Published:Updated:

அமர்த்தியா சென் - சமூக நீதிப் போராளி

ஜூ.வி. நூலகம்

பிரீமியம் ஸ்டோரி

ரிச்சா சக்சேனா (தமிழில்: சி.எஸ்.தேவநாதன்)

##~##

எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி 2, விலை

அமர்த்தியா சென்  - சமூக நீதிப் போராளி

100/-

'எனது குழந்தைகள் மிகவும் பசியாக இருந்தனர்’ - இந்த வார்த்தைதான் அமர்த்தியா சென் என்ற இளைஞனைப் பொருளாதார நிபுணராக மாற்றி நோபல் பரிசும் பெற வைத்தது... என்ற நிகழ்வுடன் இந்தப் புத்தகம் தொடங்குகிறது.

மிகச் சிறுவனாக இருந்தபோது நடந்த ஒரு மதக் கலவரத்தில் முஸ்லிம் மனிதர் ஒருவர் சிக்கிக்கொள்கிறார். அதில் தாக்கப்படுகிறார். ரத்தம் வடிந்த நிலையில் அமர்த்தியாவின் வீட்டுக்கு வந்த அவரை, இவரது அப்பாதான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். வழியில் அந்த மனிதர் இறக்கிறார். இறக்கும் நேரத்தில் அந்த மனிதர் உச்சரித்த வார்த்தைகள்... 'எனது குழந்தைகள் மிகவும் பசியாக இருந்தனர்!’

ஏன் பசியாக இருந்தார்கள்? காதர் மியான் என்ற அந்த மனிதனைப் பற்றி எப்போதும் அமர்த்தியா சிந்தித்தார். இந்த உலகத்தில் இரண்டே இரண்டு வகைப்பட்ட குடும்பங்கள்தான் இருக்கின்றன. ஒன்று

அமர்த்தியா சென்  - சமூக நீதிப் போராளி

இருப்பவர். இன்னொன்று இல்லாதவர்... என்கிற நோக்கில் சிந்திக்க ஆரம்பித்தார். அதில் இருந்து உலகம் ஒரு பொருளாதார மேதையைக் கண்டுகொண்டது!

பொருளாதாரச் சிந்தனைகளின் அடித்தளமாக இரக்கம் என்பது இருக்கும். அந்தக் குணாம்சத்தை அமர்த்தியா, சாந்தி நிகேதனில் இருந்து பெற்றார். ரவீந்திரநாத் தாகூருக்கும் அமர்த்தியாவுக்கும் எத்தனையோ ஒற்றுமைகள். இருவரும் வங்காளத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் நோபல் பரிசை இந்தியாவுக்கு வாங்கித் தந்தவர்கள். அதைவிட முக்கியமாக 'அமர்த்தியா’ என்று அந்தக் குழந்தைக்குப் பெயர் வைத்ததே தாகூர்தான். அமர்த்தியாவின் மனைவி நபநீதாவுக்கும் பெயர் சூட்டியவர் தாகூர். அதாவது, சாந்தி நிகேதனின் குழந்தைகள்தான் இவர்கள் இருவரும். உலகத்தில் எந்த மூலையில் எந்தப் பல்கலைக்கழகத்தில் இருந்தாலும் இந்த இடத்துக்கு வந்தால் மட்டும் ஒரு குழந்தையாக அங்கே உள்ளவர்களுடன் வலம் வருவது அமர்த்தியாவின் வழக்கம்.

பொருளாதாரம் மிகமிகக் கசப்பான பாடம்தான் பலருக்கும். பொருளாதார மேதைகளும் புரிந்து கொள்ள முடியாதவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால், அமர்த்தியாவைப் பற்றிய இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது எப்படிப்பட்ட அபூர்வமான மனிதராக அவர் இருந்துள்ளார் என்பதை உணர முடிகிறது.  ''அந்த நாட்களில் எங்களால் ஒரு பைசாவைக்கூட சேமிக்க இயலாது. அமர்த்தியா எப்பொழுதுமே ஒரு சிறந்த பொருளாதார நிபுணராக இருந்தார். ஆனால், பணத்தை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்ற திறமை இல்லாத மோசமான நிர்வாகியாக இருந்தார்'' என்று அவர் மனைவி நபநீதா சொல்கிறார். இதனாலேயே இவர்களது வாழ்க்கையின் பிரிவும் நடந்தது. சொந்த வாழ்க்கையில் பல நேரங்களில் தனது நண்பர் ரோமேஷ் கங்கூலியிடம் கடன் வாங்கித்தான் காலம் தள்ளி இருக்கிறார் அமர்த்தியா. தனக்கு இருந்த புற்று நோயைக்கூட தனது ஆராய்ச்சி மற்றும் படிப்பில் மூழ்கியதன் மூலமாக வென்ற கதை, உற்சாகத்தைத் தருகிறது.

அமர்த்தியா என்றால் 'என்றும் நிலைத் திருப்பவன்’ (அமரதீபம்) என்று பொருள். தாகூர் கணிப்பு எப்படிப் பொய்யாகும்?

-  புத்தகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு