Published:Updated:

ரியல் எஸ்டேட் தொழிலுக்கு தள்ளாட்டமா?

உயர்ந்தாச்சு கைடுலைன் மதிப்பு

##~##

தோ... அதோ என்று ஆட்டம் காட்டிவந்த கைடுலைன் மதிப்பு உயர்வு, ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டது. 

தமிழகம் முழுக்க சராசரியாக, குடியிருப்பு மனைகளுக்கு 170 சதவிகிதமும், வர்த்தக இடங்களுக்கு 150 சதவிகிதமும், விவசாய நிலத்துக்கு 270 சதவிகிதமும் கைடுலைன் மதிப்பு அதிகரித்து இருக்கிறது. மார்க்கெட் மதிப்புக்கு இணையாக வழிகாட்டி மதிப்பை அரசு அதிகரித்துள்ள நிலையில், முத்திரைக் கட்டணம் (ஸ்டாம்ப் டியூட்டி) எட்டு சதவிகிதத்தில் இருந்து ஏழாகக் குறைக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுக் கட்டணம் ஒரு சதவிகிதம் என்பதில் மாற்றம் இல்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அரசு வழிகாட்டி மதிப்பு உயர்வு மற்றும் முத்திரைக் கட்டணக் குறைப்பால் யாருக்கு லாபம்?

சென்னையை அடுத்த முடிச்சூரில் ஒரு சதுரஅடி மனை, சந்தை விலை

ரியல் எஸ்டேட் தொழிலுக்கு தள்ளாட்டமா?

1,000 என்று வைத்துக்

ரியல் எஸ்டேட் தொழிலுக்கு தள்ளாட்டமா?

கொள்வோம். இதன் கைடு லைன் மதிப்பு, அதிகரிக்கப்படுவதற்கு முன்

ரியல் எஸ்டேட் தொழிலுக்கு தள்ளாட்டமா?

500 ரூபாயாக இருந்தது. அப்போது அந்த மனையை ச.அடி.

ரியல் எஸ்டேட் தொழிலுக்கு தள்ளாட்டமா?

1,000 என்று வாங்கினாலும், அரசு வழிகாட்டி மதிப்பான 500 ரூபாய்க்குத்தான் பதிவு செய்வார்கள். ஏப்ரல் முதல்  கைடுலைன் மதிப்பு

ரியல் எஸ்டேட் தொழிலுக்கு தள்ளாட்டமா?

1,000 என்று உயர்த்தப்பட்டு விட்டதால், இனி இந்தத் தொகைக்குத்தான் சொத்தைப் பதிவு செய்ய வேண்டும். இதனால், சொத்து வாங்கும்போது செலவிடும் தொகை கணிசமாக அதிகரிக்கும்.

முன்பு முடிச்சூரில் ஒரு கிரவுண்ட் (2400 ச.அடி -

ரியல் எஸ்டேட் தொழிலுக்கு தள்ளாட்டமா?

500) மனையை பதிவு செய்ய, கைடுலைன் உயர்வுக்கு முன்

ரியல் எஸ்டேட் தொழிலுக்கு தள்ளாட்டமா?

96,000 (கைடுலைன் மதிப்பான

ரியல் எஸ்டேட் தொழிலுக்கு தள்ளாட்டமா?

12,00,000-க்கு எட்டு சதவிகிதம்) முத்திரைக் கட்டணம் செலுத்த வேண்டும். கைடுலைன் மதிப்பு அதிகரிப்புக்குப் பின், முத்திரைக் கட்டணம் ஒரு சதவிகிதம் குறைக்கப்பட்டு இருக்கும் நிலையில்,

ரியல் எஸ்டேட் தொழிலுக்கு தள்ளாட்டமா?

1,68,000. (கைடுலைன் மதிப்பான

ரியல் எஸ்டேட் தொழிலுக்கு தள்ளாட்டமா?

24,00,000-க்கு ஏழு சதவிகிதம்) கட்ட வேண்டி வரும். அதாவது, கூடுதலாக

ரியல் எஸ்டேட் தொழிலுக்கு தள்ளாட்டமா?

72,000 செலவாகும். இது ஓர் உதாரணம்தான். இதைவிட அதிகமாக பல இடங்களில் கைடுலைன் மதிப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.  

இந்த வழிகாட்டி மதிப்பு உயர்வால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு சுமார்

ரியல் எஸ்டேட் தொழிலுக்கு தள்ளாட்டமா?

