Published:Updated:

எனக்கு ஒரே ஒரு வருத்தம்!

'பத்மஸ்ரீ' விவசாயி

பிரீமியம் ஸ்டோரி
##~##

ந்தியாவின் மிக உயரிய 'பத்ம’ விருது... அத்தி பூத்தாற்போல் எப்போதாவது விவசாயிகளுக்கும் வழங்கப்​படுவது உண்டு. அந்த வகையில் இப்போது, புதுச்சேரி மாநிலம், கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடபதி, பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு இருக்​கிறார்! 

ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில், ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கையால் விருது பெற்றுத் திரும்பி இருக்கும் வெங்கடபதிக்கு வாழ்த்துச் சொல்லிப் பேசினோம்.

''நான், பாரம்பரியமான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். வீட்டுக்கு ஒரே பிள்ளைங்கறதால செல்லமாத்தான் வளர்ந்தேன். நாலாம் கிளாஸுக்கு மேல படிப்பு ஏறல. ஜாலியா சுத்திக்கிட்டிருந்த என்னோட போக்கை மாத்துறதுக்காக, 16 வயசுலேயே கல்யாணம் முடிச்சு வைச்சுட்டாங்க. 19

எனக்கு ஒரே ஒரு வருத்தம்!

வயசுலதான் எங்க குடும்பத்துக்குச் சொந்தமா இருந்த நிலத்துல கால் வெச்சேன்.

நெல்லு, கடலைனு வழக்கமான பயிர்கள்ல லாபமே இல்லை. லாபம் தேட ஆரம்பிச்சப்பத்தான், 'கனகாம்பரச் செடியைப் பயிர் செய்'னு பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி முதல்வர் சம்பந்த மூர்த்தி ஆலோசனை சொன்னார். அப்படியே செஞ்சேன், நல்ல லாபம் கிடைச்சுது.

பிறகு, சாகுபடிப் பரப்பை அதிகப்படுத்​தறதுக்காக நாற்றுகளை விலைகொடுத்து வாங்கினேன். அதுல தரம் இல்லை, பயங்கர நஷ்டம். 'நாற்றுகளை நாமளே உருவாக்குவோம்'னு தொடர்ந்து ஆராய்ச்​சியில இறங்கின எனக்கு 'கதிர் வீச்சு’ முறை கைகொடுத்துச்சு. கல்பாக்கம் அணு மின் நிலைய உதவியோடு அதிலும் ஜெயிச்சேன். இதுக்கு உதவி செய்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரையே அந்த கனகாம்பர ரகத்துக்கு வெச்சேன். பிறகு, சவுக்கு மர ஆராய்ச்சியில இறங்கி, ஏக்கருக்கு 200 டன் மகசூல் கிடைக்கற ரகத்தை உருவாக்கினேன். இதுக்கு உதவி செய்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேரையே சவுக்குக்கு வெச்சேன்'' என்று சொன்ன வெங்கடபதி, ''கனகாம்பரம், சவுக்கு கன்னுகளை எல்லாம் குறைஞ்ச விலையிலதான் விவசாயிகளுக்குக் கொடுத்துட்டு வர்றேன். இப்ப இது ரெண்டும் இந்தியா முழுக்கப் பரவி, விவசாயிகளுக்கு பெரும் உதவியா இருக்கு. அந்த வகையில இந்த 'பத்மஸ்ரீ’ விருகுக்கு நான் தகுதியானவன்தான்னு நினைக்கிறேன்'’ என்றார் நெகிழ்ச்சியுடன்.

அவரே தொடர்ந்து, ''விருது வாங்கினதுல சந்தோஷம்ன்​னாலும் ஒரு வருத்தமும் எனக்கு இருக்கு. விவசாயி​களை இந்த நாடு இன்னும் கூட சரியா மதிக்கலை. விருது வாங்கினவங்கள்ல நான் மட்டும்தான் விவசாயி. ஜனாதிபதி மாளிகைக்கு வந்திருந்த அரசியல்வாதிங்க, அதிகாரிங்க எல்லாருமே... விருது வாங்கின சினிமாக்காரர்கள், தொழில் அதிபர்கள், இசைக் கலைஞர்களை மதிச்சி, பக்கத்துல கூப்பிட்டுப் பேசினாங்க. போட்டோ எடுத்துக்கிட்டாங்க. ஆனா, ஒரு விவசாயியான என்னை யாரும் கண்டுக்கவே இல்ல.

ஆனா, ஒரு காலம் வரும்... அப்ப நிச்சயமா எல்லாருமே விவசாயிகளை மதிப்பாங்க'' என்கிறார் நம்பிக்கையுடன்.

உண்மை நெஞ்சைச் சுடுகிறது.!

- காசி.வேம்பையன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு