முட்டாள்கள் தினமும் புத்தக தினமும் ஒரே மாதத்தில் வருவது ஓர் ஆச்சர்ய முரண்!

முட்டாள்கள் தினம் எதற்காக உருவாக்கப்பட்டதோ, ஆனால், புத்தக தினம் உருவானதற்கு காரணம் இருக்கிறது. இறவா காவிய ங்களைப் படைத்த வில்லியம் ஷேக்ஸ்பியரின் நினைவு தினமான ஏப்ரல் 23-ம் தேதியைத்தான் உலகப் புத்தக தினமாக அறிவித்தது யுனஸ்கோ நிறுவனம்.

'கல்லாதார்க்கு இருப்பவை கண்கள் அல்ல; புண்கள்’ என்று வள்ளுவர் சொல்லி 2,000 ஆண்டுகள் ஆன பிறகும், புத்தகங்கள் வாசிப்போர் எண்ணிக்கை குறைவுதான். ஏழு கோடி தமிழரில் 400 பேர்தான் நல்ல புத்தகங்களைத் தேடி வாங்குகிறார்கள்.

புத்தக மேம்பாட்டுக்காக அரசு செய்து வரும், செய்யத் தவறும் கடமைகளைத் துறை சார்ந்த சிலரிடம் கேட்டோம்.

தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் வெளியீட் டாளர்கள் சங்க (பபாசி) செயற்குழு உறுப்பினரும் பாரதி புத்தகலாயத்தின் மேலாளருமான நாகராஜன், ''தமிழர்களின் வாசிப்புப் பரப்பை விரிவுபடுத்த அரசு நூலகங்கள் தொடங்கப்பட்டன. ஒரு நூல் வெளியானால் அதன் 1,000 பிரதிகளை தமிழக அரசு

நூலகங்களுக்காக வாங்குகிறது. ஆனால், ஒரு பதிப்பகத்தில் இருந்து வெளியாகும் நூல்களில் பாதி தலைப்புகளைக்கூட தேர்வு செய்வதற்கு அரசு ஒதுக்கும் பட்ஜெட் இடம் தருவதில்லை. தமிழகத்தில் சுமார் 4,000 நூலகங்கள் இருக்கின்றன. வாங்கும் 1,000 பிரதிகளை ஏதோ முறையில் இந்த நூலகங்களுக்குப் பிரித்து அனுப்புகிறார்கள். 2008-ம் ஆண்டுக்குப் பிறகு, நூல்கள் வாங்குவதையும் தமிழக அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.

கடந்த நான்கு ஆண்டுகளாக நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்குவதில்லை என்பது ஒரு பக்கம். வாங்கிய நூல்கள் வீணாவது இன்னொரு பக்கம். அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஏறத்தாழ 13,000 நூலகங்கள் கட்டுவதாகத் திட்டமிடப்பட்டது. ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப் பட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் நூலகம் இருக்க வேண்டும் என்பது தான் இந்தத் திட் டத்தின் நோக்கம். ஆனால், பல இடங்களில் இந்த நூலகங்கள் கட்டப்படவே இல்லை. இந்த நூலகங்களுக்காக வாங்கப்பட்ட நூல்கள் பஞ்சாயத்து அலுவலகப் பரண்களில் பண்டல் பண்டலாகக் குவிந்து கிடக்கின்றன. புத்தகங்கள் வாங்காமல் இருப்பதும், வாங்கிய புத்தகங்கள் இப்படிக் குப்பையாகக் கிடப்பதும் வேதனையானது.

இரண்டாவது முக்கியத் தேவை, அகராதி பதிப் பிப்பது. புதிய கலைச் சொற்களை, பிரயோகங்களை தமிழில் உருவாக்கினால்தான் மொழி வளரும். சென்னைப் பல்கலைக் கழகம் 1970-ல் வெளியிட்ட அதே அகராதியை மீண்டும் ஸ்கேன் செய்து வெளியிடுகிறார்கள். ஆங்கிலத்தில் ஆண்டு தோறும் 'ரிவைஸ்டு வெர்ஸன்’ வெளியிடுகிறார்கள்.

ஆனால், தமிழ் அகராதியில், பெரியார் சீர்திருத்த எழுத்துக்களான லை, னை போன்றவை கூட மாற்றம் அடையாமல், பழைய துதிக்கை கொம்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, இந்தக் கால மாணவர்களுக்கு என்ன என்றே தெரியாது.

இப்போது, புதிதாக அகராதி தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. சென்னைப் பல்கலைக் கழகம், தமிழ் இணையப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் என, மூன்று தரப்பில் இருந்தும் தனித்தனியாக அகராதி தயாரித்து வருகிறார்கள். இப்படித் தயாரிக்க வேண்டிய அவசியம் என்ன? ஒரு சொல்லுக்கு வெவ்வேறு பிரயோகத்தைச் சொல்லிக் குழப்புவதற்குத்தான் இது வழி வகுக்கும்.

40 ஆண்டுகளுக்கு முன், பாடநூல் நிறுவனத்தின் சார்பில் சிறுவர்களுக்காக தரமான இலக்கிய,

அறிவியல், மருத்துவ நூல்கள் வெளியிட்டார்கள். அரசு சார்பில் அத்தகைய நூல்கள் மீண்டும் வெளியிடப்பட வேண்டும்.

சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் 'ரீட் சிங்கப்பூர்’, 'ரீட் அமெரிக்கா’ என்று ஆண்டுக்கு ஒருமுறை நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். குறிப்பிட்ட தலைப்புகளில் கல்லூரி, பள்ளிக்கூடங்கள், இலக்கிய அமைப்புகளில் தொடர்ச்சியாகக் கூட்டங்கள் நடத்துகிறார்கள். அந்தக் கூட்டங்களில் அந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர்கள் ஆர்வத்துடன் பங்கு பெறுகிறார்கள். அதுபோன்ற நிகழ்வுகள் இங்கும் தொடங்கப்பட்டால், படிக்கும் ஆர்வம் பெருகும்'' என்றார்.

கடந்த ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, ''எங்கள் ஆட்சிக்கு முந்தைய சில ஆண்டுகளாகவே நூலகத்துக்குப் புத்தகங்கள் வாங்கப்படாமல் இருந்தன. நாங்கள் புத்தகத்தை வாங்க ஆரம்பித்ததோடு, 600 பிரதிகள் என்று இருந்த புத்தகங்களின் எண்ணிக்கையை 1,000 என்று உயர்த்தினோம். நூல்கள் வாங்குவதற்கான கமிட்டியே எந்த நூல்களை வாங்க வேண் டும் என்று முடிவு செய்தது.

பதிப்பாளர் வாரியம் அமைத்தோம். பதிப்பாளர் கள், பைண்டிங் துறையில் இருப்பவர்கள், அச்சகத் துறையில் இருப்பவர்களில் வசதி குறைந்தவர்களின் குழந்தைகளின் படிப்புச் செலவுக்கான உதவிகளையும் செய்தோம்.

அரசு விழாக்களில் மாலைகள், சால்வைகள் போடுவதற்குப் பதிலாக நல்ல நூல்களை வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தோம். கலைஞர் தன் சொந்தச் செலவில் அறிஞர்களை ஆண்டு தோறும் கௌரவிக்கும் நோக்கத்தோடு பபாசி அமைப்புக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கி அறக்கட்டளை ஆரம்பிக்க வழி செய்தார். ஆண்டு தோறும் ஐந்து எழுத்தாளர்கள் தலா ஒரு லட்ச ரூபாய் வெகுமதியோடு கௌரவிக்கப்படுகிறார்கள். ஏராளமான தமிழறி ஞர்களின் நூல்களை நாட்டுடமையாக்கி நூல் பதிப்புக்கு உதவி இருக்கிறோம்.

தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைக்க வழி செய்தோம். ஒரு கட்சி மாற்றுக் கட்சியினரின் நடவடிக்கைகளை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள லாம். ஆனால், தமிழுக்குச் செம்மொழி தகுதி இருப்பதை ஏற்றுக் கொள்வதில் என்ன தயக்கம் என் பதுதான் தெரியவில்லை. செம்மொழி நூலகத்தை அப்புறப்படுத்தியதோடு அங்கு இருந்த அரிய நூல் களை மூட்டையாகக் கட்டி புதிய சட்டசபை கட்ட டத்தில் அடைத்து விட்டார்கள்.

நிரந்தரப் புத்தகக் கண்காட்சி ஒன்றை அமைக்கத் திட்டம் தீட்டி இருந்தோம். புத்தக விஷயத்தில்

எங்கள் ஆட்சியில் நிறைவேற்ற முடியாத விஷயம் அது ஒன்றுதான். பபாசி அமைப்பினரும் அதற்கான இடத்தைத் தேர்ந்தெடுக்க பெரும்முயற்சி செய்தார்கள். ஆனாலும், சரியான இடம் அமைவது தாமதமாகி விட்டது'' என்றார்.

கணினித்தமிழ் சங்கத் தலைவர் ஆண்டோ பீட்டர், ''புத்தகத்தை உருவாக்குவதில் பொதுமுறை உருவாக்குவதும் முக்கியம். தமிழில் கம்ப்யூட்டர் எழுத்துருக்கள் இன்னமும் நெறிபடுத்தப்படாமல் இருக்கின்றன. ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விசைப்பலகை முறையைப் பயன்படுத்தி வருகிறார் கள். அரசு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளில் ஒரு குறிப்பிட்ட விசைப் பலகையைப் பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கலாம். தமிழ் எழுத்துரு விசைப் பலகையை முறைப்படுத்துதல், தமிழ் இலக்கணங் களுக்கான மென்பொருளை உருவாக்குதல், மொழிபெயர்ப்பு மென்பொருளை உருவாக்குதல் போன்றவை பதிப்புத் துறையின் பணிகளை எளிமைப்படுத்தும். ஏராளமான தமிழ் நூல்களை வெளி உலகுக்குக்கொண்டு செல்ல முடியும்.

2003-ல் 5-வது இணைய மாநாடு நடத்தினார் முதல்வர் ஜெயலலிதா. அப்போது 'பொன்விழி’ என்ற மென்பொருளை அறிமுகப்படுத்தினார். புத்தகத்தின் பக்கங்களை ஸ்கேன் செய்தாலே அதை எழுத்துருக்களாக மாற்றி அதில் திருத்தங்கள் செய்வதற்கான மென்பொருள் அது. அச்சில் இல்லாத பழந்தமிழ் நூல்களை மீண்டும் மீண்டும் டைப் செய்து புத்தகமாக்க வேண்டிய அவசியத்தை அது குறைக்கும். ஆனால், அந்த மென்பொருளைப் பலரும் பயன்படுத்துவதில்லை. பழைய நூல்களை ஸ்கேன் செய்யும் போது சில எழுத்துக்களை இனம் காணுவதில் சிக்கல் இருப்பதாகச் சொல்லி அதைப் புறக்கணிக்கிறார்கள். தொடர்ந்து ஒன்றைப் பயன்படுத்தினால்தான் அதில் இருக்கும் சிக்கல்களை தீர்க்க முடியும். பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸில் பணியாற்றும் பேராசிரியர் ஏ.ஜி.ராமகிருஷ்ணன், ஒரு புத்தகத்தின் பக்கத்தைக் கொடுத்தால், அதில் உள்ள வாக்கியங்களை ஒலியாக மாற்றும் மென்பொருளை உருவாக்கி இருக்கிறார். இது கவனிக்கப்படவேண்டிய முயற்சி. ஒலிக்குறிப்பை எழுத்தாக மாற்றும் முயற்சிகளும் நடக்கின்றன. இதனால் புத்தகப் பணிகள் சுலபமாகும். தொழில் நுட்பத்தை அனுசரித்துக் கொள்ளும் மொழியே தழைக்கும். அரசு இதற்கான நடவடிக்கைகளில் துரிதமாக இறங்க வேண்டும்'' என்றார்.

புத்தகம் குறித்த அரசின் முயற்சிகளை அறிய பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதியைப் பலமுறை தொடர்பு கொண்டோம். அவரிடம் பேசமுடிய வில்லை. முதல்வர் ஜெயலலிதா, மிகச்சிறந்த புத்தக வாசிப்பாளராக அறியப்பட்டவர். இந்த ஆண்டின் புத்தக தினத்தில் புத்தக மேம்பாட்டுக்கு வழி காணுவார் என்று நம்புவோம்!

- தமிழ்மகன்