Published:Updated:

ஆன்லைன் கத்தி; தினமும் நோட்டம்! - தன்னை சிறைக்கு அனுப்பிய பெண்ணை கொடூரமாகப் பழிவாங்கிய இளைஞர்

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர், தன்னை சிறைக்கு அனுப்பிய பெண்ணை ஜாமீனில் வெளியில் வந்து கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிவக்குமார்
சிவக்குமார்

இந்தியா முழுவதும் கடந்த சில வருடங்களாகப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும், கொலை செய்யப்படும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. கத்துவா சிறுமி தொடங்கி சமீபத்தில் ஹைதராபாத் கால்நடை மருத்துவர் கொலை வரை அனைத்து விவகாரங்களும் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தாலும், இந்தக் குற்றங்கள் இன்னும் குறைந்தபாடில்லை.

வன்கொடுமை
வன்கொடுமை
மாதிரி புகைப்படம்

பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அல்லது கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோஷங்கள் நாடு முழுவதும் வலுத்து வருகின்றன. இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் வழங்கிய விவகாரம் பெரும் ஆபத்தாக மாறியுள்ள சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது.

`2 மணிநேர பழக்கம்; கைதான இளைஞர் -மெரினா கடற்கரையில் மாணவிக்கு நேர்ந்த கொடுமை

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான சிவக்குமார் என்பவர், கடந்த செப்டம்பர் மாதம் தன் பகுதியிலிருந்த 17 வயது பெண்ணை வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற விவகாரத்தில், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த இரண்டு மாதங்களாகச் சிறையிலிருந்த சிவகுமாருக்குக் கடந்த பத்து நாள்களுக்கு முன்பு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

சிறை
சிறை
மாதிரி புகைப்படம்

சிறையிலிருந்து வெளியில் வந்த அவர், தன்னை சிறைக்கு அனுப்பிய 17-வது பெண்ணை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இருந்துள்ளார். அதற்காக தான் வெளியில் வந்தவுடன் ஆன்லைனில் கத்தி ஆர்டர் செய்து தன்னுடன் வைத்திருந்துள்ளார். தினமும் அந்தப் பெண் வீட்டுக்கு அருகில் சென்று அவரது நடமாட்டத்தைக் கண்காணித்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் அதேபோன்று அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அருகில் நின்று நோட்டம் பார்த்துக்கொண்டிருந்த சிவக்குமார், பெண்ணின் பெற்றோர்கள் வெளியில் சென்ற அடுத்த நிமிடம் வீட்டுக்குள் நுழைந்து அங்கே தனியாக இருந்த பெண்ணை சரமாரியாகக் கத்தியால் குத்தியுள்ளார். சிவக்குமாரை பார்த்ததும் அந்தப் பெண் அலற, உடனடியாக வெளியில் விளையாடிக்கொண்டிருந்த பெண்ணின் சகோதரர் ஓடிவந்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

கொலை
கொலை
மாதிரி புகைப்படம்

பின்னர் அனைவரும் அந்தப் பெண்ணின் வீட்டில் கூடியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்ப முயன்ற சிவக்குமாரையும் பிடித்து உதைத்துள்ளனர். அதற்குள் சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் சிவக்குமாரை கைதுசெய்து, படுகாயமடைந்திருந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனை செல்வதற்குள் அந்தப் பெண் உயிரிழந்துள்ளார். அந்தப் பெண் மீது சுமார் 30 முறை குத்தப்பட்டதால் அதிக ரத்தம் வெளியேறி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி பேசியுள்ள காவலர்கள், ``இரண்டு மாதங்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி சிறை சென்ற சிவகுமார், தற்போது ஜாமீனில் வெளியில் வந்து தன்னை சிறைக்கு அனுப்பிய பெண்ணைக் கொலை செய்துள்ளார். தான் சிறைக்குச் சென்ற பிறகு அதற்குக் காரணமானவரை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்துள்ளார் சிவக்குமார். அந்தப் பெண்ணைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார், அதற்குள் பொதுமக்கள் வந்து அவரைப் பிடித்துள்ளனர்” எனக் கூறியுள்ளனர்.