1,500 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இப்போது தெரியுமே இது யாருக்கு லாபம் என்று.

பொதுமக்கள் என்ன நினைக் கிறார்கள்?

தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்ப் பாக்கத்தை சேர்ந்த வி.ராஜகோபால், ''வழிகாட்டி மதிப்பை 250

ரியல் எஸ்டேட் தொழிலுக்கு தள்ளாட்டமா?

சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்துவிட்டு முத்திரைக் கட்டணத்தை ஒரு சதவிகிதம் மட்டுமே குறைத்து இருப்பது கண் துடைப்பு வேலை. இதனால் நடுத்தர மக்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. முத்திரைக் கட்டணத்தை கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் உள்ளது போல் ஐந்து சதவிகித அளவுக்குக் குறைக்க வேண்டும்'' என்கிறார்.

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சம்பத், ''கைடுலைன் வேல்யூ அதிகரிப்பு மூலம் அரசுக்கு வருமானம் அதிகரிக்கும். இதனால் அரசுக்கு லாபம். மக்களுக்கும் லாபம். சொத்தின் உண்மையான

ரியல் எஸ்டேட் தொழிலுக்கு தள்ளாட்டமா?

மதிப்புக்கு பத்திரம் பதிவு செய்வதால் கறுப்புப் பணம் ஒழியும் என்பதால், மக்களுக்கும் லாபம்தான். கைடுலைன் மதிப்பு ஏற்றிய அளவுக்கு முத்திரைக் கட்டண சதவிகிதத்தையும் குறைத்து இருந்தால், நடுத்தர மக்களுக்கு லாபமாக இருந்திருக்கும்.'' என்றார்.

கும்பகோணத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.நாதன், ''ஐந்து வருஷமா கைடுலைன் மதிப்பை அதிகரிக்காமல் இருந்துவிட்டு, இப்படி ஒரேயடியாகக் உயர்த்துவது எங்களைப் போன்ற நடுத்தர மக்களைப் பெரிதும் பாதிக்கும். இனியாவது மார்க்கெட் மதிப்பு உயர்வுக்கு ஏற்ப அவ்வப்போது அரசு மதிப்பையும் உயர்த்த வேண்டும். அப்போதுதான் இது பெரிய சுமையாகத் தெரியாது'' என்றார்.

சென்னை ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டு களின் அசோசியேஷன் செயலாளர் பத்ரேஷ் பி. மேத்தா, ''ஏற்கெனவே விலை ஏற்றம் போன்ற பல சிக்கல்களில் மாட்டித் தவிக்கிறோம். இப்போது அரசு கைடுலைன் வேல்யூவைக் அதிகரித்து இருப்பதால், எங்கள் தொழில் மிகவும் பாதிக்கும். சொத்து வாங்குபவர்கள் நிச்சயம் யோசிப்பார்கள். நிச்சயமாக, விலையைக் குறைத்துக் கேட்பார்கள். விலையைக் குறைக்க முடியாத நிலை நீடிக்கும் என்பதால், இந்தப் பாதிப்பு ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடத்துக்கு இருக்கும். அதுவரைக்கும் தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் வியாபாரம் டல்தான்'' என்கிறார்.

- சேனா சரவணன்

படங்கள்: சொ.பாலசுப்பிர மணியன் 

முத்திரைக் கட்டணம் குறைப்பு ஏன்?

தமிழக அரசு, எட்டு சதவிகிதமாக இருந்த முத்திரைக் கட்டணத்தை ஏழு சதவிகிதமாகக் குறைந்துள்ள பின்னணியில் அரசியல் காரணம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

'மத்திய அரசின் நிதி உதவியைத் தாராளமாகப் பெற வேண்டும் என்றால் மாநிலத்தில் முத்திரைத் தாள் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பே சட்டம் போட்டுச் சொன்னது. அப்போது தி.மு.க. அரசு, காங்கிரஸ் கூட்டணியில் இருந்ததால், அந்த நிபந்தனையை நிறைவேற்றாமலேயே தன் செல்வாக்கால் மத்திய அரசின் நிதி உதவியைப் பெற்று வந்தது. தற்போது அ.தி.மு.க. அரசுக்கு மத்திய அரசில் செல்வாக்கு இல்லை என்பதால் அது முத்திரைக் கட்டண குறைப்புக்கு தள்ளப்பட்டு இருக்கிறது’ என்கிறார்கள்.