Published:Updated:

தராக்கி!

ஈழப் பத்திரிகையாளனுக்கு ஒரு பதிவு

பிரீமியம் ஸ்டோரி
##~##

மிழ் ஈழத்தின் அறிவுக் கருவூலங்களில் ஒருவரான மறைந்த பத்திரி​கையாளர் தராக்கி சிவராம் பற்றி ஓர் ஆவணப்படம் வெளி​யாகி உள்ளது. 55 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படம், தராக்கி சிவராமைப் பற்றி மட்டும் அல்ல, தமிழ் ஈழம் முழுவதிலும் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்களைப் பற்றிய ஒரு சித்திரத்தை நம் கண்முன்னே வைக்கிறது. 

'இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்தவரான சிவராம், தொடக்​கத்தில் 'ப்ளாட்’ இயக்​கத்தில் போரா ளியாக இருந்தார். அதே இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவராக உயர்ந்தார். ஒரு கட்டத்தில், 'தராக்கி’ எனும் புனைப்பெயரில் இலங்கை ஆங்கிலப் பத்திரிகைகளில் கட் டுரைகளை எழுதத் தொடங்​கினார். படிப்படியாக, மிகச் சிறந்த அரசியல், ராணுவ ஆய்வாளராக மாறினார். இளம் பத்திரிகையாளர்களை ஊக்குவித்து வளர்ப்பதில் பெரும்ஆர்வம் காட்டினார். 2005-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி, கொழும்புவில் கடத்தப்பட்டு கொல்லப்படும் வரை, சாவை எதிர்நோக்கியபடியே செய்திப் பணியைத் தீவிரமாகச் செய்து வந்தார்’ என்கிறது, இந்தப் படம்.

தராக்கி!

'தராக்கி - ஒரு பத்திரிகையாளனின் பயணம்’ என்ற தலைப்பிலான இந்தப் படத்தை இயக்கியவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சோமிதரன். யாழ் நூலக எரிப்பு பற்றிய 'எரியும் நினைவுகள்’, ஈழப் போராட்ட வரலாறு சொல்லும், 'வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி’ ஆகிய ஆவணப் படங்களையும் எடுத்து உள்ளார். இவரது, 'முல்லைத்தீவு சாகா’ கேரள அரசின் சிறந்த ஆவணப் படத்துக்கான விருதைப் பெற்றுள்ள ஒரே தமிழ்ப் படம்.

நம்மிடம் பேசிய இயக்குநர்சோமிதரன், ''சிவராமின் வாழ்க்கை தமிழ்ப் பத்திரிகையாளர்​களுக்கு ஒரு நல்ல பாடம். அவர் படுகொலை செய்யப்பட்டு, ஏழு ஆண்டுகள் ஆகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை. சிவராம் உட்பட கடந்த 10 ஆண்டுகளில் 48 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டும், இந்தியாவில் பத்திரிகை ஜனநாயகம் பற்றிப் பேசு​பவர்கள் 'அர்த்தமான மௌனம்’ காக்கிறார்கள். இதைப்​பற்றி பெரும் பதிவைச் செய்ய வேண்டும் என்றாலும், முதல் தொடக்கமாக இந்தப் படத்தைச் செய்திருக்கிறேன்'' என்​கிறார் அடக்கமாக.

சிவராம் போன்ற பத்திரிகைப் போராளிகள் படு​கொலைக்கு எங்கே, யாரிடம் நீதி கேட்பது?

- இரா. தமிழ்க்கனல்

படம்:சொ.பாலசுப்பிரமணியம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு