Published:Updated:

படிப்பும் விடுதலைக்கான அறிவும்

ஜூ.வி. நூலகம்

பிரீமியம் ஸ்டோரி

மருதையன், கீழைக்காற்று வெளியீட்டகம், 10.அவுலியா தெரு, எல்லீசு சாலை,

திருவல்லிக்கேணி, சென்னை.2. விலை:

படிப்பும் விடுதலைக்கான அறிவும்

15

##~##

''மிகச்சிறந்த இசையாகவே இருந்தாலும்... அதை ரசிக்கும் காதுகள் இல்லை என்றால், அவர்களுக்கு அது வெறும் ஒலிதான்'' என்ற மார்க்ஸின் மேற்கோளுடன் தொடங்குகிறது மருதையனின் புத்தகம். என்ன படித்தாலும்... சமூக அக்கறையும் சீர் பிரித்துப் பார்த்துச் சிந்திக்கும் திறனும் இல்லாத படிப்பால் என்ன பயன் என்ற கேள்வியை எழுப்பும் புத்தகம்!

எல்லோருமே படிக்கிறார்கள். பள்ளிப் பிள்ளைகள் பகல் முழுக்கப் படிக்கிறார்கள். கல்​லூரி மாணவர்கள் நள்ளிரவைத் தாண்டிய பிறகும் படிக்கிறார்கள். பேராசிரியர்களும் படிக்​கிறார்கள். இலக்கிய​வாதிகள் விடிய விடியப் படிக்கிறார்கள். இந்தப் படிப்பு அனைத்துமே காரியவாதப் படிப்புகள் என்று, சுட்டிக்காட்டுகிறார் மருதையன். ''இன்பத்தை நுகர்வது என்பது மனிதனுடைய பண்புகளில் ஒன்று. ஆனால், இன்ப நாட் டத்தின் பின்னால் ஓடுவது, அதற்காகப் படிப்பது எல்லாம்

படிப்பும் விடுதலைக்கான அறிவும்

சொறிந்துவிடுவது போல் உள்ளது. இன்பமாக இருக்கிறது என்பதற்காகப் படிப்பது பொரு​ளற்றது. நோக்கமற்றது. நோக்கம் இல்லாமல் படிக்கின்ற எதுவும் மூளையில் தங்காது'' என்கிறார். முறையான, தேவையான, அவசியமான படிப்பு இல்லை என்றால், சரியான ஆளுமை உருவாக முடியாது என்பதை இன்றைய யதார்த்தங்களின் மூலம் விளக்குகிறார்.

'உங்களின் பொழுதுபோக்கு என்ன?’ என்று கேட்டால், பலரும் 'படிப்பது’ என்பார்கள். கேட்க இது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் எதைப் படிக்கிறீர்கள்? எதற்காகப் படிக்கிறீர்கள்? என்றால் சரியாகச் சொல்லத் தெரியாது.

20 ஆண்டுகள் ஆசிரியர் பணியில் இருப்பவரால், ஒரு கட்டுரையை செறிவாக எழுத முடியவில்லை என்றால், கல்லூரிப் பருவத்தை எட்டிய மாணவனால் ஒரு செய்தியைப்பற்றி முழுமையாகச் சொல்லத் தெரியவில்லை என்றால், இவர்களின் படிப்பில் ஏதோ ஒரு கோளாறு இருக்கிறது என்றே முடிவுக்கு வரவேண்டி உள்ளது. செய்தித்தாள்களில் இருந்து தொலைக்காட்சிக்கு, அதில் இருந்து இணையத் தளங்களுக்கு இப்போது செல்பேசிகளுக்கு என இன்றையத் தகவல்பரிமாற்றம் வளர்ச்சி பெற்றுள்ளது. இது, தொழில்நுட்ப அடிப்படையில், மாபெரும் வளர்ச்சிதான். ஆனால், செய்திகள் முழுமைத்தன்மை இல்லாமல் சுருக்கமாகி... 'எதையும் நாலு வரியில் படிக்க நினைக்கும்’ மனோபாவம் அதிகம் ஆகிவிட்டது. இது, சிந்தனைத் திறனைப் பாதிக்க வைப்பதாக நினைக்​கிறார் மருதையன்.

''இந்த பாப்கான் தலை​முறை, விழுமியங்கள் இல்லாத ஒரு விஷயத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கும் திறன் இல்லாத நொறுக்குத் தீனித் தலைமுறையாக வளர்க் கப்படுகிறது. அதனால்​தான் இவர்களால் ஒரு புத்தகத்தை முழுமையாகப் படிக்கமுடிய​​வில்லை'' என்கிறார். தொலைக்​காட்சியில் நொடிக்கு நொடி காட்சி மாறிக்கொண்டே இருக்கிறது. அத்தகைய மாற் றங்களை எல்லாவற்றிலும் எதிர்பார்த்தால் எப்படி முடியும்? நோக்கத்துடன் கூடிய படிப்பு வேண்டும் என்பவர், நம் மனித நாகரிகம் கண்ட கலைகள், இலக்கியங்கள், அரசியல், ஆய்வு, பொருளாதாரம் குறித்து அதிகம் படிக்க வேண்டும், அதுவும் ஆழ்ந்து படிக்க வேண்டும் என்று அனைவருக்கும் பரிந்துரை செய்கிறார்.

படிப்பு என்பது  உழைப்பு. அந்த உழைப்பில்தான் இன்பம் காண முடியும். அதில், 'உருப்படியாய்’ படிக்கத் தூண்டுகிறது இந்தப் புத்தகம்!

-  புத்தகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு