Published:Updated:

ஹைதராபாத்: வேனில் கடத்தல்; செல்போனில் தகவல்! - மாணவியை உடனடியாக மீட்ட போலீஸ்

க்ரைம்

ஹைதராபாத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, தான் கடத்தப்படப்போகிறோம் என்பதை அறிந்து செல்போனில் கொடுத்த தகவலை அடுத்து, போலீஸார் அவரது செல்போனை டிராக் செய்து உடனடியாக மீட்டிருக்கிறார்கள்.

ஹைதராபாத்: வேனில் கடத்தல்; செல்போனில் தகவல்! - மாணவியை உடனடியாக மீட்ட போலீஸ்

ஹைதராபாத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, தான் கடத்தப்படப்போகிறோம் என்பதை அறிந்து செல்போனில் கொடுத்த தகவலை அடுத்து, போலீஸார் அவரது செல்போனை டிராக் செய்து உடனடியாக மீட்டிருக்கிறார்கள்.

Published:Updated:
க்ரைம்

ஹைதராபாத் அருகே 19 வயது கல்லூரி மாணவியை நான்கு பேர்கொண்ட கும்பல் வேனில் கடத்திச் சென்று பாலியல் வன்முறை செய்ய முயன்றிருக்கிறது. தான் கடத்தப்படப்போகிறோம் என்று தெரிந்ததும் அந்தப் பெண், உடனடியாகத் தன் பெற்றோருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்திருக்கிறார். அந்தப் பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஹைதராபாத் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காவல்துறை தங்களை நெருங்கியதைத் தெரிந்துகொண்ட கடத்தல்காரர்கள், அந்தப் பெண்ணை புதருக்குள் இழுத்துச் சென்று தாக்கியிருக்கிறார்கள். பின்னர், அந்தப் பெண்ணை போலீஸார் மீட்டிருக்கிறார்கள்.

இது குறித்துப் பேசிய ஹைதராபாத் காவல்துறை துணை ஆணையர் ரக்‌ஷிதா மூர்த்தி (Rakshitha Murthy),``கடத்தப்பட்ட மாணவி, கல்லூரியிலிருந்து வீடு திரும்பும்போது, தனியாகப் பயணம் செய்வது ஆபத்து என நினைத்து ஒரு வயதான பெண்மணியோடு சேர்ந்து ஆட்டோவில் பயணம் செய்திருக்கிறார். சிறிது நேரத்தில், ஆட்டோவில் பயணித்த இரண்டு சக பயணிகளும் கீழே இறங்கிவிட, கடத்தப்பட்ட பெண் தனியே பயணித்திருக்கிறார்.

க்ரைம்
க்ரைம்
மாதிரி புகைப்படம்

அந்த சமயத்தில், இரண்டு ஆண்கள் அந்த ஆட்டோவில் ஏறியிருக்கிறார்கள். அந்த மாணவி இறங்க வேண்டிய இடம் வந்தும், ஆட்டோ நிறுத்தப்படாமல், அதிக வேகத்தில் சென்றிருக்கிறது. அதைக் கண்டு மாணவி அச்சமடைந்திருக்கிறார். சிறிது தூரத்திலுள்ள கிராமத்தின் அருகே ஆட்டோ நிறுத்தப்பட்டிருக்கிறது. அங்கு வேனில் காத்திருந்த மற்றொரு நபர், ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட ஆட்டோவில் வந்த மூன்று நபர் சேர்ந்து, நான்கு பேரும் அந்தப் பெண்ணை வேனில் கடத்தியிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தான் கடத்தப்படப்போகிறோம் என்பதை தெரிந்துகொண்ட அந்த மாணவி உடனடியாக, தனது மொபைல்போன் மூலம் பெற்றோரை அழைத்திருக்கிறார். அவர்கள் உடனடியாக போலீஸ் ஹெல்ப்லைன் எண் 100-க்கு போன் செய்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தனர்.

உடனடியாக, அந்தப் பெண்ணின் மொபைல்போனிலிருந்து வந்த சிக்னலின் அடிப்படையில் வேனைக் கண்காணித்து, அருகிலிருந்த உள்ளூர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில், கடத்தல்காரர்கள் வேனை நிறுத்தி அந்தப் பெண்ணை அருகிலிருந்த புதருக்குள் இழுத்துச் சென்றனர். அவர்கள் அந்தப் பெண்ணின் ஆடைகளை கிழித்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றனர். ஆனால், அந்தப் பகுதியில் போலீஸார் நடமாட்டத்தை கவனித்த அவர்கள், அந்தப் பெண்ணை கட்டையால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்" என்றார்.

அந்த மாணவியை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம். அந்தப் பெண் பாதுகாப்பாக இருக்கிறார், ஆனால், காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன; அதிர்ச்சியிலிருந்து மீண்டுவருகிறார் - ஹைதராபாத் காவல்துறை அதிகாரி ரக்‌ஷிதா மூர்த்தி.

மேலும், ``கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்களைக் கைதுசெய்ய 10 சிறப்பு தனிப்படைகளை அமைத்திருக்கிறோம். கடத்தல், பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றும் துணை ஆணையர் ரக்‌ஷிதா மூர்த்தி தெரிவித்திருக்கிறார்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க பெண்கள் மற்றும் குழந்தைகள்நல ஆணையர் திவ்யா தேவராஜனுக்கு அமைச்சர் சத்தியாவதி ரத்தோட் உத்தரவிட்டிருக்கிறார். மேலும், பாதிக்கப்பட்ட 19 வயது மாணவிக்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறும் அமைச்சர், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism