 2004 முதல் 2011 வரையிலான காலகட்டத்துக்கு உரிமையைப் புதுப்பித்து ஆணை பிறப்பித்தது மத்தியக் கப்பல் துறை அமைச்சகம். இதனை அனுமதித்ததாகவே, ஜி.கே. வாசன் மீது குற்றச்சாட்டு கிளம்பி இருக்கிறது.

இதற்கு ஜி.கே.வாசன் என்ன பதில் சொல்கிறார்?

''கண்ட்லா துறைமுகம் தொடர்பாக என் மீதான குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படை அற்றது. கண்ட்லா துறைமுக நிலக்குத்தகை தொடர்பான அறிக்கை 2008-ம் ஆண்டு முதன்முறையாகத் தாக்கல் செய்யப்பட்டபோது, நான் கப்பல் துறை அமைச்சர் பொறுப்பில் இல்லை.

மே 2009-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பின்னரே, நான் அந்தத் துறைக்குப் பொறுப்பு ஏற்றேன். அதன் பின்னர், துறைமுகங்கள் வசம் உள்ள நில

கண்ட்லா துறைமுகம்... ஜி.கே.வாசனுக்கு சிக்கலா?

ஒதுக்கீடுகளை சீர்படுத்தவும், துறைமுகங்களுக்கு அதிக வருமானம் கிடைக்க ஏதுவாகவும் கப்பல் துறை அமைச்சகம் புதிய முயற்சிகளை மேற்கொண்டது.

கண்ட்லா துறைமுகத்திலும் சந்தை விலை அடிப்படையில் குத்தகைத் தொகையை மாற்றி அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நிலங்களின் சரியான விலையைக் கண்டறிய, கண்ட்லா துறைமுகம் அங்கீகரிக்கப்பட்ட நில மதிப்பீட்டாளர் ஒருவரை நியமித்தது. முன்மாதிரி ஏலத்தின் அடிப்படையில் 10 மனைகளுக்கு ஏலம் விடப்பட்டு, அதன் அடிப்படையில் ஏக்கருக்கு 13,570 ரூபாய் என்ற அளவில் சந்தை விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்தத் தொகை கண்ட்லா துறைமுகப் பொறுப்புக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டு, அனுமதிக்காக பெருந்துறைமுகங்களின் கட்டண ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையம்தான் துறைமுகக் கட்டணங்களை நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட சட்டபூர்வமான ஆணையம் ஆகும். அந்த ஆணையத்திடம் இருந்து இதுதொடர்பான அனுமதி விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த மாற்றி அமைக்கப்பட்ட நிலத்தீர்வை ஜூலை 2010 முதல் முன் தேதியிட்டு செயல்படுத்தப்படும்.

நிலத்தீர்வை அமைப்பது தொடர்பான விவரங்கள் டெல்லி உயர் நீதிமன்றத்திடம் தெரி விக்கப்பட்டுள்ளது. நீதிமன்றமும் மேலும் ஒரு முன்மாதிரி ஏலத்தை மேற்கொள்ளவும், மின் ஏல முறையை முயற்சி செய்யவும் யோசனை கூறியுள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், நிலக் குத்தகைகளைப் புதுப்பிப்பது பற்றியோ, குத்தகைதாரர்களை நீக் குவது பற்றியோ, புதிய ஏலத்தை மேற்கொள்வதுபற்றியோ... எந்த ஒரு முடிவும் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில்தான் எடுக்க முடியும்'' என்கிறார் ஜி.கே.வாசன்.

இது, டி.ஆர். பாலு அமைச்சராக இருந்த காலத்தில் நடந்தது என்று இன்னொரு செய்தி கிளம்பியதும்... ''எனது ஆட்சியில் இது நடக்கவில்லை. சம்பந்தப்பட்ட துறைமுகத்தின் பொறுப்பாளர்களே இதைச் செய்து கொள்ளலாம் என்ற விதி இருந்தது'' என்று பாலு விளக்கம் அளித்துள்ளார். இப்படி ஒரு புகார் எழுப்பப்பட்டதும், சோனியாவைச் சந்தித்து தன்னுடைய விளக்கத்தை ஜி.கே.வாசன் வைத் ததாகவும் அதனை சோனியா ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அரவிந்த் எழுப்பி இருக்கும் குற்றச்சாட்டில் ஏதோ ஒரு சிக்கல் இருக்கிறது என்று தெளிவாகி உள்ளது. விசாரணை செய்ய வேண்டியது பிரதமர்தான்!

- ஆர்.லோகநாதன்