Published:Updated:

குண்டு பல்புக்கு டாடா!

சபாஷ் தமிழகம்Follow - up

பிரீமியம் ஸ்டோரி
##~##

பாஷ் சொல்லும் அளவுக்கு ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளார் தமிழக முதல்வர்! 

மக்களை வாட்டி வதைக்கும் மின் வெட்டுப் பிரச்னைக்கு 'குண்டு பல்பை மாற்றினாலே தீர்வு கிடைக்கும்’ என்று, கடந்த 22.4.2012 ஜூ.வி. இதழில் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். நாம் சொன்னதுபோலவே, 'முதற்கட்டமாக, 85 கோடி ரூபாய் செலவில் ஒரு கோடி குண்டு பல்புகளை மாற்றி விட்டு, சி.எஃப்.எல். பல்புகள் பொருத்தப்படும். இதன்மூலம் 250 மெகா வாட் மிச்சமாகும்’ என்று, தமிழக அரசு அறிவித்து உள்ளது.

''இது, ஜூ.வி-யின் கட்டுரைக்குக் கிடைத்த வெற்றி'' என்கிறார் 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன். '' தமிழக அரசின் இந்த முடிவு, வரவேற்கப்பட வேண்டிய நல்ல தொடக்கம். இதை, மாநிலம் முழுக்கவும் விரிவுபடுத்த வேண்டும். திட்டத்தின் அடுத்த கட்டத்தைச் செயல்படுத்தும்போது, குண்டு பல்புக்குப் பதிலாக எல்.ஈ.டி. பல்புகளைப் பயன்படுத்த வேண்டும்.  முதலில் விவசாயம், சிமென்ட் தொழிற்சாலை உள்ளிட்ட மின்சாரத்துக்குப் பயன்படுத்தும் மோட்டார்களின் மின்திறனை அதிகப்படுத்த வேண்டும். இதன் மூலம் 25 சதவிகிதம் மின்சாரம் மிச்சமாகும். சர்க்கரை ஆலைகளில் சக்கையை எரித்து மின்சாரம் தயாரிப்பது குறித்தும் அரசு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது என்றாலும், அதைத் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும்.

குண்டு பல்புக்கு டாடா!

குஜராத்தில் ஆற்றுப் படுகையின் மேல் சூரியஒளி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு

குண்டு பல்புக்கு டாடா!

இருக்கிறது. இதையும் நாம் செயல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் 1,076 கிலோ மீட்டர் நீள கடற்கரை இருக்கிறது. இதன் நெடுகிலும் காற்றாலைகள் அமைப்பது சிறந்த பலன் தரும். இப்போது உள்ள காற்றாலைகளின் உற்பத்தித் திறன் இரண்டு மெகா வாட். இதுவே, கடற்கரையில் என்றால், ஆறு முதல் ஏழு மெகா வாட் வரையிலும் கிடைக்கும்.  ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனுக்கும் 15 முதல் 20 மெகா வாட் மின்சாரம் தேவை. இதை மிகஎளிய வழியில் அவர்களே தயாரித்துக் கொள்ள முடியும். காற்றாலை, சூரியசக்தி, பயோமாக்ஸ் (சீமைக் கருவேலம், ஜெட்ரோபா போன்றவற்றை எரித்து மின்சாரம் தயாரிப்பது) ஆகிய மூன்று வகைகளையும் ஒரே இடத்தில் அமைத்து, ஒவ்வொரு யூனியனுக்குமான மின்தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். பல்வேறு மாற்று முறைகளை ஒரே நேரத்தில் செயல்படுத்தினால் மட்டுமே, மின்வெட்டு இல்லாத தமிழகத்தை உருவாக்க முடியும்'' என்றவர் இன்னொரு விஷயத்தையும் சொன்னார்.

''அரசு 250 மெகா வாட் மின்சாரத்தை மிச்சப்படுத்து​வதால், 30 முதல் 40 லட்சம் கார்பன் கிரிடிட் (கார்பன் டை ஆக்ஸைடைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகான போனஸ் பாயின்ட்) கிடைக்கும். இதன் மூலம் அரசுக்கு சுமார் 150 கோடி ரூபாய் கிடைக்க வாய்ப்பு உண்டு. இதைப் பெறுவதற்கு தமிழக அரசு, 'கியூட்டோ புரோட்டாகால்’ படி விண்ணப்பிக்க வேண்டும்'' என்றும் நினைவூட்டினார்.  

- பாரதி தம்பி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு