Published:Updated:

தானே: சோஷியல் மீடியா நட்பு; கூட்டுப் பாலியல் வன்கொடுமை! - குஜராத் ஆண் மாடலுக்கு நேர்ந்த கொடுமை

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை ( Representational Image )

சுக்லா மொட்டைமாடியில் நடந்த முழுச் சம்பவத்தையும் கேமராவில் படமாக்கியிருக்கிறார். மேலும், `இச்சம்பவம் குறித்து காவல்துறையில் புகாரளித்தால், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிடுவேன்’ என்றும் ஆண் மாடலை மிரட்டியிருக்கிறார் சுக்லா.

குஜராத்தைச் சேர்ந்த ஆண் மாடல் ஒருவர், மகாராஷ்டிராவின் தானே நகரின் பயன்பாடற்ற கட்டடத்தின் மொட்டைமாடியில்வைத்து, துன்புறுத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். ஆண் ஒருவரை நான்கு பேர் கூட்டாக வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

குஜராத்தைச் சேர்ந்த 19 வயதான ஆண் நடிகர் (மாடல்) ஒருவர், திரைத்துறையில் வாய்ப்பு தேடி மும்பை வந்திருக்கிறார். அவர் மகாராஷ்டிராவின் தானேவில், தனது உறவினர்களுடன் வசித்துவருகிறார். அவருக்குச் சமூக வலைதளம் மூலமாக அந்தப் பகுதியைச் சேர்ந்த புனித் சுக்லா (Puneet Shukla) என்பவருடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது. இருவரும் சமூக வலைதளங்களில் பேசிவந்த நிலையில் புனித் சுக்லா, ஆண் மாடலை நேரில் சந்திக்க வலியுறுத்தியிருக்கிறார். பின்னர், மேலும் சில நண்பர்களைச் சந்திக்கவும் குஜராத் ஆண் மாடலை அழைத்துச் சென்றிருக்கிறார் சுக்லா.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை
கூட்டுப் பாலியல் வன்கொடுமை
Representational Image

அப்போது, சுக்லாவும் அவரது நண்பரும் ஆண் மாடலை தானே நகரில் பயன்பாடற்ற கட்டடம் ஒன்றின் மொட்டைமாடிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு அவர்களோடு மேலும் இரண்டு ஆண்கள் சேர்ந்து, நான்கு நபர்களும் ஆண் மாடலைக் கீழே தள்ளி, தாக்கியிருக்கிறார்கள். அவரிடமிருந்த பணம் உள்ளிட்டவற்றை அவர்கள் மிரட்டிப் பறித்திருக்கிறார்கள். பின்னர், ஆண் மாடலைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். அங்கிருந்து தப்ப முயன்றபோது, அவர்கள் அந்த ஆண் மாடலைக் கடுமைதாகத் தாக்கியிருக்கிறார்கள்.

நாகை: வாயை மூடி கோயிலுக்குள்வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை! - விதவைக்கு நேர்ந்த கொடூரம்

அதேநேரத்தில், சுக்லா மொட்டைமாடியில் நடந்த முழுச் சம்பவத்தையும் கேமராவில் படமாக்கியிருக்கிறார். மேலும், `இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகாரளித்தால், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன்’ என்று ஆண் மாடலை மிரட்டியிருக்கிறார் சுக்லா.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
Representational Image

அதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர், தான் தங்கியிருந்த உறவினரின் வீட்டுக்கு வந்திருக்கிறார். குடும்பத்தினரிடம் அவர் முழுச் சம்பவத்தையும் விவரிக்கவே, அவர்கள் உதவியோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் குஜராத் ஆண் மாடல்.

குற்றம் சாட்டப்பட்ட சுக்லா மற்றும் அவருடைய நண்பர்கள்மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு., புனித் சுக்லா, 34 வயதான ரவி ஜெய்ஸ்வால், 23 வயதான அரவிந்த் பிரஜாபதி உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளில் மூன்று பேரை போலீசார் கைதுசெய்திருக்கிறார்கள். ஆண் ஒருவரை நான்கு ஆண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு